குப்பனுக்கும் சுப்பனுக்கும் எதுவுமேத் தெரியாது என்பதே உலகத்தின் புரிதலாயிருக்கிறது. ஜனநாயகத்தை இவர்களே தீர்மானிப்பவர்கள் என்று இந்த ஜனநாயகமே சொல்லிவிட்டு உள்ளுக்குள் சிரிக்கிறது. ஆபத்தில்லாதவர்கள் என்றும் நுண்ணரசியல் தெரியாத அறிவற்றவர்கள் என்றும் கருதப்படுகிற இந்த முக்கியமற்றவர்களுக்கும் கண் இருக்கிறது. காது இருக்கிறது. வாயும், வயிறும் எல்லாமும் இருக்கின்றன. ஆனாலும் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.
தவறவிட்டுக் கொண்டிருக்கிற அந்தக் குப்பனையும், சுப்பனும்தான் நமது கதாநாயகர்கள். இனி நாட்டு நடப்புகளைப் பற்றி அவ்வப்போது இப்படி அவர்களின் கருத்துக்களைக் கேட்பது என ’மாற்று’ தீர்மானித்திருக்கிறது.
மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்க வந்திருந்த குப்பனிடம் வழிமறித்து கனிமொழி ஜாமீன் குறித்து கேட்டோம். தொடர்ந்த வந்த இருமல்களைப் பொருட்படுத்தியபடி பொறுமையின்றி சட்சடென்று பதில் தந்தார்.
“கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?”
“தில்லி திகார் சிறையினிலே திமிங்கிலங்கள் நடுவினிலேன்னு ஒரு பாட்டை கலைஞர் டிவியிலே மாத்தி மாத்தி கேக்கலாம் இனும.”
“கனிமொழியைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்?”
“திகார் ஜெயிலை விட மோசமா எங்க வீடும் வாழ்வும் இருக்குன்னு சொல்வேன். உண்மை இப்போதாவது உறைக்காதான்னு ஒரு நப்பாசைதான்.”
“இவ்வளவு தாமதமாக ஜாமீன் கிடைத்ததற்கு என்ன காரணம்?”
“இப்ப நாம பால்விலை, பஸ்கட்டனம், பெட்ரோல் விலை, உரவிலையப் பத்தி பேசுகிறோம். இவ்வளவு நாளா அந்த ஊழலைப் பத்தி நாங்க பேசிக்கிட்டு இருந்தோம். அதுதான்.”
“ஜாமீனில் விடுதலையான கனிமொழிக்கு திமுகவில் பதவி வழங்கப்படுமா?”
“குடும்பத்தில இதெல்லாம் சகஜமப்பா”
“ஜாமீனில் வெளியானதை வழக்கிலிருந்து வெளியானதற்கான முன்னோட்டம் என்று எடுத்துக் கொள்ளலாமா?”
“தயாநிதி, சிதம்பரம், டாடா, அம்பானி எல்லாரும் உள்ளே போக மாட்டாங்கங்கறதுக்கு முன்னோட்டமா எடுத்துக்கலாம்.”
“ராசாவை ஜாமீன் மனு தாக்கல் செய்யச் சொல்வார்களா?”
“பாவம். அவரு யாரு பெத்த புள்ளையோ?”
“சென்னை வரும் கனிமொழிக்கு வரவேற்பு பலமாக இருக்குமா?”
“ஆறு மாசம் தலைவரே காத்துகிடந்திருக்கார். ஒரு ஆறுமணிநேரம் ஜனங்க காத்துகிடக்கக் கூடாதா? மழையானாலும், வெயிலானாலும் கால் கடுக்க நிப்பாங்க. சும்மாவா?”
“கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தவுடன் ராஜாத்தி அம்மாள் மனநிலை எப்படி இருக்கும்?”
“பொன்குஞ்சு என்றாலும் தன் குஞ்சல்லவா.”
சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தார் குப்பன். பின்புறம் அவர் வேட்டி சட்டையெல்லாம் மழைச்சகதி பொட்டு பொட்டாய் தெறித்திருந்தன.

சூப்பரு... ஒண்ணு பண்ணுங்க...
ReplyDeleteகனி க்கு வாழை மின் வஜ்ஜிரமீன் .. அடசே ஜாமீன் ..சரி...எதுன ஒரு மீன் கிடைச்சது பற்றி கலைஞர், ஸ்டாலின், அழகிரி, தாயாநிதி .செயலாலிதா வைகோ.. மற்றும் பலரின் மனசாட்சியிடம்.. பேட்டிகண்டு வெளியிடுங்க..
http://mydreamonhome.blogspot.com/