Showing posts with label சினிமாச் செய்திகள். Show all posts
Showing posts with label சினிமாச் செய்திகள். Show all posts

Friday, November 25, 2011

“இப்படியொரு படத்தை நான் இயக்கவில்லையே!” - பாலுமகேந்திரா


2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கி யுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற வேத் ஷங்கர், இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான அபிநந்தன் இராமானுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச்செய்திருக்கின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான தங்கர் பச்சான், வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

டேமேஜ் 999


திரைப்படக் கலைகள் மற்றும் அறிவியல் கல்விக்கழகத்தின் நூலகத்தில் டேம் 999 படத்தின் திரைக்கதை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள முதலாவது இந்தியத் திரைப் படம் இது என்றும் திரையிடுவதற்கு முன்பே நூலகத்தில் சேர்க்கப்பட்ட படம் இது என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் பாத்திரங்கள் நவரசங்களை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன; இந்தியப் பாரம்பரிய ஆயுர் வேத மருத்துவமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; 2டி யிலிருந்து 3டி ஆக மாற்றிக் கொள்ளும் நவீன தொழில் நுட்பம் கையாளப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் சரிதான் என்றாலும் இந்தப் படம் கடுமையான சிக்கலை ஏற்படுத்தியிருப்பது ஏன்? 1975 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள பான்கியாவோ அணை அழிந்ததால் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்து போன சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்ததப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிஸ்டிவி நெட்ஒர்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் டைட்டானிக் போல கடந்த கால சம்பவத்தை நினைவுபடுத்துவதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. எச்சரிக்கை செய்கிறேன் பேர் வழி என்று கற்பனையைக் கட்டவிழ்த்து விட்டதுதான் சிக்கல்.

‘சின்னஞ்சிறு உலகம்’ திரைப்படத்தில் கல்யாண வீட்டில் நாகேஷ் தேம்பித் தேம்பி அழுவார். ஏதும் புரியாத விருந்தினர்கள் காரணம் கேட்பார்கள், அவர் அங்கே இருக்கிற குத்துவிளக்கைக் காட்டி இந்த திரியில் மணப்பெண்ணின் சேலை தீப்பிடித்து, மணவறை எரிந்து மணமகன் எரிந்து இந்த மண்டபமே எரிந்தால் என்ன ஆகும் என்று எண்ணிப்பார்த்தேன் அதனால் தான் அழுகிறேன் என்று காரணம் சொல்வார்.

இது நகைச்சுவை காட்சியாகப் போய் விட்டது நாமும் சிரித்துவிட்டு அமைதி அடைந்து விடலாம்; ஆனால் இரண்டு மாநிலங்களுக்கிடையே கொதிக்கும் பிரச்சனையாக இருக்கிற முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் ஒருபக்கமாக நின்று அணை உடைவது போலவும் அதில் ஆயிரக் கணக்கான மக்கள் அடித்துச் செல்வது போலவும் கற்பனை செய்திருப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.

கலைக்குக் கற்பனை அவசியம் தான். ஆனால் அது அறிவூட்டுவதாக இருக்க வேண்டும்; ஆத்திரமூட்டுவதாக இருக்கக் கூடாது. மக்களை தெளிவுப்படுத்துவதாக இருக்கவேண்டும்; குழப்பி அச்சத்தையும், பீதியையும் கிளறிவிடுவதாக இருக்கக் கூடாது. இந்த இரண்டாவது காரியத்தைத் தான் டேம் 999 செய்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் முக்கியமான பாத்திரத்தில் மலையாள நடிகர் திலகன் நடிப்பதாக ஒப்பந்தமாகி இருக்கிறது. ஆனால் அதற்குக் கேரள திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. இந்தப் படத்தில் நடித்தால் அவரைப் புறக்கணிப்போம் என எச்சரிக்கை செய்துள்ளது. அதே சமயம் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் திலகனுக்கு ஆதரவாக நின்றுள்ளது.

ஆலப்புழாவில் படமெடுக்கும்போதும் பல பிரச்சனைகளை படப்பிடிப்புக்குழுவினர் எதிர்கொண்டுள்ளனர். இவ்வளவுக்குப் பின்னும் கற்பனையான - இருமாநில உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிற திரைப் படத்தை உருவாக்கி அதனை வெளியிடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் கேள்விக்குறியாகிறது.

கலை படைப்புகள் இணைப்பதற்காகவும் இணக்கத்தை உருவாக்குவதற்காகவும் இருந் தால் வரவேற்கலாம் - உறவுகளைக் கலைப்பதற்காக இருந்தால் ஏற்க இயலாது அல்லவா? அதனால் தான் டேம் 999 என்பது டேமேஜ் 999 ஆகியிருக்கிறது.

-மயிலை பாலு

Friday, November 18, 2011

வரவிருக்கும் மூன்று திரைப்படங்கள்

குடுகுடுப்பைக்காரர்கள் வாழ்க்கை

தாண்டவக்கோனே படத்தை இயக்கிய சுப்பு சுஜாதா, குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கவிருக்கிறார்.

இதில் வித்தியாசமான அம்சம் என்னவென்றால் கதையின் பின்பகுதி இலங்கை சிறைகளில் நடப்பதாகப் படமாக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில்தான் குடுகுடுப்பைக்காரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் வந்து சொல்வது பலிக்கும் என்று நம்புகிற மக்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

குடுகுடுப்பைக்காரர்களை நேரில் சந்தித்து பல தகவல்களை சேகரித்துள்ள சுப்பு சுஜாதா, கடந்த ஆறு ஆண்டுகளாகவே அவர்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். கதையின் பின்பகுதி இலங்கை சிறைகளில் நடப்பது போன்று படமாக்குவது பற்றி அவரே கருத்து தெரிவித்துள்ளார். குடுகுடுப்பைக்காரர்கள் குறி சொல்லும் வழக்கத்தைக் கற்றுக் கொண்டதற்கும், இலங்கை சிறைக்கும் தொடர்புள்ளது. அதுதான் இப்படத்தில் காட்டப்படுகிறது என்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.


வாச்சாத்தி

தர்மபுரி மாவட்டத்தி வாச்சாத்தி கிராமத்தில் சோதனை என்ற பெயரில் பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் கோரத் தாண்டவம் ஆடினார்கள். ஜூன் 20, 1992ல் இந்த சம்பவம் நடந்தது. மாநிலக் காவல்துறை சரியான விசாரணையை மேற்கொள்ளாத நிலையில், மத்திய புலனாய்வுக்குழு விசாரணையில்தான் குற்றவாளிகள் மீது வலுவான வழக்குப் பதிவு செய்வதற்கான தகவல்கள் கிடைத்தன. 19 ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பு, அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.

மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்த சம்பவத்தை திரைப்படமாக்கும் நாஞ்சில் முருகேசன் என்ற தயாரிப்பாளரின் குமாரி டாக்கீஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கும் வாச்சாத்தி என்றே பெயர் சூட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் காதல் ஜோடி ஒன்று பாதிக்கப்பட்டதாகத் திரைக்கதை செல்கிறது. வரும் 21ம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் வைத்தே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.


நினைவுகள் அழிவதில்லை

ஏழை-நடுத்தர மக்கள் வசிக்கும் நகர்ப்பகுதி வாழ்க்கையை அனுபவித்து வாழத்துடிக்கும் இளைஞர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். அரசு திட்டம் என்று சொல்லி ஒரு முதலாளிக்கும்பல் அந்தப் பகுதியைக் காலி செய்து அபகரிக்க முயற்சி செய்கிறது.

விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட கைக்கலப்பில்  எதிர்பாராதவிதமாக அரசு அதிகாரி தாக்கப்படுகிறார். இதையடுத்து போலீசுக்குப் பயந்து இளைஞர்கள் நண்பனைத் தேடி கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு வித்தியாசமான ஒரு விழா நடப்பதைப் பார்த்து நண்பனின் தாத்தாவிடம் அது பற்றி கேட்க, தாத்தா விவரிக்கின்றார்.

1943ல் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கையூர் என்ற அந்த கிராமத்தில் நான்கு இளைஞர்கள், அந்த ஊர் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைத் திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் உள்ளூர் பண்ணையாருக்கு எதிராகவும் கலகம் செய்கிறார்கள். பிரிட்டிஷ் போலீசும் பண்ணையாரும் சேர்ந்து ஒரு போலீஸ்காரன் மரணத்தை கொலை வழக்காக சதி செய்து இளைஞர்கள் மீது சுமத்தி தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்குகிறார்கள்.

வாழ வேண்டிய 20, 21 -வயதுகளில் நாட்டிற்காக துணிச்சலுடன் தூக்குமேடை ஏறிய இளைஞர்களின் வீரமிக்க வரலாற்றைக் கேட்ட நகரத்து இளைஞர்கள்,தங்கள் பிரச்சனைகளை தாங்களே எதிர்கொள்வதாகக் கூறி ஊர் திரும்புகிறார்கள். உழைக்கும் மக்கள் மீது அன்று தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை இன்றும் தொடர்கிறது என்பதை அழுத்தமான ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மூலம் சொல்ல வருகிறது “நினைவுகள் அழிவதில்லை” திரைப்படம்.

நாயகர்கள் நான்குபேர், இரண்டு கதாநாயகிகள் என புது முகங்கள் நடிக்கிறார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து வீதி நாடக, தெருக்கூத்து கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இசை பி.ஆர். ரஜினி, படத்தொகுப்பு பீ.லெனின், ஒளிப்பதிவு புதுயுகம் நடராஜன், பாடல்கள் தனிக்கொடி, அருள், குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பகத்சிங் கண்ணன். தஞ்சை ஆம் பலாபட்டு குடிகாடு, ஒரத்தநாடு, ஈரோடு, பவானி, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடியும் தருவாயில் உள்ளது. ஒரு வரலாற்று உண்மைச் சம்பவத்தை வித்தியாசமான முறையில் பதிவு செய்து உள்ளோம். டிசம்பரில் திரைக்கு வரும் என்கிறார்கள் படக்குழுவினர்.


Friday, November 11, 2011

அடுத்த மாதம் திரைக்கு வரும் ‘அரவான்’


தீபாவளி நேரத்தில் சுமார் பத்து படங்கள் தயாராகி வெளியாகக் காத்திருந்தன. ஆனால், பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான “வேலாயுதம்” மற்றும் “7ஆம் அறிவு” ஆகிய இரண்டு படங்களும் கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மிஞ்சியிருந்த சில திரையரங்குகளை ஷாரூக் கான் நடிப்பில் வெளியான “ரா ஒன்” எடுத்துக் கொண்டது. இதனால் தீபாவளி நேரத்தில் பல படங்கள் வெளியாகவில்லை.

இப்போது முடங்கிய படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் மற்ற படங்களை விட எந்தத் தயாரிப்பாளரால் திரையரங்குகளை கைப்பற்ற முடியும் என்பதுதான் தீர்மானிப்பதாக உள்ளது. முதலில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ரிச்சா நடிப்பில் உருவாகியுள்ள “மயக்கம் என்ன” என்ற படம் வெளியாகப் போகிறது. நவ.18 ஆம் தேதியன்று இந்தப்படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது, எந்தெந்தத் திரையரங்குகளில் வேலாயுதம் மற்றும் 7ஆம் அறிவு ஆகிய படங்களை எடுத்துவிடப் போகிறார்களோ அங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மாத இறுதி வரையில் வேறு பல திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படங்கள் வெளியேறும் வாய்ப்புள்ளது. அதைக்கணக்கில் கொண்டுதான் “வெயில்” மற்றும் “அங்காடித்தெரு” படங்களைத் தந்த இயக்குநர் வசந்த பாலனின் அரவான் படம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

இத்தகைய வாய்ப்புகளை நழுவவிட்டால் பொங்கலுக்கு மீண்டும் “நண்பன்” போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வந்து திரையரங்குகளை ஆக்கிரமித்து விடும் என்ற நிலை உள்ளது. அதற்குள் வெளியாகாவிட்டால் அதன்பின்னர் பள்ளித்தேர்வுகள் என்று ஏப்ரல் மாதம் வரையில் தள்ளிப்போய்விடும் அபாயம் உள்ளது என்கிறார்கள் திரைப்படத்துறையினர்.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)