சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அதை காப்பாற்றுவதற்கு இந்திய நாட்டின் அரசாங்கமே முன்முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் கோடானகோடி இந்திய மக்கள் வரலாறு காணாத வாழ்வியல் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை காப்பாற்றுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதே அரசாங்கம், அவர்களை அனைத்துவிதத்திலும் அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறது. கோடிகளில் புரளும் பெரும் பணக்கார சீமான்களை வாழ வைப்பதற்காக ஏழை, எளிய மக்களை தெருக்கோடிகளுக்கு விரட்டுகிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
விஜய் மல்லையாவின் கதை சமீப நாட்களாக ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கிறது. அவரது கிங் பிஷர் விமான நிறுவனம் மிகப் பெரும் கடன் வலையில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய விமானிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய சம்பளம் கூட கொடுக்காததால் அவர்கள் வேலையைவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் விமானங்களை இயக்க முடியாமல் கிங் பிஷர் நிறுவனம் திணறிக் கொண்டிருக்கிறது. நிறுவனத்தை காப்பாற்ற அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் மல்லையா.
பிற போட்டி நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததாலும், ஒரு ஊதாரி செலவாளியான மல்லையாவுக்கு உதவவேண்டுமா என பொதுவாக கருத்து பரவியதாலும் சுதாரித்துக் கொண்ட மத்திய அரசு, மல்லையாவின் நிறுவனத்தை காப்பாற்ற அரசாங்கம் உதவாது என்று கைவிரித்துவிட்டது. மீசையில் மண் ஒட்டாத குறையாக, அரசாங்கம் உதவவேண்டியதில்லை, நாங்களே சமாளித்துக் கொள்வோம் என்று வீராப்பாக பேட்டியும் கொடுத்துவிட்டார் விஜய் மல்லையா. கிங் பிஷர் விமான நிறுவனம் நெருக்கடியில் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியானாலும், உண்மையில் அதன் உரிமையாளரான விஜய் மல்லையா தனிப்பட்ட முறையில் நெருக்கடியில் சிக்கவில்லை. அது எப்படி?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மல்லையா தனது தந்தைக்கு பிறகு 20 வது வயதிலேயே குடும்பத்தொழிலான சாராய வியாபார கம்பெனிக்கு பொறுப்பேற்றார். அப்போது இவர் வசம் ஒரேயொரு பிராந்தி உற்பத்திக் கம்பெனி, ஒரு மருந்துக் கம்பெனி மற்றும் ஒரு பேட்டரி உற்பத்தி நிறுவனம் ஆகியவையே இருந்தன. அப்போது கிடைத்த வருவாய் வெறும் 100 மில்லியன் டாலர் மட்டுமே. இன்றைக்கு இந்திய குடிகாரச் சந்தையில் 50 சதவீதத்தை கையில் வைத்திருக்கிறார் விஜய் மல்லையா. 2011ம் ஆண்டு கணக்குப்படி இவருடைய சொத்து மதிப்பு 22ஆயிரத்து 850 கோடி ரூபாய். யுபி ஹோல்டிங் லிமிடெட் எனப்படும் யுனைடெட் பிரேவரிஸ் நிறுவனம் என்பதை தலைமை நிறுவனமாக கொண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மங்களூர் கெமிக்கல்ஸ், யுபி இன்ஜினியரீங், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்பட ஏராளமான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.
தமிழ்நாட்டில் ஒளிப்பரப்பாகும் விஜய் டி.வி.யும் முன்பு இவர் வசம் இருந்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமல்ல, உலகின் பலபகுதிகளிலும் மிகமிக ஆடம்பரமான அரண்மனை போன்ற வீடுகள், ஹோட்டல்கள் என ஏராளமான சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் செயின்ட் மார்க்கரட்டே எனும் ஒரு தீவையே விலைக்கு வாங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பெங்களூரில் சுமார் 100 கோடி டாலர் செலவில், மும்பையில் முகேஷ் அம்பானி கட்டியிருப்பதுபோல, வானுயர்ந்த வீட்டை கட்டி முடித்திருக்கிறார் மல்லையா. 37 தளங்கள் கொண்ட இந்த அரண்மனையில் பல மா மன்னர்களின் அரண்மனைகளுக்கு இணையான வசதிகள், நவீன வடிவத்தோடு இடம் பெற்றிருக்கின்றன. மல்லையாவின் சொத்துக்களை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை ஒருபுறம் இருக்க, இந்தியாவின் நம்பர் ஒன் சாராய வியாபாரியாக இருக்கும் இவர், உலகின் நம்பர் ஒன் சாராய வியாபாரியாக மாறுவதை இலக்காக கொண்டு படுவேகமாக போய்க் கொண்டிருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு தனது தொழிலில் எதிரியாகயிருந்த ஷா வாலஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். உலகளவில் விஸ்கி குடிகாரர்களை தனது கையில் வைத்திருக்கும் ஒயிட் அன்டு மேக்கி நிறுவனத்தை 2007ம் ஆண்டில் வாங்கினார். இந்நிறுவனத்தின் மூலம், பிரான்ஸில் மதுபானத் துறையில் பெரும் நிறுவனங்களாக விளங்கும் கிலன் மோரே டிஸ்டிலரி மற்றும் மோயேட் ஹென்னிசி லூயிஸ் உயிட்டன் போன்ற பல நிறுவனங்களை விலைக்கு வாங்குவதற்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்காட்லாந்து நாட்டின் மிகப் பெரும் ஸ்காட்ச் விஸ்கி தயாரிப்பு நிறுவனமான ஜேபிபி கம்பெனியை வாங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அனைத்திற்கும் மேலாக இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் சாராய நிறுவனமாக இருக்கும் டியாகோ நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதற்கு இடையே 2005ம் ஆண்டில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை துவக்கினார். உள்நாட்டில் விமான போக்குவரத்தைநடத்திக் கொண்டிருந்த இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் முதல் உலக நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை துவக்கியது. இந்நிறுவனம் மட்டுமின்றி, சூதாட்டம் நிறைந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியினை விலைக்கு வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுத்தினார். மிக சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் மிகப் பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்ட பார்முலா 1 கார் பந்தயத்தை நடத்தியவரும் மல்லையாவே. இப்போட்டியை நடத்திய போர்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை 90 மில்லியன் யூரோ டாலர் கொடுத்து டச்சு நிறுவனமான ஸ்பைக்கர் டீமிடம் இருந்து வாங்கினார் மல்லையா.
"சாராயத்திற்கு உலகிலேயே மிகச் சிறந்த சந்தை இந்தியா தான் என்பது எனது அழுத்தமான நம்பிக்கை. எங்களது வழக்கமான தயாரிப்பான விஸ்கி மற்றும் பிராந்தியோடு வெளிநாட்டு மதுவகைகளான ஒயிட் ஸ்பிரிட் உள்ளிட்ட பல்வேறு பீர் வகைகளுக்கு இந்தியாவில் எப்போதும் உறுதியான சந்தை இருக்கும். சாராயத்தோடு பொழுதுபோக்கையும் இணைத்துக்கொண்டால் அது ஒரு அற்புதமான வாழ்க்கை. இந்த பொழுதுபோக்கு தொழிலை நான் மேலும் மேலும் விரிவுபடுத்துவேன். உலகம் முழுவதிலும் இந்தத் தொழிலை கொண்டு சென்றாலும், இந்தியாவே எனது பொழுதுபோக்கு தொழிலின் மையம் " என்று பகிரங்கமாக, எவ்வித கூச்சநாச்சமுமின்றி கூறுகிறார் மல்லையா.
நாட்டு மக்கள் குருவியாய் சேர்த்து வைத்திருக்கும் சேமிப்பு பணத்திலிருந்து இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த 1410 கோடி ரூபாய், ஐடிபிஐ வங்கி வழங்கிய 719 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய 702 கோடி ரூபாய்... இன்னும் பேங்க் ஆப் பரோடா, யுனைடெட் வங்கி, சென்டரல்பேங்க் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என பொதுத்துறை வங்கிகள் கோடிகோடியாக கடன் என்ற பெயரில் கொட்டிக் கொடுத்தப்பணம். மொத்தத்தில் அவர் ரூ.14 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கிறார்.
அனைத்தையும் சுருட்டி வெளிநாடுகளில் பெரும் சாராயக் கம்பெனிகளை வாங்கி குவித்துவிட்ட மல்லையா, கிங் பிஷர் நிறுவனத்தின் நட்டக் கணக்கை காட்டி வங்கிகளுக்கு நாமம் போடப் பார்க்கிறார். அவருக்கு எப்படியேனும் உதவிசெய்யும் விதமாக, வெளிநாட்டு மதுக்கம்பெனிகளுக்கு தாராள அனுமதி, வெளிநாட்டு மதுவகைகளுக்கு வரி ரத்து, அந்நிய விமான நிறுவனங்களுக்கு தாராள அனுமதி என அடுத்தடுத்து அதிரடி முடிவுகளை எடுத்து நாட்டுக்கே நாமம் போடப் பார்க்கிறார் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்.
-எஸ்.பி.ராஜேந்திரன்

0 comments:
Post a Comment