Monday, June 17, 2013

எழுத்தாளராக பரிணமிப்பதற்கான வழிகாட்டுதல் - 2 ச.தமிழ்ச்செல்வன்

முந்தைய பதிவு: எழுத்தாளராக பரிணமிப்பதற்கான வழிகாட்டுதல் - 1 ச.தமிழ்ச்செல்வன்

  “சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன.ஊடலாடுகின்றன.பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது”-இது லா.ச.ராமாமிருதம்.

”மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்” என்பதும் “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் சுட்டு ஆகலான்” என்பதும் தொகாப்பிய பொருளதிகாரம்.அதாவது மரபு வழிக் கூறவில்லை எனில் பொருள் வேறுபடும் என்பதும் உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே என்பதும் இதன் விளக்கம்.
எழுத்தாளர்: ச.தமிழ்ச்செல்வன்
மொழியில் விழுத்திணை(உயர்குடி வழக்கு) என்றும் இழிசனர் வழக்கு என்றும் இரண்டாக இருந்து வந்த்தும் பக்தி இயக்ககாலம் வரை இழிசனர் வழக்கு எழுதா எழுத்தாகவே இலக்கியத்தில் இடமின்றிட் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட்தும் நம் மொழிவரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.

மேற்சொன்ன எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து பார்க்கையில் ஒரு படைப்பின் மொழி என்பது அலங்காரமாகப் படைப்பில் நான் இருக்கிறேன் பார்த்தாயா இல்லையா என்று துருத்திக்கொண்டு நில்லாமல் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமானதாக வாசிப்புக்கு இடையூறாக நில்லாமல் அமைய வேண்டும்.ஈராயிரமாண்டுப் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மொழியின் செறிவான சொற்களையும் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றுத்தேறாமல் அன்றாடப்புழக்கத்தில் உள்ள தேய்ந்துபோன 

அலுமினியப்பாத்திரங்கள் போன்ற குறைவான சொல்வளத்தைக் கொண்டே நம் படைப்பாளிகள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சன-சுய விமர்சன-நோக்குடன் நாம் பார்க்க வேண்டும்.

இவ்வகையில் ரகுநாதன் –புதுமைப்பித்தன்- கு.அழகிரிசாமியின் பள்ளி (SCHOOL OF THOUGHT)மாணாக்கர்களாக நாம் இருப்பது நல்லது.க.நா.சு- மௌனி-சுந்தரராமசாமி என்கிற சொந்தப் பாரம்பரியமற்ற பள்ளி மட்டும் போதாது.மேனாட்டுக் கலைச்செல்வங்களுக்காக இவர்கள் பள்ளியில் நாம் அமர்வது அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இடைக்காலத்தில் பின் நவீனத்துவ வாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயன்ற சிலரின் சொல் விளையாட்டுக்களில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது.லா.ச.ராவின் பரிபாஷை என்பதை சரியான அளவில் சரியான கோணத்தில் உள்வாங்க வேண்டும்.நீண்ட காலம் செய்யுளிலும் சூத்திரத்திலும் மந்திரத்திலும் பரிபாஷையாக முடங்கிக்கிடந்த மொழியை நடமாட வைக்க ’வழங்கும் வசன நடை’ ஒன்று வரப் பலகாலம் ஆனதை மறந்து விடக்கூடாது.அதே சமயம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான பரிபாஷையாக உயிர்ப்புள்ள படைப்பு திகழமுடியும் என்பதையும் நாம் புரிந்து ஏற்க வேண்டும்.

மரபுகளை மீறாமல் புதியது பிறக்காது.மரபை முழுதாக அறியாமல் அதை மீறவும் முடியாது.மொழியிலும் சொல்புதிது வேண்டுமெனில் மரபுமீறல்கள் தவிர்க்க முடியாது.ஆனால் அதன் அவசியம் அதன் அளவு அதன் எல்லை குறித்த தன்னுணர்வு தேவை.

மக்கள் மொழியான நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் பண்டைய தமிழிலக்கிய மரபிலிருந்தும் நம் படைப்புக்கான மொழியைப் பெற வேண்டும்.நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பாடல்கள்,கதைப்பாடல்கள், விடுகதைகள்,சொலவடைகள்,பழமொழிகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நாம் வார்த்தைகளை உருவி எடுக்கப்பழக வேண்டும்.இடையறாத வாசிப்பின் மூலம் நம் மனதில் தேக்கி வைக்கும் சொற்சேகரத்திலிருந்து படைப்பு மனம் தேவையானவற்றை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும்.

கிள்ளிப்போட்டுக் கிட்ட நிக்கலாம்..அப்படி ஒரு இருட்டு..
அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லை உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லை.
சாமியே சைக்கிள்ளே போகுது பூசாரி புல்லட் கேட்கிறாரு
போன்றவையும் நமக்குத்தேவை.காமம் செப்பாது கண்டது மொழிமோவும் நமக்குத் தேவை.

புதுக்கவிதை பிறந்த காலத்தில் அதன் முக்கிய அம்சங்கள் பற்றிச் பேசிய க.நா.சு.,
“1. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்ப வேண்டும்.
2.முதலில் புரியாமலிருந்து படிக்கப் படிக்கப் புரியத்தொடங்குவதாக இருக்க வேண்டும்.
3.நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது திடுதிப்பென காரண காரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தரவேண்டும்.”என்றார்.

எழுத்தாளர் வாசகர் இருவருக்கும் பொதுவான அவரவர் மொழிக்கிடங்கிலிருந்துதான் பொது அர்த்தங்கள் கிடைக்கின்றன.கநாசு வின் பார்வை எப்போதும் முற்றிலும் ரசனை சார்ந்ததுதான்.ஆனால் இலக்கியத்துக்கு அது முக்கியம்.அது ஒரு முகம்.அவர் மேலே கூறும் அனுபவம் மொழியின் சாத்தியங்கள் சார்ந்த்து என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.முதலில் புரியாமல்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.

இந்த வரி மொழி சார்ந்த்தல்ல கவிதையின் உள்ளடக்கம்/அர்த்தம் சார்ந்த்து எனக்கொள்ளலாம். சொல்லாலே விளக்கத் தெரியலே அதைச் சொல்லாமலும் இருக்க முடியலே என்று பட்டுக்கோட்டையார் காதலுக்குச் சொன்னதை நாம் படைப்பு மொழிக்கும் பொருத்திப்பார்க்கலாம்.சொல்லிலிருந்து சொல்ல முடியாமைக்கும் சொல்ல முடியாததை உணரச்செய்வதற்குமாக நமது சொற்கள் நகரவேண்டியிருக்கிறது. ஜிப்ஸி சிறுகதையில் மக்சீம் கார்க்கி “ என் காதலை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.அந்த வயலினைக்கொண்டுவா.அதில் வாசித்துக்காட்டுகிறேன்” என்று எழுதியிருப்பார்.

மனக்குகை ஓவியங்களானாலும் எழுத்தாளன் அவற்றைத் தன் வார்த்தைகளால்தான் வரையவேண்டியிருக்கிறது.சொல்லைப் புதுப்பித்துப் புதுப்பித்து அதில் தன் உயிரையும் சக்தியையும் ஏற்றித் தீ என்று எழுதினால் தாளில் தீப்பிடிக்கும் நிலைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும். எனக்கு இப்படியான மொழிதான் கை வருகிறது நான் என்ன செய்யட்டும் என்று ஒரு நவீன படைப்பாளி சொல்ல முடியாது.பொதுவாக எழுதுபவர் எல்லோருமே ஒரு மத்தியதரவர்க்க மனோபாவத்தில் (பிறப்பால் அப்படி இல்லாவிட்டாலும்)தான் இயங்குகிறோம்.மொழி குறித்த மனத்தடைகளுக்கு இந்த வர்க்கநிலையும் ஒரு காரணம்.நம் தலைகளில் நீண்டகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மொழி குறித்த புனிதம்-தீட்டு என்கிற கருத்துக்கள் நாம் படைப்பில் ஈடுபடும்போது வந்து நின்று வழிமறிக்கின்றன.

மொழியைச் சுதந்திரமாகக் கையாளவே நாம் நம்மை  கீழ்வர்க்கப்படுத்திக்கொள்ளவும் அ-சாதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
மௌனி,நகுலன்,கோணங்கி,ரமேஷ்-பிரேதன் போன்றோரின் மொழி வாசகப்பங்கேற்புக்கு எந்த வாசலையும் திறந்து வைக்காமல் நகர்வதாகும்.நவீன கவிதைகள் இதுபோல அசாதாரணமான வடிவ இறுக்கம் ,மொழிச்சிக்கனம்,படிம அடர்த்தி,உள்நோக்கிய பார்வை கொண்டு இயங்கியாக வேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருப்பதை நாம் காண்கிறோம்.

முற்போக்குப் படைப்பாளிகளும் ஈழத்திலிருந்து வரும் படைப்புகளும் பெண் படைப்பாளிகளின் புதிய வரவும் தலித் எழுத்துக்களுமே இப்போக்கை சக்தியிழக்கச்செய்தன எனலாம். மொழியின் கட்டமைக்கப்பட்ட புனிதங்களை நவீன பெண் படைப்பாளிகள் தங்கள் ஆவேசமிக்க கவிதைகளால் உடைத்து நொறுக்கிவிட்டனர்-சில அதீதங்களும் இருந்தன என்றபோதும்.மொழியின் எல்லைகளையும் சாத்தியங்களையும் அவர்கள் விரிவாக்கமும் செய்துள்ளனர்.மிகசமீப காலமாக எழுத வந்துள்ள திருநங்கையரின் மொழி அவர்களின் ஈராயிரமாண்டுத் தனிமையையும் கேட்கப்படாத உடல்/மன வாதைகளையும் சுமக்க இயலாமல் திணறுவதைக் கான முடிகிறது.ப்ரியாபாபு அவர்களுக்கான பொதுமொழியில் பேசுகிறார் எனில் லிவிங் ஸ்மைல் வித்யா தனித்த வேதனையை மனச்சிதைவை கூர்மையான மொழியில் பேசுகிறார்.
புதிதாக எழுதத்துவங்கும் இளம் படைப்பாளி தலித்/பெண்/திருநங்கையர்/சிறுபான்மையினர் எழுத்துக்களைச் சுமக்கும் ’மொழிகளை’ வாசித்து உள்வாங்குவது அவசியம்.

இலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் ஆனதல்ல.மொழியின் ரூபத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளால் ஆனது என்பதை மட்டும் ஒருபோதும் நாம் மறந்துவிடலாகாது.

2.உத்தி
கதையின் முதல் வரி எப்படி அமைய வேண்டும்.முடிப்பு எப்படி இருக்க வேண்டும்.ஒரு நிகழ்வை எந்தக்கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வது.நான் பேசுவதாகவே அமைப்பதா அவன் அவள் என்று போவதா அல்லது ரமேஷ்,சுசீலா என்று கதாபாத்திரங்களுக்குப் பேர் வைத்து நகர்த்துவதா.அல்லது மாடு பேசுவதாகவோ புளியமரம் அல்லது குளத்தங்கரை அரசமரம் பேசுவதுபோலவோ கதையைச் சொல்லுவதா, நனவோடை உத்தியா முற்றிலும் உரையாடலாகவே கொண்டு செல்வதா ,யாராக இருந்து கதையைச் சொல்லுவது– இது போன்ற பல நூறு சின்னச் சின்ன நுட்பங்களையே நாம் உத்தி என்ற பேரால் குறிக்கிறோம்.

தான் சொல்ல வந்ததை வாசகனுக்குக் கடத்த நினைத்த உணர்வை சரியாகக் கொண்டுசெல்ல படைப்பாளி கையாளும் கலைத் தந்திரங்களே உத்தி எனப்படும்.
வேலையற்ற இளைஞனின் மனநிலை பற்றிய கரையும் உருவங்கள் என்கிற தன் கதையை வண்ணநிலவன் ”அவன் தலையைக் குனிந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்” என்று துவக்கியிருப்பார்.சக்கிலியர் சமூகத்தின் வாழ்வைச்சொல்ல வந்த பூமணியின் பிறகு நாவல் “ ஏலேய் சக்கிலியத்தாயிளி மாடு பாருடா படப்புல மேயிறத..” என்று துவங்கும்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தை லட்சியவெறி பிடித்த அகம்பாவமாகக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கைக்கொள்ளும் உத்தியும் மொழியும் நாம் கவனிக்கத்தக்கவை.ஒரு நாவலுக்குள்ளேயே சிறுகதைகள், நாடகம், கவிதைகள், கடிதங்கள், கட்டுரைகள்,நினைவுக்குறிப்புகள் என மொழியின் எல்லா வடிவங்களையும் கொண்டுவரும் உத்தி படைப்பாளிக்கு நிறையச் சுதந்திரத்தை வழங்குவதைக் காண்கிறோம்.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை ஒரு உத்தி எனில் ஜேஜே சில குறிப்புகள் முற்றிலும் வேறான ஒரு உத்தியில் எழுதப்பட்டுள்ளது.ஜேஜே என்னும் கற்பனைப் பாத்திரத்தை நிஜம்போலும் படைத்து ஒரு புதிய வழியை அவர் படைப்புலகுக்குத் திறந்து விட்டார்.சமீபத்திய வரவான கீரனூர் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா முற்றிலும் புதிய ஒரு உத்தியைக் கையாண்டுள்ளது.ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்துக்கதைகள் உலகமய காலத்தைப் படம் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட புதுவகை உத்தி எனக் கூறலாம்.கன்னட/மராட்டிய அனுபவங்களிலிருந்து உரம் பெற்று தமிழில் எழுதப்பட்ட கருக்கு,சிலுவைராஜ் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நாவல்கள் ஒரு புதுவகை உத்திதாம்.

இந்த உத்தி,வடிவம்,மொழி பற்றிய தன்னுணர்வு ஏதுமின்றிக் களங்கமில்லாத கிராமத்து மனதுடன் கதை சொன்ன கு.அழகிரிசாமி அந்தக் களங்கமற்ற படைப்பு மனதின் காரணமாகவே பல அற்புதமான படைப்புகளைத் தந்து நாம் மேலே பேசிய முறைமைகளுக்கெல்லாம் சவாலாக விளங்குகிறார்.நாட்டுப்புற மொழியுடன் ஒரு தத்துவப்பார்வையை இணைத்துப் படைத்த கிராஜநாராயணனும் இவ்வரிசையில் வைக்கத்தக்கவரே.

3.படைப்பு மனநிலை
எதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா? மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா? அதையே படைப்பு மனநிலை என்கிறோம்.ஒருமுறை தமுஎச அன்று நடத்திய நாவல் முகாமுக்கு வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனிடம் படைப்பு மனநிலை பற்றி நம் தோழர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ”அப்படின்னு தனியா ஒண்ணும் இல்லை.இதுதான் என் வெளிப்பாட்டு வடிவம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் தன் ஏற்பும் அழுத்தமான சமூக அக்கறையுமே படைப்பு மனநிலையாக வடிவெடுக்கும்”

அதெல்லாம் ஒரு இன்ஸ்டிங்க்ட்-ஒரு ஸ்பார்க்-எனச்சொல்லி உழைப்பால் வருவதல்ல படைப்பு மனநிலை என்று ஒதுக்கிச்செல்ல முயல்வார் உளர்.ஒரு துளிர்ப்பும் வெடிப்பும் படைப்புக்கு முக்கையம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஒரு ஸ்பார்க்- மின்னல்கீற்று மட்டுமே படைப்பாக முடியாது.படைப்பை அது தூண்டலாம்.நன்கு பண்படுத்தப்பட்ட நிலம்போலத் தன் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படைப்பாளியின் மனதில் இந்துத் துளி வீழும்போதுதான் படைப்பு கிளை பரப்பி விரிகிறது.

இந்தத் “தயார் நிலை” என்பது என்ன?

இடையறாத வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்னொருவர் நிலைபாட்டிலிருந்து தன்னையும் இந்த வாழ்வையும் பார்க்கும் மனப்பயிற்சியும் பிறர் வலிகளைத் தன் வலியாக உணரும் பண்பாடும்தான் இந்தத் தயார்நிலையாகும்.நான் யார் என்ற கேள்விக்கு மனித குல வரலாற்றின் நெடும்பாதையில் இன்று வாழ நேர்ந்த மனிதன் நான் எனப்பதிலுரைக்கும் மனமே இந்தத்தயார் நிலை.அறிவால் இவ்வுலகின் போக்கையும் பிரபஞ்ச இயக்கத்தையும் புரிந்துகொள்ளும் அறிவு மேதமையும் படைப்பாக்க உந்துதலும் இணையும் புள்ளிதான் இந்தத் தயார் நிலை.
பொதுவாக தமிழ்ப்படைப்பாளிகள் மத்தியில் அறிவுக்கு எதிரான ஒரு மனநிலை நீண்ட காலம் இருந்து வந்தது.இக்கதையை இவர் தன் மனதால் எழுதவில்லை.
மூளையால்  எழுதிவிட்டார் என்பது போன்ற விமர்சனக்குரல்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இந்த்ப்பார்வையின் பின் உள்ள அரசியல் எதுவெனில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வைச் சொல்லி விடாமல் முற்றிலும் ஒரு மத்திய தர வர்க்க மனோபாவமான உள்முகப்பயணம்தான் இலக்கியத்தின் அடிப்படை என்று நிறுவும் அரசியல்தான்.

இன்னொரு புறம் இலக்கியம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்கிற போக்கும் லட்சியவாதத்துக்கு எதிர்நிலையில் அறம் என்பதை வைத்து(இரண்டும் எதிரானவையா?) ஒருமுகப்பட்ட மனிதப்பயணம் சாத்தியமில்லை என்கிற போக்கும் வளர்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.சுந்தர்ராமசாமி அவர்கலின் ஒரு வாசகத்தையே இதற்குப் பதிலாகக் கூறலாம்:

“ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள்,தத்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்டதும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்வோம்.

வாழ்க்கை என்னும் பேராற்றிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான வடிவமான கதை,கவிதை,நாவல்,காவியம் என்னும் பாத்திரத்தில் துளி நீரை/ஒரு குவளை நீரை/ஒரு வாளி நீரை/ஒரு அண்டா நீரை வாசகருக்கு அள்ளி வருகிறான்.அந்தத் துளி நீரிலும்கூட –குவளை நீரிலும் கூட- அப்பேராற்றின் வரலாறும் வாசமும் ருசியும் தன்மையும் அறியத்தக்கதாக –உணரத்தக்கதாக-உட்கொள்ளத் தக்கதாக இருந்திட வேண்டும்.அதற்கு உதவும் விதமாக நீரைச் சேந்திக் கொண்டுவர உதவும் உருவும் உத்தியுமே நாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்பிக்கும்.

-ச.தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)