சமச்சீர் கல்விக்காக தயாரிக்கப்பட்ட பாட நூல்களின் தரம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வு முகாம்களின் முடிவுகள்:
அனைத்து பாடங்களிலும் காணப்படும் பொதுவான ஆய்வுக் கணிப்பு
- கடந்த காலத்தில் இருந்த பாடப்புத்தகங்களைவிட தரமானதாகவும், மேம்பட்டதாகவும் (அனைத்து வகையிலும்) அமைந்துள்ளது.
- புத்தகத்தின் வடிவமைப்பு வண்ண மயமான அச்சிடல் எழுத்து அளவு, கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் மிகவும் சிறப்பு.
- ஆசிரியர் - மாணவர் இடையேயான உறவை மேம்படுத்துவதில் அதிக பங்கு
- குழு கற்றல் - கலந்துரையாடல் ஆகிய வைகளுக்கு வழி கோலுகின்ற வகையில் பாட அமைப்பு.
- மாணவர்களின் படைப்புத்திறன் சிந்தனை திறன் என பன் சமூகத்திறன்களை வளர்க்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
- கள செயல்பாடுகள் அமைந்துள்ளதும் சிறப்பு.
தமிழ்
- வாழ்த்துப்பாடல் - பொது வாழ்த்துப் பாடலாக அமைந்திருப்பது சிறப்பு
- இலக்கணப் பயிற்சிகள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி மிக எளிதான உரையாடல் வடிவமைப்பில் அமைந்திருப்பது சிறப்பு.
- மதிப்பீடு - மாணவர்களின் சுயமான சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது பழைய மதிப்பீட்டில்.
- தமிழின் தொண்மை, சிறப்பு, மரபு, வாழ்வியல் முதலியவற்றை எளிமையான வடிவில் கொடுத்திருப்பது சிறப்பு
- உரையாடல், கலந்துரையாடல், நேர்காணல், விவாதம், பட்டிமன்றம் போன்ற வடிவங்களில் பாடங்கள் அமைந்திருப்பது சிறப்பு.
- கடினப் பகுதிகளை / சொற்களை மாண வர்கள் தங்களுக்குள் உரையாடி தெளிவு பெறும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.
- ஒவ்வொரு இயல் (பகுதி) முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கைத்திறன், மொழித்திறன், மதிப்பீட்டுத்திறன், எதிர் காலத்திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் உள்ள பயிற்சிகள் மிகச் சிறப்பு.
- தமிழ் எழுத்து உச்சரிப்பு முறையை படத்துடன் தந்திருப்பது சிறப்பு.
- பாடப்புத்தகத்திலேயே பண்முகத் திறன்களை உள்ளடக்கிய துணைப்பாடம் அமைந்திருப்பது சிறப்பு.
- ஆசிரியர் - மாணவர் உரையாடல் பகுதி அமைந்துள்ளது சிறப்பு.
- 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பாடங்கள் தொடர்ச்சி உடையதாக அமைந்திருப்பது சிறப்பு.
- கையெழுத்து இதழ்கள் தயாரிப்பது போன்ற செயல்பாடகள் அமைந்திருப்பது மிகச் சிறப்பு.
- நுட்பத்தன்மையினை வெளிப்படுத்தும் வகையில் பழைய பாடப்புத்தகங்களைவிட மேம்பட்டுள்ளது.
- பாடநூல் முழுவதும் வண்ணப் படங்களுடன் சரியான கட்டமைப்புடன் சரியான அளவு எழுத்து வடிவிலும் - எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களின் மனம் கவரும் வகையிலும் அமைந்திருப்பது சிறப்பு.
ஆங்கிலம்
- கடின வார்த்தைகளுக்கு விளக்கம் அளித் திருப்பது சிறப்பு.
- பாடத்திற்கேற்ப வண்ணப் படங்கள் அளித் திருப்பது சிறப்பு.
- குழு விவாதத்திற்கு வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.
- Communication/Skill வளர்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
- Life Oriental Discussion அமைந்திருப்பது சிறப்பு.
- இலக்கணப் பகுதிகள் - அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
- LSRW அடிப்படையில் முழுமையாக மாண வர்களை சென்றடையும் வகையில் அமைந்துள்ளது.
- Note on the Teacher பகுதி மாணவர்களுக் கும், ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
- குழந்தைகளின் கவிதைகள், படைப்புகள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தகுந்த முயற்சி.
- தமிழ்நாட்டு மக்களின் பாரம்பரிய விளை யாட்டுகளும், திருவிழாக்களும் கொண்ட பாடப்பகுதிகள் அமைந்திருப்பது சிறப்பு.
- இலக்கணப் பகுதியில் Recall பகுதி சிறப்பு.
- மாணவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
- பாடத்தில் உள்ள வார்த்தைகளை குழந்தைகளின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு நினைவுக்கு கொண்டு வருவது சிறப்பு.
- Book Back Activities மிகச் சிறப்பாக உள்ளது.
கணிதம்
- வாழ்க்கைத் தொடர்புடைய கணிதப்பாடம் அமைந்திருப்பது சிறப்பு.
- கணித மேதைகளின் வாழ்க்கை வரலாறு அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு.
- வரையறைகள், முக்கியக் கருத்துக்கள் தனியாக கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.
- மாணவர்களை ஆர்வப்படுத்தும் வகையில் முயன்று பார் என்ற வகையில் கொடுத்திருப்பது சிறப்பு.
- மதிப்பீடு முறை மாணவர்களின் சிந்தனைத் திறன்களை வளர்க்கும் வகையிலும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல்
- குழு விவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருப்பது சிறப்பு.
- அறிவியலை எளிமையாக அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு.
- தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கு கொண்டு செல்வது சிறப்பு.
- மாணவர்களின் வயதிற்கேற்ற வகையிலும் மனநிலைக்கு தகுந்தாற்போலவும் வடி வமைக்கப்பட்டுள்ளது.
- தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள்/உண்மைகளோடு பாடத்திட்டம் அமைந்திருப் பது சிறப்பு.
- ஒவ்வொரு வகுப்பிலும், அடுத்த வகுப்பிற்கு தொடர்புடைய வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வரலாற்றுச் செய்திகளோடு அறிவியல் பாடம் அறிமுகப்படுத்துவது சிறப்பு.
- வண்ணப்படங்கள், பெட்டிச் செய்திகள் ஆகியவற்றோடு பாடங்கள் அமைந்திருப் பது சிறப்பு.
- களச் செயல்பாடுகளோடு அறிவியல் ஆய் வுகள் அமைந்திருப்பது சிறப்பு.
- மதிப்பீடு செயல்பாடுகள், குறிப்பாக வினாக்கள் மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
- அனைத்து வகையான குழந்தைகளும் பங்கேற்று செயல்படம் வகையில் பாடத் திட்டம் அமைந்துள்ளது.
- மன வரைபடம், கட்ட வரைபடம் வரைவ தற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது சிறப்பு.
- பசுமை விஞ்ஞானம், சூழ்நிலை அறிவியல் குறித்த பாடம் கிராமப்புற கண்ணோட்டத் தோடும், உழைப்பின் உன்னதத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் அமைந் துள்ளது.
- பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகை யிலும் பாடங்கள் அமைந்துள்ளது.
- சிந்தனைத்திறன், ஆக்கத்திறன் ஆகிய வைகளை வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது.
- ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் மேற்கோள் நூல்கள் (Reference Book) Web site address ஆகியவைகள் மாணவர்களின் சுய முயற்சிக்கு வழிவகுக்கும்.
சமூக அறிவியல்
- வாழ்க்கைத் தொடர்புடையதாக பாடத் திட்டம் அமைந்திருக்கிறது.
- பாடத்திற்கான இணை செயல்கள் தொகுத்து கொடுத்திருப்பது சிறப்பு.
- மீள்பார்வை பகுதி சிறப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
- பாடத்திட்டம் வாழ்க்கை தொடர்புடைய தாகவும், வயதிற்கேற்ற வகையிலும் அமைந்திருக்கிறது.
- படவிளக்கம், அட்டவணை விளக்கம் சிறப்பாக உள்ளது.
- மாணவர்கள் எதிர்காலத்திற்கு தேவை யான தொழில், மனித உரிமைச் சட்டம், தகவல் தொடர்பு, மக்கள் தொகை, புகார் அளிக்கும் முறை ஆகியவைகள் கொடுக்கப் பட்டிருப்பது சிறப்பு.
- தெரிந்துகொள் பகுதி - சிறப்பு.
- சமூக விழிப்புணர்வை உருவாக்கக் கூடிய பகுதிகளாக குழந்தை தொழிலாளர், திருநங்கைகள், நுகர்வோர் குறித்த பகுதிகள் அமைந்திருப்பது சிறப்பு.
- இதுவரை இல்லாத பகுதிகளாக பொரு ளாதாரம், சமகாலத்துவ செய்திகள் அமைந்திருப்பது சிறப்பு.
- புத்தகத்தின் தரமும், நடையும் சிறப்பாக அமைந்துள்ளது.
எல்லாமே சிறப்பு என்கின்ற அறிக்கை, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிச்சயம் மகிழ்வினைத் தரும்! இனியும் காலதாமதம் இன்றி அரசு ஆவன செய்ய வேண்டும்.
ReplyDeleteஅம்மா,உங்க பிடிவாதத்த விட்டுட்டு தமிழக மாணவர்களை கொஞ்சம் காப்பாத்துங்க.
ReplyDeleteஅம்மா,உங்க பிடிவாதத்த விட்டுட்டு தமிழக மாணவர்களை கொஞ்சம் காப்பாத்துங்க.
ReplyDelete