இன்று நவம்பர் புரட்சி தினம்.
இந்த நாளில் ‘மாற்றம்’ வலைப்பக்கம் துவங்குவது அர்த்தபூர்வமானது.
கவிஞர் கந்தர்வன் 1992ல் எழுதிய கவிதையை நினைவு படுத்தி தொடர்வோம்....
புவனம் என்பது...
சூரியன் போல்
சந்திரன் போல்
நவம்பர் புரட்சியும்
உலகக் கதையில் ஓர்
உன்னத பாத்திரம்
புல்லும் பயிரும்
பூவும் சிரிப்பும்
உலகம் என்ற
உருண்டைப் பரப்பும்
நவம்பர் புரட்சி
நடந்திரா விட்டால்
மொகஞ்சாதாரோவாகி இருக்கும்
அதுவரை சொன்ன
தத்துவம் அனைத்தும்
வாதம் செய்யவும்
தியானம் செய்யவும்
உபதேசிக்கவும்
உகந்தவையாயின
கடவுள் தராததை
கற்பனை தராததை
நவம்பர் தந்தது
நாகரீகம் வந்தது
சோவியத் சிதைந்ததால்
சுவர்கள் உடைந்ததால்
தருமத்தின் தத்துவம்
தகர்ந்திட மாட்டாது
ஓட்டை விழுந்ததோர்
காரணத்தாலே
ஓசோன் வேண்டாமென்று
எவனோ சொல்வான்
காற்றில் கலப்படம்
வந்தது என்பதால்
காற்றையே வேண்டாமென்று
எவனோ சொல்வான்
தருமத்தை நிறுவுகையில்
தவறுகள் வருமென்றால்
தருமமே தவறாமோ
நவம்பர் புரட்சியில்
நடந்து வந்ததில்
அழுக்கு சேர்ந்தால்
அலுப்பு நேர்ந்தால்
டிசம்பரில் மறுபடி
நடப்பது தொடரும்
புவனம் என்பது
பொய் வீடல்ல
-------
நல்ல துவக்கம் தோழர் ... இப்படி இணைய தள கருத்துப் போராட்டத்தில் ஒரு போராளியாக இருந்து இளம் வயதில் புற்றுநோயால் தன் உயிரை ஈந்த தோழர் செல்வப்பெருமாளுக்கு செவ்வஞ்சலி செலுத்துவோம்.
ReplyDeleteநவம்பர் புரட்சியில்
ReplyDeleteநடந்து வந்ததில்
அழுக்கு சேர்ந்தால்
அலுப்பு நேர்ந்தால்
டிசம்பரில் மறுபடி
நடப்பது தொடரும்
புவனம் என்பது
பொய் வீடல்ல
.....
கந்தர்வனையும்..புரட்சியையும்..னினைவுபடுத்திவிடீர்கள். மிக நல்ல தேவையான முயற்சி..
நல்ல முயற்சி. தொடரட்டும்!
ReplyDeleteநல்முயற்சி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நமது நீண்ட நாள் கனவு நனவாகி உண்மையான இனையமாற்றமாக மலர்ந்து உள்ள மாற்றம் சிறப்பான முறையில் பயன்பட நாம் அனைவரும் இனைந்து நடத்துவோம் மாற்றத்தை
ReplyDeleteவாழ்த்தி வரவேற்ற தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி!
ReplyDeleteபுல்லும் பயிரும்
ReplyDeleteபூவும் சிரிப்பும்
உலகம் என்ற
உருண்டைப் பரப்பும்
நவம்பர் புரட்சி
நடந்திரா விட்டால்
மொகஞ்சாதாரோவாகி இருக்கும்