Tuesday, June 25, 2013

நாராயணா ...நீ ஏன்டா இஞ்சினியரிங் எடுத்த ?? - புதிய பரிதி

நான் ஒரு இஞ்சினியர் மாணவன்.  தேர்வில் பாஸ் ஆவதற்காக உப தலைப்பிட்டு , பாயின்ட் பை பாயின்டாக எழுதி அதற்கு முன் ஒரு புல்லட் குறியீடு இட்டு, சம்மந்தமே இல்லாத கருத்துக்களை அடிக்கோடிட்டு விடைகள் சரியானவை என்று திருத்துபவர்களை நம்பவைத்துப் பழக்கப்பட்டவன் என்பதால் இந்தக் கட்டுரையும் அதே வடிவத்தில் வந்துவிட்டது தயவுகூர்ந்து பொருத்தருளவும்.

இஞ்சினியரிங்க் படிப்பதற்கான காரணங்கள்:
இஞ்சினியரிங்க் படிப்பதற்கு பல்வேறு காரனங்கள் (காரணங்களுக்கு ரெண்டு சுழி ந வா இல்லை மூன்று சுழி ந வா எனத் தெரியாத காரனத்தால் ஒரு இடத்தில் ரெண்டு சுழியும் இன்னொரு இடத்தில் மூன்று சுழியும்பயன்படுத்தப்படுகிறது.) உள்ளன அவை யாவை எனில்
  •  "இஞ்சினியரிங்க் படிக்கவைங்க பய நல்லா வருவான்" ஒன்னறை லட்சம் இஞ்சினியரிங்க் அப்ளிகேசன் விற்க  இது போல யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ            ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதைப் போல பொறுப்பில்லாமல் அப்பாவின் காதில் போட்டுவிடுவதுதான் காரணம். 
  • "எங்க நாத்தனார் பையன் இஞ்சினியரிங்க் தான் படிச்சான் உடனே வேலை கிடைச்சிடுச்சு இப்ப காரு வீடுனு செழும்பா இருக்கான்" என்று அம்மாவை ஏத்திவிடும்  எதிர்வீட்டு ஆன்டிகளின் நாத்தனாரின் மகனுக்கு வயது 40 இருக்கும்.
  •  "என் பையன் கம்பியூட்டர்  இஞ்சினியர் உங்க பையனையும் கம்பியூட்டர் இஞ்சினியர் ஆக்கிட்டோம்னா அண்ணனே வேலை வாங்கி கொடுத்திருவான்" எனச் சொல்லும் பெரியப்பா சித்தப்பாக்களுக்குத் தெரியாது  தம்பி படிச்சு முடிக்கும் போது ரெசசன்ல (பொருளாதார நெருக்கடி) அண்ணனுக்கே வேலை போய்டும் என்று..
  • +2 லீவில் இருந்தே கேட் எக்சாம்,வின்டோ எக்சாம் போன்றவைகளுக்கு பயிற்சி எடுத்து இஞ்சினியரிங்க் முடித்து எம்.எஸ் பண்ண யு.எஸ் போகும் உயர்குடிப் பொதுமக்களும் இஞ்சினியரிங்க் வருகிறார்கள்.

  • கல்யாணப்பத்திரிக்கையில் பேருக்குப் பக்கத்தில் பி.இ என்று போட்டால் பெருமையாக இருக்கும் என்று எண்ணி வருடத்திற்கு இரண்டு இலட்சம் செலவு பண்ணி மேனேஜ்மென்ட் சீட்டில் சேரும் பண்ணையார் மகன்களும் தொழிலதிபர் மகள்களும் வந்து இருக்கிறார்கள். 

  • இது தவிர்த்து பாயின்ட் செவன் ஃபைவில் கட் ஆஃப் மார்க் மிஸ் ஆகி மருத்துவப்படிப்பைத் தவரவிட்டவர்களும் வருகிறார்கள்
"நீ ஏம்பா இஞ்சினியர் சேர்ந்த?" கல்லூரியின் முதல் வகுப்பில் கேட்ட ஆசிரியர்களுக்கு நான் சொன்ன பதில் "இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் மிடில்கிளாசில் இரண்டாவது தலைமுறையாக படிக்கவரும் ஒருவன் இஞ்சினியரிங்கை விட்டு வேறென்ன படிக்கமுடியும்"

இஞ்சினியரிங்க் படிப்பவர் என்னவாக முடியும்?

ஒவ்வொரு செமஸ்டரிலும் குறைந்தது மூன்று அரியர் வைத்துவிட்டு "அரியர் வைக்காத படிப்பு அரைப் படிப்பு" என்று மார் தட்டும் அறிவாளிகளைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை. மற்றவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

   1)இஞ்சினியரிங்கை தனது பேசனாக வைத்திருக்கும் , தனது பள்ளி நோட்டில் தனது பெயருக்குப் பக்கத்தில் இஞ்சினியர் என்றெழுதி பெருமிதம் அடையும் நபர்கள் முதல் வகையினர். இவர்கள் நிலைமை தான் மிகவும் பாவம். நன்றாய் படித்து  எயிட் பாயின்ட் ஃபைவ்  நைன் பாயின்டுகு மேல் சி.ஜி.பி.ஏ வைத்திருக்கும் இவர்கள் வேலைக்கு என்று போய் உட்கார்ந்தால் இதுவரை அவர்கள் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படித்திராத ஆப்டிடியூட் கேள்விகளை முதல் ரவுண்டில் பார்த்து,  கரண்ட்டு கம்பியில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கரண்ட் வந்தைப் போல ஷாக்காகி விடுவார்கள். 

பின்பு ஆறு மாதம் ஆப்டிடியூட் கோச்சிங்க் போய் முதல் ரவுண்டை கடந்து இரண்டாவது ரவுண்டான க்ரூப் டிஸ்கஸன் சுருக்கமாக ஜி.டி க்கு வருவார்கள். அதிகபட்சம் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால் (இல்லை என்றால் முதல் வருடமே வீட்டாவில் இங்கிலீஷ் கோர்ஸ் படித்து தெரிந்திருப்பார்கள்) எளிதாய்க் கடந்துவிடலாம் என்று வந்து உட்கார்ந்தால் அமெரிக்க பொருளாதர மந்தநிலைக்கு என்ன காரணம்? என்று கேட்பார்கள்.  ஃப்ரீ டைமில் லைப்ரேரி பக்கம் போனால் கூட விரட்டிவிடும் வாத்தியார்களிடம் படித்தவர்களுக்கு அது எப்படித் தெரியும்?. ஜி.டி.யில் பேசுவது எப்படி என்று ஒரு மாத க்ளாஸ் போய்விட்டு அந்த ரவுண்டையும் க்ளியர் பண்ணினால் டெக்னிகள் ரவுண்ட் என்று ஒன்று வைக்கப் படும் தத்திபுத்தி தெரிந்ததை எல்லாம் ப்ரொகிராம் என்று எழுதிவைத்து அந்த ரவுண்டைக் கடந்து போனால் டெக்னிகள் எச்.ஆர் "சர்டிஃபிகேட் கோர்ஸ் எதாவது முடிச்சிருக்கீங்களா?" என்று கேட்பார்.அதையும் மூன்று மாதத்தில் முக்கிப் முடித்துப் போகும் போது அடுத்த பேட்ச் ஸ்டுடன்டஸ் பாஸ் அவுட் ஆகி வந்திருப்பார்கள். 

முன் அனுபவங்களின் மூலம் எல்லா ரவுண்டையும் காலி பண்ணினால் ஃபைனல் எச்.ஆர் கேட்பாரு "கோர்ஸ் முடிஞ்ச ஒரு வருசமா ஏன் வேலை கிடைக்கல" ஆனால் இந்த வகையினருக்குகோவமே வராது. ஏனென்றால் எச்.ஆரிடம் கோவப்படக்கூடாது என்பதை எந்த கோர்ஸ் படித்தாலும் சொல்லித் தருவார்கள் அதற்கு ஒரு ஸ்மால் கதை ஒன்று சொல்வார்கள். ஒரு இன்டர்வியூவில் எச்.ஆர் கேட்டாராம் "உங்கள் அம்மா ஒரு ’ப்ராஸ்ட்டிட்யூட்’ என்று நான் சொன்னால் நீங்க என்ன சொல்விங்க?" அந்தப் பையன் சொன்னானாம் "ஆனால் எங்க அப்பா தான் ஒரே கஸ்டமர் என்று சொல்வேன்" .. அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது.

சில சமயம் படித்துக் கொண்டிருக்கும் போதே மேற்சொன்னவை எல்லாம் நடக்கும்.. மேற்கண்ட கோர்ஸ்களை கல்லூரி நிர்வாகமே ஒரு நிறுவனத்தைப் பிடித்து எக்ஸ்ற்றா க்ளாஸ் என்று சொல்லி எக்ஸ்ற்றாடினரி ஃபீஸ் புடுங்குவார்கள்.பிறகு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பசில் செலக்டாகி 'அப்பாடா' என்று உட்கார்ந்து தினத்தந்தியை எடுத்துப்படித்தால் "மூன்று வருடங்களுக்கு முன்பு கேம்பசில் செலக்டான மாணவர்களை இன்னும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாத்தால் கம்பேனி முன்பு போராட்டம் நடத்தினர் " என்று இருக்கும்.. "கடன் பட்டார் நெஞ்சம் போல்" என்பது எல்லாம் அவர்களது மனநிலைக்கு அருகில் கூட நிற்காது...

            2) இரண்டாம் வகையினர் தத்திதத்தி இஞ்சினியரிங்க் சேர்ந்துவிட்டோமே என பாஸ் ஆனவர்கள்.. ஆரம்பத்தில் வேலைக்காக அலைந்து முன்னவர்களோடு போட்டி போடமுடியாததால் பி.பி.ஓ வில் செட்டில் ஆகிவிடுவர் சிலர்.. சிலர் ப்ளேஸ்மென்ட் ட்ரெயினிங்க் சென்டரில் சேர்ந்து முதல் வகையினருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.. கொஞ்சம் காசு இருந்தால் எம்.இ சேர்ந்து அதை முடித்து இஞ்சினியரிங்க் கல்லூரியில் வாத்தியாராகி இந்த இரண்டு வகையினரை உருவாக்கிக் கொண்டிருப்பர்.

(எட்டு மார்க்குக்குத் தேவையான அளவு எழுதிவிட்டதால் கட்டுரை இத்துடன் முடிகிறது. போங்க போய் புள்ளக்குட்டிகளை இஞ்சினியரிங் படிக்க வைங்க) 

- புதிய பரிதி

7 comments:

  1. கல்லூரி நிர்வாகமே ஒரு நிறுவனத்தைப் பிடித்து எக்ஸ்ற்றா க்ளாஸ் என்று சொல்லி எக்ஸ்ற்றாடினரி ஃபீஸ் புடுங்குவார்கள்.பிறகு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பசில் செலக்டாகி 'அப்பாடா' என்று உட்கார்ந்து தினத்தந்தியை எடுத்துப்படித்தால் "மூன்று வருடங்களுக்கு முன்பு கேம்பசில் செலக்டான மாணவர்களை இன்னும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாத்தால் கம்பேனி முன்பு போராட்டம் நடத்தினர் " என்று இருக்கும்.. ///

    நகைச்சுவையாக இருந்தாலும். நடப்பு இதுதான் என்பது மனதை உலுக்குகிறது...

    ReplyDelete
  2. பரிதிக்கு வணக்கம்!கட்டூரை சூப்பர்,மகள் BE படிக்க முடிவுஎடுத்து விட்டாள்.வேலை கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்து விட்டது போல் தான் படிப்பு அறிவை வளர்ப் பதற்குத்தானே...

    ReplyDelete
  3. கல்யாணப்பத்திரிக்கையில் பேருக்குப் பக்கத்தில் பி.இ என்று போட்டால் பெருமையாக இருக்கும் itharkaave Be padikkum ennam irunthathu..aanl kadaisi varai mudiyavillai... :(

    கொஞ்சம் காசு இருந்தால் எம்.இ சேர்ந்து அதை முடித்து இஞ்சினியரிங்க் கல்லூரியில் வாத்தியாரா/// enathu nanban en senior oruvarum ithe pol வாத்தியாரா velai sekiraarkal.....

    By shahul m kasim

    ReplyDelete
  4. ஆரம்ப அசத்தல் குறைந்து ஒன்றுமில்லாமலானது வருத்தம் தான் எனினும், ரசனையான பதிவு.

    ReplyDelete
  5. very good parithi, saattayadiyoh

    ReplyDelete
  6. உண்மைய புட்டு புட்டு வச்சுட்டயேபா

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)