Tuesday, January 25, 2011

கர்த்தரே பொதுக்கல்லறையில் தலித் சடலத்தை புதைக்கும் பாவிகளை கொன்றுபோடும்



பொது கல்லறைத் தோட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்தவரை அடக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சடலத்தை புதைக்க குழிவெட்டியவரை படுகொலை செய்த கொடூரம் நிகழ்ந் துள்ளது. மதுராந்தகம் அருகே நடந்த இந்தக் கொடுமைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றிய விபரம் வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தச்சூர் கிராமத்தில் தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. தெலுங்கு ரெட்டியார்களும், தலித் கிறிஸ்தவர்களும் வழிபாடு நடத்தி வருகிற இத்தேவாலயத்தில், தலித் கிறிஸ்தவர்கள் மையப் பகுதியில் அமரக் கூடாது. சுவர் ஓரமாகத் தான் அமர்ந்து வழிபட முடியும்.

வழிபாட்டில் சம உரிமை கோரியதற்காக தேவாலயம் 12 வருடங்கள் பூட்டப்பட்டிருந்தது. தேவாலயம் பூட்டப்பட்டதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் தரப்பில் நீதிமன்ற உத்தரவு பெற்றுத்தான் தேவாலயம் திறக்கப்பட்டது. இவ்வழக்கில் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவ னர் அருட்பணி எல்.ஏசுமரியான் வழக்கறிஞராக செயல்பட்டார்.

தேவாலயம் திறக்கப்பட்ட பின்பும் ரெட்டியார்கள் தங்களுக்கு தெலுங்கில் வழிபாடு வேண்டும் எனக் கோரி தனியாக தெலுங்கில் வழிபாடு நடத்தி சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தையொட்டியே கல்லறைத் தோட்டமும் உள்ளது. இக் கல் லறையிலும் இதுவரை தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய முடியாது. இறந்துபோன தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்திட இது வரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதி ஆதிக் கக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது.

இச்சூழ்நிலையில் தலித் இளைஞர் வேளாங்கண்ணி (38) என்பவர் ஜனவரி 22ம்தேதி மரணமடைந்தார். இவர் இதே திருச்சபையில் பங்குத் தந்தையாக உள்ள அருட்பணி ஜான் என்பவரின் சகோதரர். தனது சகோதரனின் மரணத்தோடு கல்லறைத் தோட்டத்தில் உள்ள சாதி பாரபட் சத்தை முடிவுக்கு கொண்டு வர அருட்பணி ஜான் முயற்சி செய்தார். தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்திடும் முயற்சிக்கு ஆதிக்கச் சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதி நிகழ்ச்சியில் மறை மாவட்ட பேராயர் நீதிநாதன், மறை மாவட்ட துணைவேந்தர் லூயிஷ் ராயர், முதன்மை குரு அம்புரோஸ் ஆகியோர் பங்கேற்று பொது மயா னத்தில் அடக்கம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். திருச் சபையின் பேராயர் நேரடியாக இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஆதிக் கச் சக்தியினர் அசை யவில்லை. மாறாக சம் பந்தப்பட்ட தேவாலயத்தின் குரு லூர்து சாமியை தாக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி ஜான் சுரேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நிர்வாகிகள் பிற்பகல் 3.30 மணிக்கு வேளாங்கண்ணியின் உடலை அடக்கம் செய்தனர். ஆத்திரமுற்ற ஆதிக்க சக்தியினர் கல்லறை கேட்டை இழுத்துப்பூட்டினர். காவல்துறை வந்து கதவை திறந்த பிறகே வெளிவர முடிந்தது. இந்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என ஜி.லதா எம்எல்ஏ, ப.பாரதி அண்ணா, ஜீவா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்று இரவு 8.30 மணி அளவில் நேரடியாக புகார் செய்தனர்.

அப்படி இருந்தும் வேளாங் கண்ணி சடலத்தை புதைப்பதற்கு குழிவெட்டிய தலித் இராஜேந்திரன் (40) ஆதிக்க சமூகத்தினரால் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்ப வில்லை. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் ஜனவரி 23 ஞாயிறன்று செய்யூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. இந்நிலையில் கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியில் ஜனவரி 24 திங் களன்று அதிகாலையில் இராஜேந் திரன் பிணமாக மிதந்தார். கல்லறை யின் வழக்கமான ஊழியர் குழி தோண்ட மறுத்தநிலையில் இராஜேந் திரன் முன்வந்ததால் ஆத்திரமுற்று இப்படுகொலை நடந்துள்ளது. இப் படுகொலை தொடர்பாக இருதயராஜ் ரெட்டியார், சாந்தையா ரெட்டியார், ரெக்ஸ், ஜான் பிரிட்டோ ஆண்ட்ரூ ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். கொடூரமான இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்படுகொலைக்கு காரணமான ஆதிக்க சக்தியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். ராஜேந்திரன் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய நிவாரணத்தோடு, தமிழக அரசும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்

4 comments:

  1. இந்து மதத்தின் ஈனத் தனமான வழக்கமாகிய சாதி, மத மாற்றத்தால் மறையாது; அதன் ஆணிவேர் நிலவுடைமைச் சமூகத்தில் ஆழப் புதைந்திருக்கிறது; சாதிக் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்போரின் எழுச்சியும், அவர்களுக்கு சமூகத்தின் பிற ஜனநாய சக்திகளின் ஆதரவும்தான் அதற்குச் சாவு மணி அடிக்கும்; தமிழகத்தில் தொடர்ந்திடும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இங்குள்ள திராவிட, தலித் அரசியல் வாதிகளின் அயோக்கியத் தனமான கூட்டை அம்பலப்படுத்தி வருகின்றன! சாதிப் பிணிக்குச் சரியான மருத்துவராகக் களமிறங்கியிருக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியையும், அதற்குப் பக்க பலமாக இதர பகுதி ஜனநாயக சக்திகளைத் திரட்டிடும் மார்க்சிஸ்டுகளையும் மனதாரப் பாராட்டுவோம்!

    ReplyDelete
  2. தலித்துகளின் உயிர் எப்போதுமே உயர்வாக இருப்பதில்லை. சமமாககூட மதிக்கப்படுவதில்லை. உதாரணமாக உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனேவானெ நாசிக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இடை நிலை சாதியைச்சேர்ந்த ஒரு குண்டர்படை (காஞ்சிபுரத்தில் இருக்கிற ரெட்டியார் போல) இந்த வன் கொடுமையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  3. மிருக மனங்கள், என்ன தான் மனிதர்களாக அரிதாரம் பூசி சமுதாயத்தில் வலம் வந்தாலும் , வேடம் ஒரு நாள் கண்டிப்பாக களையும். இந்த நாகரீக யுகத்தில் எத்தனையோ மாற்றங்களை ஏற்று கொண்டவர்களால் ஏன் இன்னும் மனிதர்களாக பிறந்த அனைவரும் ஒன்றே என்ற மாற்றத்தை ஒப்புக்கொள்ள இயலவில்லை. இந்துக்களாக இருந்த போது தான் மதிப்பில்லை என்று மதம் மாறிய பின்பும் துரத்தும் சாதியத்தை என்னவென்று சொல்வது. ஒரு தலித் அன்பரை மத போதகராக ஏற்றுக்கொண்டவர்களால் அதே குலத்தை சேர்ந்த இன்னொரு அன்பரை சக மனிதராக நடத்த முடியவில்லை என்பது முற்றில்லும் தவறானது. திரு.இராஜேந்திரன் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி கொடுப்பதாலோ, இந்த கொடிய பாதக செயலை செய்தவர்களை தண்டிப்பதலோ, இந்த கொடுமை முடிவுக்கு வந்து விடாது. பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு ஆவண செய்வதுடன், இது போல் இன்னொரு நிகழ்வு அங்கு மறுபடியும் நிகழாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. நாசிக் ஆர்.எஸ்.எஸ்.தலைமயிடம்; பரிதாபம் என்னவனில் பல தலித் படிப்பாளிகள் இன்று அதன் அரசியல் கட்சியான பா.ஜ.க. ஆதராவளர்கள்; கம்யூனிஸ்டுகள் என்றால் அவர்ளுக்கு வேப்பங்காய்!

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)