Friday, February 18, 2011

தலை குப்புற விழுவதை பறப்பதாக கற்பிக்க முடியுமா? (விலையேற்றம் தொடர் - 4)




முந்தைய பகுதிகள்: 1, 3

     விலை ஏற்றத்திற்கு இதுவரை கூறிய காரணங்களுக்கு சமமான அளவில், அதைவிட கூடுதலாகவே முன்பேர ஊக வாணிப முறை பங்கு செலுத்தியுள்ளது. இந்தியா உட்பட வளரும் நாடுகள் நிதிக் கட்டுப்பாட்டை அகற்றியதும், புதிய நிதியாளர்களை சரக்கு பரிமாற்றத்தில் அனுமதித்ததும், முன்பேர ஊக வாணிபத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சந்தை என்பது உற்பத்தியாளர்- நுகர்வோர் பேரம் பேசும் இடம் என்ற நிலைமாறி வர்த்தக சூதாடிகளும், நிதிநிறுவனங்களும் குறுகியகாலத்தில்  கொள்ளை லாபத்தை ஈட்டும் இடமாக மாறியது. 

   2007ம் ஆண்டு ரியல் எஸ்டேட் என்ற தொழில் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வீட்டு அடமானமுறை திவாலாகியது. இதனால் நிதி முதலீடு செய்பவர்களும் தரகர்களும் தங்களது நிதி மூலதனத்தை சரக்கு வர்த்தகத்தை நோக்கி அதாவது உணவுதானியங் களை நோக்கி திருப்பிட்டனர். இதனால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்தியாவில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜீன் 30 வரை மட்டும் முன்பேர ஊக வணிகம் 11,15,326.99 கோடி அளவிற்கு நடைபெற்றது. 2009ம் ஆண்டு இதே காலத்தில் 15, 64, 114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது.  சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4, 48, 787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர். 

     2007ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரையை தற்காலிகமாக இந்திய அரசு தடைசெய்தபோது இப்பொருட்களின்விலை 20 சதவீதம் குறைந்தது நினைவிருக்கலாம். இந்த விலையேற்றத்தின் விளைவாக வால்ஸ்ட்ரீட் 130 பில்லியன் டாலரை கூடுதலாக முன்பேர ஊக வாணிபத்தில் முதலீடு செய்துள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மதிப்பீடு செய்துள்ளது .  மற்றொரு அதிர்ச்சிதரும் தகவல், தற்போது உலக கோதுமைச் சந்தையில் இந்த முன்பேர ஊக வணிகர்கள் 50 முதல் 60 சதம் வரை கோதுமைக்கு முன்பணம் செலுத்தியுள்ளனர்.

     உணவு பொருட்களின் வர்த்தகத்தில்,  பட்டியல் நிதி, பட்டியல் வியாபாரிகள் என்ற புதிய வர்த்தக கும்பல் உருவாகி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் அடித்திடவும், விலையை ஏற்றிடவும் காரணமாக உள்ளது. தேசிய உணவு சேமிப்பு பல நாடுகளில் தனியார்மயமாகி பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு விவசாயிகள் நலன் மற்றும் நுகர்வோர் நலனைவிட முன்பேர ஊகவாணிபமே முன்னுரிமையாக உள்ளது.

சைவமா ? அசைவமா?

  உணவு நெருக்கடிக்கும், விலை ஏற்றத்திற்கும் இறைச்சி உணவை சாப்பிடுவது கூடுதலாகி உள்ளது ஒரு காரணம் என்று கூறுப்படுகிறது. எனவே, மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று பொதுவாக போதிக்கப்படுகிறது. ஆனால் இறைச்சி உணவு தேவை இரட்டிப்பாகியுள்ளது உண்மைதான். இதிலும் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிப்பது அவசியமாகும்.

         முதலில், உணவு தானியங்களுக்கும், இறைச்சி உணவுக்கும் இடையேயான எரிசக்தி சமன்பாடுகளை பொருளாதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் எடுத்துக்கூறியுள்ளார். ஒரு கிலோ கோழிக்கறிக்கு இரண்டு கிலோ உணவு தானியங்கள் தேவைப்படுகிறது. கோழிக்கறியிலிருந்து கிடைக்கும் கலோரி 1090-ம் புரதசத்து 250 கிராமும் ஆகும். இதற்காக உணவு தானியங்கள் மூலம் செலவாகும் கலோரி 6900ம் மற்றும் புரதசத்து 200 கிராம் ஆகும். இதே போன்று ஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு ஏழு கிலோ உணவு தானியங்கள் மூலமாக 24150 கலோரியும்,  700 கிராம் புரதசத்தும் செலவழிக்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் கலோரி 1140-ம் , 226 கிராம் புரதசத்தும்தான். 
     
    ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு மூன்று கிலோ உணவு தானியங்கள் மூலமாக 10350 கலோரியும், 300 கிராம் புரதசத்தும் செலவழித்து , 1180 கலோரியும், 187 கிராம் புரதசத்தும் பெறப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு சராசரி 1046  கிலோ உணவு தானியம் கிடைக்கிறது. ஐரோப்பாவில் 552 கிலோவும், சீனாவில் 291 கிலோவும், இந்தியாவில் 155 கிலோவும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. பரம ஏழைநாடுகளில்  இது 130 கிலோ மட்டுமே.

     அமெரிக்கர் ஒருவர் வருடத்திற்கு ஒரு டன் உணவு  தானியத்தை உண்ண முடியுமா? முடியாது. அங்கு நேரடி நுகர்வைவிடமறைமுக நுகர்வான இறைச்சி உண்பதுதான் அதிகம். அங்கு 5ல் 4 பங்கு மறைமுக நுகர்வாக உள்ளது. இன்றைக்கும் உலகில் அதிகமான அளவு உணவுதானியங்கள் நுகர்வது அமெரிக்காதான். 16 சதவீதம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட வளர்ந்த நாடுகள் உலகின் 40 சதவீத உணவு தானியங்களை எடுத்துக்கொள்கின்றன. பிரேசில் அல்லது அமெரிக்காவில் அரைபவுன்ட் மாட்டிறைச்சி பர்ஜெருக்கு  ஈடாக உண்பதை, அதற்காக செலவாகும் தானியத்தை இந்தியாவில் தினசரி மூன்றுபேர்களுக்கு போதிய எரிசக்தியும் புரதசத்தும் பெறும் வகையில் உண்ணலாம்.

    எனவே வளர்ந்த நாடுகளின் இறைச்சி உணவிற்காக கூடுதலான தானியங்கள் செலவாகிறது. அங்கும் பெரும் அளவில் இறைச்சி தொழிற்சாலைகளும், அதற்கான கால்நடை பண்ணைகளும் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு உணவு தானியங்களே உணவாக கொடுக்கின்றனர். 

       இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் இறைச்சி சாப்பிடுவதில்லையா என்ற கேள்வி எழலாம், உண்மைதான் இங்கு இறைச்சி உணவு உற்பத்திக்கு உணவுதானியங்களை சார்ந்திருப்பது மிக மிக குறைவாகும்.அதற்கு மாறாக இயற்கை புல்வெளிகளைத்தான் அதிகம் சார்ந்து உள்ளனர். கணிசமான இறைச்சி உணவு வேட்டையாடுதலை சார்ந்து உள்ளது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகள் நவீன இறைச்சி உற்பத்திமுறையை சார்ந்து இல்லை. அதற்கு மாறாக ஆதிவாசிகள் உட்பட காடுகளில் விலங்குகளையும், பறவைகளையும், மீன்பிடித் தொழில் மூலமாகவும் கூடுதலான இறைச்சி உணவை பெறுகின்றனர்.

         எனவே இங்கு இறைச்சிக்கான உணவு தானியங்கள்செலவிடுவது மிகமிக குறைவே என்று பட்நாயக் தெளிவுபடுத்தியுள்ளார்.

     இந்த உணவு நெருக்கடியும், விலையேற்றமும், சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளையும் பாதிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் இக்காலத்தில் 200 சதம் விலை உயர்ந்தபோது சீனாவில் கடந்த ஆண்டைவிட குறைவாக கட்டுப்படுத்திவைத்துள்ளனர். தென்கொரியா தனது உணவு சேமிப்பை  சந்தைக்கு திறந்துவிட்டு விலை உயர்வை குறைத்தது. ஜப்பானும் இதே நடவடிக்கையில் இறங்கி தனது நாட்டின் விலை உயர்வை தடுத்தது. இதர ஆசியநாடுகளில் சாத்தியமில்லாமல் போனது இவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? 

      ஒன்று அவர்கள் தங்களது தேவைக்கு, தன்னிறைவான உணவு உற்பத்தியை வைத்துள்ளனர்,  இரண்டு உள்நாட்டு உற்பத்தியை முதலில் உள்நாட்டு சேமிப்புக்கு பயன்படுத்தினர், மூன்று இதனால் அவர்கள் சர்வதேச வணிக ஒப்பந்தங்களில் கவனமாக செயல்பட்டு தங்கள் நலனை பாதுகாத்துக் கொண்டனர். ஜப்பானில் அரிசியை ஒரு சரக்காக பார்க்காமல் ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்துள்ளனர்.

      எனவே, இன்றைய உணவு நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும், விவசாய நிலம் குறைந்து வருவது, வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம் போன்றவற்றின்  மீது பழிபோட்டு, பட்டினிச்சாவை நியாயப்படுத்துவது நேர்மையற்ற வாதமாகும். இதற்கு பின்னால் வளர்ந்த நாடுகளின் ஏகபோக நிறுவனங்களின் நலன்களும், கொள்ளை லாப கொள்கைகளும் அடங்கியுள்ளன. இவைகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உணவு நெருக்கடிகளும், விலை ஏற்றத்திற்கும் பிரதான காரணமாகும். மற்றவை நீண்டகால திட்டத்தில் தீர்வு காணப்படக்கூடிய பிரச்சனைகள். இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் உணவுப்பிரச்சனை முக்கியத்துவம் பெறுகின்றது.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)