நேற்று ஈரோட்டில் பதிவர்களின் சங்கமும், சென்னையில் சில பதிவர்களின் புத்தக வெளியீடுகளும் நடந்திருக்கின்றன. தமிழ்ப் பதிவுலகத்தின் நல்ல அடையாளங்களாகவும், ஆரோக்கியமான திசைகளைச் சொல்லுவதாகவும் இந்நிகழ்வுகள் இருந்திருக்கின்றன என்பதை நம் பதிவர்கள் சிலரது பதிவுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. வரவேற்கிறோம்.
தனித்தனியாகத் தீவுகள் போல பதிவர்கள் இருந்தாலும்- கருத்துக்கள் கொண்டு இருந்தாலும்- பொதுவான சில பார்வைகளோடு தமிழ்ப்பதிவுலகம் முன் நகர, இதுபோன்ற சந்தர்ப்பங்கள் உதவும் என நம்பிக்கை கொள்ள வைக்கிறது. ஈரோட்டின் சங்கமத்தில், அப்படிப்பட்ட நிகழ்ச்சி நிரலை வைத்து விவாதித்து, கலந்துரையாடல் நடத்தி, கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். சிறுகதைகள், குறும்படங்கள், உலகத்திரைப்படங்கள், ஆரோக்கியமான பதிவுலகம் என பேசப்பட்ட பொருள் எல்லாமே முக்கியமானவையாய் இருக்கின்றன. தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல், பரஸ்பரம் சினேகம் வளர்க்கும் விதமாக அமையப்பெற்ற இந்த முயற்சியில், நாம் கலந்துகொள்ளாமல் போய்விட்டோமே என ஏங்க வைக்கிறது. அரங்கம், உணவு என சிறப்பாக ஏற்பாடு செய்து, இனிய உபசரிப்பையும் தந்திருக்கிற ஈரோடு வலைப்பதிவாளர்கள் அனைவரையும் ‘மாற்று’ மனமாரப் பாராட்டுகிறது.
வருங்காலங்களில், அனைவருக்கும் பொதுவான- அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதற்கான அவசியங்களைக் கொண்டிருக்கிற - சுற்றுப்புறச் சூழல், புறக்கணிக்கப்படும் விவசாயம், மனிதநேயம், போன்ற தலைப்புகளை யோசித்து, அவைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தலாம் எனவும் தோன்றுகிறது. நம் வளர்ச்சியின் பாதையில் இவைகள் நம்மை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த உதவும் என நினைக்கிறோம். ‘எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பதை நம் சிந்தையில் செலுத்த இதுபோன்ற ‘சங்கமங்கள்’நிச்சயமாய் உதவும். பதிவுலகம் என்பது சாதாரணமானது அல்ல, பொதுக்கருத்தை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் முடிகிற ஒரு சக்தி என்பதை நினைவில் இருத்துவோம். அதை ‘சங்கமித்து’ நிரூபித்திருக்கிற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதேவேளையில் சென்னையில் வினவு, அகநாழிகை, நிலாரசிகன், யாத்ரா, நர்சிம் போன்றவர்களின் ஆக்கங்கள் புத்தகங்களாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. (எங்கள் பார்வையில் பட்டவை மட்டிலும் இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. மேலும் இருக்கலாம்). புத்தகங்கள் விளையும் பூமியாக பதிவுலகம் கருக்கொண்டு இருக்கிறது என்பது பூரிக்க வைக்கிறது. பெருமை கொள்வோம். படைப்பாளிகளுக்கு ‘மாற்று’ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நாம் வாழும் சமூகத்தை, ஒரு அங்குலமாவது முன் வைத்துப் பார்க்க நம் படைப்பாளிகள் சிந்திக்கட்டும்! எழுதட்டும்!
சங்கமம் குறித்தான பகிர்வுக்கு எங்களது நன்றிகள்.. இனிவரும் நிகழ்ச்சிகளில் தாங்கள் சொன்னதையும் கருத்தில் கொள்கிறோம்..
ReplyDeleteஇந்த நாளில் புத்தகம் வெளியிட்ட அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிவுலகின் இந்த வளர்ச்சி கவனிக்க வேண்டியது. தவிர்க்க இயலாதது. சில முக்கியப் பிரச்சனைகளில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டியதும் அவசியம். அப்படியான அழைப்பை விடுத்திருக்கும் மாற்றுவின் இந்தப் பதிவை மற்ற பதிவர்களும் வரவேற்பார்கள் என்றே நம்புகிறேன்.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteநன்றிங்க.....
ReplyDelete