நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று, கறுப்புப்பணம் தொடர்பாக பாஜகவின் தலைவர் அத்வானியும், மார்க்சிஸ்ட் கட்சி மக்களவைக்குழுத் தலைவர்பாசுதேவ் ஆச்சார்யாவும் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அவற்றில் குலுக்கல் மூலம் அத்வானி கொண்டு வந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப் பட்டு, விவாதம் நடைபெற்றது. ஆனால், இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கும், விவாதங்களுக்கும் அத்வானியே காரணம் என்பதாக ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. அத்வானி பேசியதும், அதற்கு பிரணாப் முகர்ஜி பதிலளித்ததுமே விவாதங்களாக பேசப்படுகின்றன.
நாடு முழுவதும் கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக ரதயாத்திரை செய்த அத்வானி, அப்படியென்னதான் கருப்புப்பணம் சம்பந்தமாக பேசியிருக்கிறார் என்றால் காலிப் பெருங்காய டப்பாவாகத்தான் இருக்கிறது. அவரது வார்த்தைகளில் கேட்போம்:
அத்வானி:
இந்த வாதங்களின் மூலம், அத்வானி என்ன சொல்ல வருகிறார்? அதிகமான வரி விதிப்பதால் முதலாளிகள் கருப்புப்பணத்தை பதுக்குகிறார்கள் என்றால், இன்னும் வரியை குறைக்க வேண்டுமென்றுதானே அர்த்தம் வருகிறது. தானாகவே எம்.பிக்கள் மனமுவந்து தாங்கள் கருப்புப்பணம் வைத்திருக்கவில்லையென்றால் மக்கள் நம்பி விடுவார்களாம். இதைக் கண்டுபிடிக்கத்தான் நாடு முழுவதும் யாத்திரை போனார் போலிருக்கிறது.
இதற்கு பதிலளித்து லாவணி பாடுகிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதைக் கேட்போம்.
பிரணாப் முகர்ஜி:
இவ்வளவுதான். குரல் ஒட்டெடுப்பு நடத்தி அத்வானியின் ஒத்திவைப்புத் தீர்மானம் தோற்றுப் போனதாக அறிவிக்கப்பட்டு விட்டது. கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார் நிதியமைச்சர். இந்த இரு கட்சிகளும் எத்தனை அசிங்கமாகவும், அம்மணமாகவும் ஒரு நாடகத்தை மக்களவையில் அரங்கேற்றிவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினையை ஊத்தி மூடுவதில் கவனமாக இருக்கின்றன. அத்வானியும், பிரணாப் முகர்ஜி இருவருமே இந்த விவகாரத்தை விழுங்குகிறார்கள். ஊடகங்களும் பெரிதாய் இவைகளை காண்பித்து, இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. இந்த விவாதங்களின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய பாசுதேவ் ஆச்சார்யா சொல்வதை மக்கள் கேட்டுவிடக் கூடாது என இருட்டடிப்பு செய்கின்றன. ஏனென்றால் அதிகார வர்க்கத்துக்கு அந்த உண்மைகள் கசக்கும்.
பாசுதேவ் ஆச்சார்யா:
இந்தக் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் நிதியமைச்சரிடம் என்ன பதிலும் இருக்கப் போவதில்லை. ஆனால், கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்பதும், வெளியிட்டால் இதர நாடுகளோடு இருக்கும் உறவு பாதிக்கும் என்பதுமே அவரது ஒரே பதில். இந்த நாட்டின் செல்வம் சூறையாடப்பட்டாலும் பரவயில்லை, இந்த நாட்டு மக்கள் வறுமையில் வாடிச் செத்தாலும் பரவாயில்லை, அந்த இதர நாடுகளின் உறவு பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு உறுதியாயிருக்கிறது.திருடனைப் பிடித்தால் அந்த நாடுகளுக்கு ஏன் தேள் கொட்டுகிறது என்று தெரியவில்லை.
“பிக்பாக்கெட் போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிழைப்பு நடத்துவோரைப் படம் பிடித்து பொது இடங்களில் ‘இங்கே இவர்கள் இருக்கிறார்களா?’ என எச்சரிக்கும் அரசாங்கம், கோடிக்கணக்கில் கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட மறுப்பதேன். அவர்கள் யாரென்று தெரிந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என ஒருவர் பேஸ்புக்கில் ஆத்திரத்துடன் கேள்வி கேட்டிருக்கிறார். அது அவருடைய கேள்வி அல்ல, இந்த நாட்டு மக்களின் கேள்வி!

“கடந்த இரண்டு வருடமாக ஊழல் மற்றும் விலைவாசி குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இதற்கு முன்பு கருப்புப்பணம் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பது நினைவில் இல்லை.”
“அதிகமான வரி விதிக்கப்படுவதே கருப்புப் பணத்தை , அந்நிய வங்கிகளில் கொண்டு போய் வைப்பதற்கு காரணமாகிறது. வரியிலிருந்து தப்புவதே முக்கிய காரணம்.”
“நாம் கருப்புப்பணம் என்கிறோம். சர்வதேச வழக்கில் அது அழுக்குப் பணம் என்றே அழைக்கப்படுகிறது.”
“சுவீஸ் வங்கியில் மட்டும் 25 லட்சம் கோடி கருப்புப்பணம் இருப்பதாக சர்வதேச நிதி ஒருமைப்பாட்டு நிறுவனம் சொல்கிறது.”
“கருப்புப்பணத்தை மீட்டுக் கொண்டு வந்து, ஆறு லட்சம் கிராமங்களின் முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
“மூன்று எம்.பிகள் சுவீஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. எனக்கு அது பற்றி தெரியாது. மக்களவை சபாநாயகரிடம் அனைத்து எம்.பிக்களும், தங்களுக்கு அந்நிய வங்கிகளில் கருப்புப்பணம் இல்லையென ஒரு எழுத்துபூர்வமான உறுதிமொழி கொடுக்க வேண்டும். உண்மையிலேயே வெளிநாடுகளில் வணிகம் செய்து, வைத்திருக்கும் உரிய கணக்கு வழக்குகளுக்கு இந்த உறுதிமொழி தேவையில்லை. இதனால் எம்.பிக்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.”
“பிறகு விக்கிலீக்ஸ் அசாஞ்சே போன்றவர்களால், கருப்புப்பணம் குறித்த தகவல்கள் வெளிவருமானால் அது வெட்கக்கேடானது.”
“அந்நிய வங்கிகளில் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் நமக்குள்ளே இருப்பவ்ர்களாயிருந்தாலும், அவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
“அந்நிய வங்களில் கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் முழுப்பட்டியலையும் வெளியிடுவதாக மக்களுக்கு அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். கருப்புப்பணம் குறித்த உண்மைகளை இந்த அரசு மறைக்கவில்லை என இந்த அவையும், நாடும் நம்பகத்தன்மை கொண்டிருக்க வேண்டும்.”
இந்த வாதங்களின் மூலம், அத்வானி என்ன சொல்ல வருகிறார்? அதிகமான வரி விதிப்பதால் முதலாளிகள் கருப்புப்பணத்தை பதுக்குகிறார்கள் என்றால், இன்னும் வரியை குறைக்க வேண்டுமென்றுதானே அர்த்தம் வருகிறது. தானாகவே எம்.பிக்கள் மனமுவந்து தாங்கள் கருப்புப்பணம் வைத்திருக்கவில்லையென்றால் மக்கள் நம்பி விடுவார்களாம். இதைக் கண்டுபிடிக்கத்தான் நாடு முழுவதும் யாத்திரை போனார் போலிருக்கிறது.
இதற்கு பதிலளித்து லாவணி பாடுகிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதைக் கேட்போம்.
பிரணாப் முகர்ஜி:
“பலதரப்பட்ட வழிகளில், பலதரப்பட்ட புள்ளிவிபரங்கள் வருகின்றன. அவற்றை வைத்துக்கொண்டு ஒரு நிதியமைச்சராகிய நான் குத்துமதிப்பாகவெல்லாம் கறுப்புப்பணம் குறித்து புள்ளிவிபரங்களை வெளியிட முடியாது.”
“ஒரு நிதியமைச்சராக இருப்பதால், எனக்கு அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள் தேவைப்படுகிறது.”
“இதர நாடுகளோடு, நமது அரசு கருப்புப்பணம் குறித்து விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளது.”
“அத்வானியின் விளக்கம் சரியில்லை. நாம் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பெயரை வெளியிட்டால், அந்த குறிப்பிட்ட நாடுகளிலிருந்து மேற்கொண்டு தகவல்களை பரிமாறமாட்டார்கள். இப்படியொரு கருத்தை, இந்த நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் சொல்வது விந்தையானது.”
“இதற்கு முந்தைய என்.டி.ஏ அரசில் அத்வானி என்ன செய்து கொண்டு இருந்தாராம்?”
“கருப்புப் பணத்தை தேசீயச் சொத்தாக அறிவிக்க வேண்டும் எனவும், சுவீஸ் வங்கியில் இருக்கும் பணத்தைக் கைப்பற்ற வேண்டும் எனவும் சொல்கிறார்கள். எப்படி? ராணுவத்தை அனுப்பியா?”
“எனது கட்சி கருப்புப்பணம் வைத்திருப்போரை பாதுகாக்கவில்லை.”
“இந்த பிரச்சினையில் அவை பிரிந்து நிற்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?”
இவ்வளவுதான். குரல் ஒட்டெடுப்பு நடத்தி அத்வானியின் ஒத்திவைப்புத் தீர்மானம் தோற்றுப் போனதாக அறிவிக்கப்பட்டு விட்டது. கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார் நிதியமைச்சர். இந்த இரு கட்சிகளும் எத்தனை அசிங்கமாகவும், அம்மணமாகவும் ஒரு நாடகத்தை மக்களவையில் அரங்கேற்றிவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினையை ஊத்தி மூடுவதில் கவனமாக இருக்கின்றன. அத்வானியும், பிரணாப் முகர்ஜி இருவருமே இந்த விவகாரத்தை விழுங்குகிறார்கள். ஊடகங்களும் பெரிதாய் இவைகளை காண்பித்து, இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. இந்த விவாதங்களின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய பாசுதேவ் ஆச்சார்யா சொல்வதை மக்கள் கேட்டுவிடக் கூடாது என இருட்டடிப்பு செய்கின்றன. ஏனென்றால் அதிகார வர்க்கத்துக்கு அந்த உண்மைகள் கசக்கும்.
பாசுதேவ் ஆச்சார்யா:
“நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்படுவது 1991இல் தொடங்கப்பட்ட பின், நாட்டில் கறுப்புப் பணத்தின் அளவு 80 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துவிட்டது. 1991க்கு முன்பும் கறுப்புப்பணம் இருந்தது. கறுப்புப் பணம் உருவாகவும், அதன் அபரிமித வளர்ச்சிக்கும் காரணங்கள் என்ன? அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கும் அதற்கும் இடையே உள்ள தொடர்பு எப்படிப்பட்டது? நவீன தாராளமயக் கொள்கைதான் கறுப்புப்பணம் அதிகரிப்பதற்கான வாசலைத் திறந்துவிட்டது.”
“கறுப்புப்பணம் அதிகரிக்கக்கூடிய வகையில் நாட்டில் இருந்த சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட் டன. நவீன தாராளமயக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் என்ன செய்தன?”
“கறுப்புப்பணம் வைத் திருப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தாமாகவே முன்வந்து வெளிப்படுத்தும் திட்டத்தை (voluntary disclosure scheme) அறிவித்தது. அதன் மூலம் 30விழுக்காடு அரசாங்கத்திற்கு அளித்து விட்டு மீதமுள்ள கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றிக்கொள்ளலாம் என அரசே கூறியது.”
“நம் நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் பேர்வழிகளுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எதையும் அரசாங்கம் எடுத்திடவில்லை.”
“உலக நிதி ஒருங்கிணைப்பு (Global Financial Integrity) என் னும் அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்களில் பெரும்பகுதியினர் இந்தியர்களாவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு போடப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் 23,200 கோடி டாலர்களாகும். இன்று அதன் மதிப்பு என்பது 46,200 கோடி பில்லியன் டாலர்களாக(சுமார் 21 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது. அதாவது சுமார் 20 லட்சம் கோடிரூபாய்க்கும் அதிகம்”
“ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இவ்வாறு கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை அமெரிக்க அரசாங்கமும், ஐரோப்பிய நாடுகளும் கேட்டுப் பெறும்போது, ஏன் இந்திய அரசாங்கத்தால் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியவில்லை?”
“கறுப்புப் பணத்தின் அளவு என்பது அரசின் இரு ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகையை விட அதிகமாகும். மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை.”
“ஸ்விஸ் வங்கிகளிலும் பிற வெளிநாட்டு வங்கிகளிலும் பணம் போட்டு வைத்திருக்கும் நபர்களின் பட்டியலை இந்திய அரசு 2010 லேயே பெற்றுவிட்டது. ஒரு பட்டியலை அரசு உச்சநீதி மன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறது. அதனை இந்த அவைக்கு மட்டுமல்ல, இதன் மூலமாக நாட்டுக்கும் வெளிப்படுத்த முடியாமல் அரசைத் தடை செய்து வைத்திருப்பது எது?”
“ஒரு முக்கியமான விஷயம். நம் நாட்டில் தேர்தல் நடைபெறும் சமயங்களில் கறுப்புப்பணம் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல்களில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்திடக்கூடிய வகையில் தேர்தல் சீர்திருத் தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அரசே தேர்தல் செலவினங்களைச் செய்திட வேண்டும். தேர்தல்களின்போது கறுப்புப்பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட அரசு இதனை மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்திட வேண்டும்.”
இந்தக் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் நிதியமைச்சரிடம் என்ன பதிலும் இருக்கப் போவதில்லை. ஆனால், கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்பதும், வெளியிட்டால் இதர நாடுகளோடு இருக்கும் உறவு பாதிக்கும் என்பதுமே அவரது ஒரே பதில். இந்த நாட்டின் செல்வம் சூறையாடப்பட்டாலும் பரவயில்லை, இந்த நாட்டு மக்கள் வறுமையில் வாடிச் செத்தாலும் பரவாயில்லை, அந்த இதர நாடுகளின் உறவு பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு உறுதியாயிருக்கிறது.திருடனைப் பிடித்தால் அந்த நாடுகளுக்கு ஏன் தேள் கொட்டுகிறது என்று தெரியவில்லை.
“பிக்பாக்கெட் போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிழைப்பு நடத்துவோரைப் படம் பிடித்து பொது இடங்களில் ‘இங்கே இவர்கள் இருக்கிறார்களா?’ என எச்சரிக்கும் அரசாங்கம், கோடிக்கணக்கில் கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட மறுப்பதேன். அவர்கள் யாரென்று தெரிந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என ஒருவர் பேஸ்புக்கில் ஆத்திரத்துடன் கேள்வி கேட்டிருக்கிறார். அது அவருடைய கேள்வி அல்ல, இந்த நாட்டு மக்களின் கேள்வி!
அந்நிய நாடுகளில் கறுப்புபணம் வைத்திருப்பதில் பாதிப் பேர் நம் நாட்டின் அரசியல்வாதிகளும் (ராஜீவ், சரத்பவார், சிதம்பரம், மாறன் போன்றவர்கள்), அரசியலால் லாபம் அடைந்தவர்களும், கடத்தல்காரர்களும் (ஹாசன் அலி) தான். 2008 பொருளாதார சரிவுக்குப் பின் அமெரிக்கா தன் நாட்டு பணங்கள் அந்நிய வங்கிகளில் இருப்பதை திரும்ப பெற்றுக் கொள்ள வங்கிச்சட்டத்தையே மாற்ற வைத்தது. அத்வானி காலத்தில் அந்த சட்டம் வலிமையாய், முதலீட்டர்களுக்கு சார்பாய் இருந்தது என்ற உண்மையை, பிரணாப் தன்க்கு சாதகமாக ஆக்கி பொய்யுரைக்கிறார்.
ReplyDelete