மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள
உறவுகளையும் நேர்நின்று எதிர் நோக்க வேண்டியதாகிறது. நமது சமூக உறவுகளை புரிந்து
கொள்ள நாம் இன்றைய சமூகத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை நாம்
கேட்டும் நமக்கு சொல்லித் தரப்பட்ட வரலாறும், ஏன் நமக்கு பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வரலாறும் முழுமையானதல்ல.
உதாரணம்:- நமது புவியியல் பாடப்புத்தகத்தில் கேட்கப்படும் கேள்வி:
இந்தியாவின் மான்செஸ்ட்டர் எது?
பதில்:- மும்பை (இந்தியாவில் பருத்தி உற்பத்தியில்
முதலிடம்)
இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அதன் மறைக்கப்பட்ட வரலாறு ஒன்று உண்டு என்பது நமக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இந்திய விளை
நிலங்களில் அவுரியும்,
இண்டிகோவும், பருத்தியும் அதிகமாக விளைவிக்கப்பட்டதால் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். அந்த நேரத்தில்,
மான்செஸ்ட்டருக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தி 14 லட்சம் பேல்கள் (ஒரு பேல் = 217.72 கிலோ கிராம்) இதனால்தான் மும்பை இந்தியாவின் மான்செஸ்ட்டர்
என்று அழைக்கப்படுகிறது.
நம் மக்களின் மரணத்தின்போது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமை சாதனையா? இல்லையே.
இப்படி இன்னும் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்.
எனவே, உண்மையான
வரலாற்றைப் புரிந்து கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
- ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் இருந்த உற்பத்தி சாதனங்கள் எவை? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற உற்பத்தி முறையில் நிலவி வந்த சமூக உறவுகள் எத்தகையவை?
- சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அரசியல் மோதல்கள், யுத்தங்கள் மற்றும் புரட்சிக்கு இட்டுச் சென்றன?
இவைகளை நாம் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
முழுமையான வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு உதவுவது நல்ல புத்தகங்களே.
சகதியும் சேறும் நிறைந்த வாழ்வின் அடிமட்டத்திலிருந்து
மேற்கிளம்பி உயர்வடைய புத்தகங்களே எனக்கு உதவின என்று உலக வரலாற்றில் மறக்க
முடியாத ரஷ்யப் புரட்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பல புத்தகங்களை
எழுதியவரும் உலகம் போற்றும் கலை இலக்கியவாதியுமாகிய மார்க்சிம் கார்க்கி
கூறியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் நம்பகமான துணைவன் புத்தகங்கள். அதுவே, நம் அறிவையும் சமூக
சிந்தனையையும் விவேகத்தையும் வளர்க்கும்.
- சுதிர்.ரா
இன்றைய சூழலின் தன்மையை உணர்வதற்கு பிந்தைய சூழலின் வளர்சிபோக்கை அணுகவேண்டிய தேவை கட்டாயமாகிறது.இவையிரண்டுக்குமான இடைவெளிகளை வாசிப்பும் அதன்மீதான ஆய்வுமனோபாவமுமே தெளிவடைய செய்யுமென்பதால் மீண்டும் மீண்டும் வாசிப்பே பிரதானமாகிறது...
ReplyDeleteSudhir good write up continue.
ReplyDelete