தடகள வீரர் சுஜித் குட்டன் ... |
_____________
“ தந்தை இறந்துவிட்டார் என்று மகனிடம் கூறவில்லை. அத்துடன் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவனைக் களமிறக்கி தங்கப் பதக்கமும் வெல்ல வைத்தனர். தந்தை இறந்த தகவல் அறியாத சுஜித் குட்டன் 54வது பள்ளிகள் விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார்.”
________________
100 மீட்டரை 10.90 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றபின், அவரிடம் தந்தை இறந்த செய்தியை மிகவும் சிரமத்தோடு தெரிவித்தனர். ‘என்னை ஏன் களம் இறக்கினீர்கள். தந்தை இறந்ததை ஏன் கூறவில்லை’ என்று சுஜித் கூடிநின்றவர்களிடம் குமுறிக் குமுறி அழுதார்.
சுஜித்தின் தந்தை முரளிக்குட்டன் ஒரு இந்திய தடகள வீரராவார். அவர் நடுத்தூர ஓட்டங்களில் பங்கேற்ற சர்வதேச ஆட்டக்காரர். ஞாயிறன்று மாரடைப்பால் அவர் தனியார் மருத்துவமனையில் காலமானார். பல்கலைக் கழக விளையாட்டு அரங்கில் 100 மீட்டர் ஓட்டம் முடியும் வரை முரளிக்குட்டன் இறந்த செய்தியை சுஜித்திடம் கூறாமல் மறைத்துவிட்டனர்.
சுஜித்தின் தாயார் மெர்சி குட்டன் ஒரு ஒலிம்பிக் வீராங்கனை ஆவார். நீண்டதூரம் தாவுதலில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மெர்சி குட்டனும், அவரது கணவரும் தேசிய போட்டிகளிலும், ஆசிய போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சியின் தேவாரா பகுதியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 18 வயதான சுஜித் குட்டன் படித்து வருகிறார்.
அந்த இளம் வீரன், தந்தையின் வழியில் மேலும் பல சர்வதேச சாதனைகளைப் புரியவேண்டுமென வாழ்த்துவோம் !
0 comments:
Post a Comment