Showing posts with label மன்மோகன்சிங். Show all posts
Showing posts with label மன்மோகன்சிங். Show all posts

Monday, January 30, 2012

பிரதமரே, குறுக்கு வழிகளால் பயனில்லை!



பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் 2012-ம் ஆண்டை குறிப்பிடும்படி யான இரு உரைகளோடு தொடங்கியுள் ளார். ஜனவரி மாதம் 3ம் தேதி இந்திய அறிவியல் காங்கிரசில் உரை நிகழ்த் தினார். மீண்டும் 10-ம் தேதி, இந்நாட்டின் வறுமை மற்றும் சத்துணவுக்குறைபாடு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இரு உரைகளும் வெவ்வேறு பிரச்சனை களைக் குறிக்கின்ற போதிலும், இணைத்துப் பார்க்கையில், இந்தியாவின் தகுதிகளைச் செயல்வடிப்பதில் கவலைய ளிக்கும் அணுகுமுறையையே உணர்த்துகிறது. 

சீனா முந்தி விட்டதாம்!

கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125-வது பிறந்த தின உரையிலும், பிரபஞ்சத்தின் நுண்ணணுப்பொருட்கள் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் (போசோன் என்று இவரது பெயரிலேயே ஒரு நுண்ணணுப்பொருள் அழைக்கப் படுகிறது) அவர்களைப் பாராட்டி உரை நிகழ்த்தும் போதும், அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மிகக் குறைவாகவும் தேக்கமடைந்த நிலையில் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதத்திற்கும் குறைவாகவே செல விடப்படுகிறது. இவ்விஷயத்தில் சீனா நம்மை முந்திவிட்டதாக வருந்திய பிரதமர், 12-வது திட்டக் காலம் முடிவு றுவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் குறைந்தபட்சம் 2 சதவீதமாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடவேண்டுமென்று வற்புறுத்தி யுள்ளார்.

பிரதமரின் பாராட்டத்தக்க நோக்கங்களை மறுக்க இயலாது. இத்தகைய செலவினங்களை அதிகரிக்க, அவர்கள் வலியுறுத்தும் வழிமுறைகளில்தான் பிரச்சனை இருக்கிறது. “மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினத்தில் மூன்றல் ஒரு பங்கினை மட்டுமே அளிக்கும் தொழிற்சாலைகள் தங்களது பங்களிப்பைக் குறிப்பிடும்படியாக உயர்த் தினால் மட்டுமே அதை எட்டிட இயலும்; மேலும் அரசின் பிரபலமான தாரக மந்திரமான, பொதுத்துறை-தனியார்துறை பங்கிணைப்பின் மூலமே இந்நோக்கங்களை அடைய இயலும்” என்று பிரதமர் கூறுகிறார். ஆய்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தனியார்கள் காட்டும் ஆர்வத்தின் பின்புலம் லாப நோக்கங்களை அதிகரிப்பதே என்பது உலகெங்கும் அங்கீ கரிக்கப்பட்ட விஷயமாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அறிவியலின் பங்கு என்று பிரதமர் கூறியிருப்பது முரண்பட்டதாக இருக்கிறது. செயல்முறைசார் அறிவியல் ஆய்விற்கு நிதியைத்திரட்டுவது சுலபமாக இருப்பதால், அரசு, தனியார் நிதியைப் பெறுவதற்கான கொள்கைகளை வடிவமைக்கும் என்று கூறியுள்ளார். இத் தகைய எண்ணப்போக்கைப் பலப்படுத்த, “தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச் சிக்காக அரசு அளிக்கும் நிதி, செயல் முறை சார் அறிவியல் ஆய்வினைக்காட் டிலும் அடிப்படை ஆய்விற்கே பயன் படுகிறது என்று பிரதமர் வருத்தம் தெரி வித்தார். அப்படியெனில், அடிப்படை ஆய்வினைப் பலப்படுத்துவதற்கு பதி லாக தனியார்களின் லாபங்களை ஊக்குவிக்கும் தனியார்-பொதுத்துறை இணைப்பை பிரதமர் வலியுறுத்துகிறார் என்பதே இதன் பொருள். இப்போக்கிலே சிந்தித்தால், இராமானுஜன் மற்றும் போஸ் போன்ற விஞ்ஞானிகள் இந்தியா வில் உருவாவது சாத்தியமல்ல. 

மெலிந்துவரும் தேசம்! 

பிரதமர், அவரது இரண்டாவது உரை யில், ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச் சனை நாட்டின் அவமானமாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுள் 42 சதவீதம் எடை குறைவாகவும் 59 சதவீதம் வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது. இருப்பினும், இத்தகைய கண்டு பிடிப்புகள் ஒன்றும் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிதி மந்திரியான மன்மோகன்சிங் அவர்க ளால் கொண்டுவரப்பட்ட பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், பொருளாதார வேறு பாட்டின் அடிப்படையில் இரு வேறு இந்தியாவை உருவாக்குவதிலேயே வெற்றி கண்டுள்ளன என்ற உண்மை யினை பரந்த ஆய்வைக்கொண்ட அறிக் கைகள் சில ஏற்கனவே உறுதிப்படுத் தியுள்ளன. 

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் 50 சதவீதத்தினர் சத்துக்குறை வுடன் காணப்படுவது மிகவும் பின்தங்கி யுள்ள ஆப்பிரிக்காவின் தென்சஹாரா பகுதியைவிட மோசமானதாக இருக் கிறது. குழந்தைகளுள் பாதிப் பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுவதில்லை. எனவே, தடுக்கக்கூடிய நோயினால் இறக்கின்றனர். மருத்துவத்துறையில், அரசு மற்றும் தனியாரின் மொத்த செல வினத்தை எடுத்துக் கொண்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அந்த சதவீதம் ஆப்பிரிக்கா முழுவதையும் விட குறைவாக உள்ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளான பிறகும் கூட 50 சதவீத இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாத பரிதாப நிலையில் இருக்கின்றனர். 

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்பட்ட தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் மூன்றாம் பதிப்பில் வெளிவந்த நிலைமைகள், அதன் இரண்டாம் பதிப்பில் வெளிவந்ததை விட மோச மாகியிருப்பது கவலையளிப்பதாக உள் ளது. 6- லிருந்து 35 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகள் இரத்தசோகை யினால் பாதிக்கப்படும் சதவீதம் 74.2 லிருந்து 79.2 ஆக உயர்ந்திருக்கிறது. இவ் விகிதம், 15-49 வரை வயதுடைய திரு மணமான பெண்களை எடுத்துக் கொண் டால் 51.8 சதவீதத்திலிருந்து 56.2சதவீத மாக அதிகரித்திருக்கிறது. இரத்த சோகையினால் பாதிக்கப்படும் இதே வயதையுடைய கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம் 49.7 லிருந்து 57.9 ஆக உயர்ந் துள்ளது. நமது தாய்மார்கள் மற்றும் குழந் தைகளின் நிலை இதுதான். 

அரசின் வறட்சியான திட்டம்

இந்தியாவின் ஊட்டச்சத்துக்கான தேசியக்குழுவின் தலைவராக பிரதமர் இருப்பது இதில் வேடிக்கையான விஷயம். இத்தகைய கடுமையான நிலையை சீர்செய்ய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவையை இந்தியா முழுமைக்கும் அமலாக்குவது என அரசு அறி வித்துள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்பும் உச்ச நீதிமன்றத்தின் உத்தர வின் பேரிலேயே நடைபெற்றது. இருப்பினும், நம் நாட்டில் ஐசிடிஎஸ் கண்காணிப் பாளர்களின் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாகவே இருக்கிறது. மதிப்பிடப்பட்டுள்ள 14 லட்சம் மையங்களுள் 1 லட்சத்து 10 ஆயிரம் அங்கன் வாடிமையங்கள் செயல்படுவதேயில்லை. பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் பரிதாபமான நிலையில் உள் ளன. பலருக்கு, அதிலும் குறிப்பாக பீகா ரின் 90சதவீத மையங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. பாதிக்கும் மேலான வற்றிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி யில்லை.

நாடாளுமன்றத்தில் கட்டாயமாக கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், அங்கன்வாடிகளை ஆரம்பப்பள்ளிகளுடன் இணைப்பதற்கான கோரிக்கை இயக்கங்கள் தொடரும் நிலையிலும் அங்கன் வாடிப்பணியாளர்களின் நிலை மிக மோசமாகவே இருக்கிறது.

ஐசிடிஎஸ் திட்டத்தை பலப்படுத்து வதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆனால் மதிய உணவுத் திட்டத்தை பொதுத் துறை - தனியார் கூட்டு பங்கேற்பு (பிபிபி -ஞஞஞ) மூலம் தனி யாருக்கு தாரை வார்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 1 சதவீதம் மட்டுமே பொது சுகாதாரத் திற்காக செலவிடுகிறது. உடல்நல பட் ஜெட்டிற்கான தொகை ரூ. 22,300 கோடி மட்டுமே. இதை விட 8 மடங்கு அதிக மாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் அரசு இழந்திருக்கிறது. 

படிப்பினை

பிபிபி மூலம் குறைபாடுகளை களைய எடுக்கும் முயற்சிகளும், அதற்காக அரசு, தனியாரைச் சார்ந்திருப்பதும் கவலை யளிக்கும் அம்சமாகும். நான் ஒரு விஷ யத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். மீண்டும் வலியுறுத் துவதும் அதுதான். செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகைகளை விலக்கி, உரிய வரிகளை கறாராக வசூலிக்க வேண்டும்; அதன் மூலம், நமது பொருளாதார சமூகக் கட்டமைப்பிற்காக அரசு பயன்படுத்து மானால், பெருமளவில் வேலைவாய்ப்பு பெருகும். அதைஅவ் வகையில் பெருக்கி னாலொழிய, இந்தியாவின் உள்ளார்ந்த சக்தியினை செய லாக்கிட முடியாது.

சீத்தாராம் யெச்சூரி எம்.பி.
தமிழில் : ஜெ. விஜயா 

நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (16.1.2012)

Friday, January 13, 2012

நலிந்து கிடக்கும் நாளைய இந்தியா

“நன்மையிலேயே, உடல் வன்மை யிலேயே - செல்வப் பன்மையிலேயே” சிறந்த நாடு பாரத நாடு என்று அடிமை இந்தியாவில் வாழ்ந்த மகாகவி பாரதி பாடிவிட்டுப் போனார்.

 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்திய திருநாட்டின் மக்கள் உடல் வன்மையிலேயே சிறந்து விளங்குகிறார்களா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவு என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இது “ஒரு தேசிய அவமானம்” என்று மனம் வெடித்து கூறியிருக்கிறார். மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டு, யாருக்கும் தரப்படாமல் மக்கி மண்ணாகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, இதுபோன்ற அரசின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை தலையிடலாகாது என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங்கின் அதே திருவாய்தான், இப்போது தேசிய அவமானம் என்றும் கூறியிருக்கிறது.

இந்தியா வளர்கிறது என்று அவ்வப்போது மத்திய ஆட்சியாளர்கள் குதியாட் டம் போடுவார்கள். பளபளக்கும் பன்னாட்டு நிறுவன கார்கள் அதிகரித்துவிட்டதாக வாய்நீளம் காட்டுவார்கள். ஆனால், மறுபுறத்தில் மழலை இந்தியா எழுந்து நடக்க சக்தியின்றி நலிந்து கிடக்கிறது.

வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் ஊட்டச் சத்தின்மையால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. நகர்ப்புற மக்களில் நாளொன்றுக்கு ரூ.31 செலவிடுவோரும், கிராமப்புறங்களில் ரூ.29 செலவிடுவோரும் வறுமைக்கோட்டுக்கு மேலே தாண்டி சென்றுவிட்டார்கள் என்று மத்திய திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இவர்களது கணக்குப்படி, இந்திய மக்களில் பெரும்பகுதியினர் வறுமைக் கோட்டை வளைத்து தாண்டி தப்பித்து விட்டார்கள் என்று பொருள். இதன் சூட்சமம் என்னவென்றால், வறுமைக்கோட்டுக்கு மேலே சென்றவர்களுக்கு உணவு மானியம் உள்ளிட்ட எந்த மானியமும் கிடையாது. இவர்கள் பொதுவிநியோக முறையி லிருந்து தள்ளிவைக்கப்படுவார்கள். இதற் காகத்தான் இந்த மோசடி கணக்கு தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத் தின்மை குறித்த கணக்கு இந்த பொருளா தாரப் புலிகளின் முகத்தில் ஓங்கி அறைந் திருக்கிறது.

இந்த ஆய்வு முடிவு மேலும் சில இருட்டுப் பகுதிகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. ஊட்டச்சத்து குறை வால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறு பான்மை முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதையும் ஆய்வு முடிவு தெளிவுபடுத்தியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களின் வாழ்நிலை மிக மிக மோசமாக உள்ளது என்று நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு அறிக்கை கூறியபோது, ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இதில் உண்மையில்லை என்றது. முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்தபோது, அதைக் கண்டித்து கலகம் செய்தது ஆர்எஸ்எஸ் பரிவாரம். ஆனால், ஊட்டச்சத்து குறை வால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மை முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள்தான் என்று இந்த ஆய்வு தெரிவித்துள் ளது. முஸ்லிம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரும்பகுதி முஸ்லிம் சமுதாயமே ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது என் பதுதான் உண்மை.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியே இட ஒதுக்கீடுதான் என்றும், எனவே இடஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுகின்றன. இடஒதுக்கீட்டினால் திறமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும், சிலர் புலம்புகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந் தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக் கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் முன்னேற வேண்டுமானால் இட ஒதுக்கீடு மட்டுமல்ல, உரிய உணவு ஒதுக்கீடும், நில ஒதுக்கீடும் நிலை பெற வேண்டும் என் பதையும் இந்த ஆய்வின் வெளிச்சத்தில் புரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங் களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க மத வாத, சாதிய சக்திகள் தொடர்ந்து முட்டுக் கட்டை போடுகின்றன. இந்த சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை கள் கொஞ்சநஞ்சமல்ல. கருவறையிலேயே துவங்கி விடுகிறது பெண்களுக்கு எதிரான கொடுமைகள். ஊட்டச்சத்தின்மை குறித்த இந்த ஆய்வும் பெண் குழந்தைகள் சமூக வாழ்வில் ஒடுக்கப்படுவதை உறுதி செய் துள்ளது. குழந்தைகளின் எடை மற்றும் உய ரத்தைக் கொண்டு ஊட்டச்சத்து போதிய அளவு உள்ளதா என்று கணக்கிடப்படு கிறது. குழந்தை பிறந்து முதல் மாதத்தில், பெண் குழந்தைகள் இந்த விகிதத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து உள்ளவை யாக இருந்தபோதும், வளர வளர ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்படுகின்றன என்று இந்த முடிவு கூறுகிறது. அதாவது, பெண் குழந்தைகளுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து வழங்கப்படுவதில்லை. இத னால் அவர்களது வளர்ச்சி எதிர்விகிதத் தில் செல்கிறது என்பதுதான்.

ஆய்வு நடத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் ஊட் டச்சத்து என்பது குறித்து அறிந்திருக்க வில்லை என்றும், போதிய கல்வி அறிவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கு கல்வி அறிவு தரப்படாதது குறித்த அடிப்படை கேள்வியையும் இந்த ஆய்வு எழுப்புகிறது. பெரும்பாலான இந்திய பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப் படுகிறார்கள் என்பது ஏற்கெனவே வெளி வந்துள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் உண்மையாகும்.

இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கும் ஆறுதலான செய்திகளில் ஒன்று, ஊட்டச்சத்து விஷயத்தில் கேரளம், தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் ஒப்பீட்டு அளவில் பரவாயில்லை என்பதுதான். கேரளத்தில் தொடர்ச்சியாக இடதுசாரிகள் தலைமையிலான அரசு இருந்து வந்துள்ளதும், பொது விநியோக முறை சிறப்பாக உள் ளதும் காரணமாக இருக்கலாம். தமிழ் நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத் துணவு திட்டம் அமலில் இருப்பதும், ஒப் பீட்டு அளவில் பொதுவிநியோக முறை நன்கு செயல்படுவதும் காரணமாக இருக்கலாம்.

வயிறும், தலையும் வீங்கி, கைகால்கள் சூம்பிப் போய் இளைத்து கிடக்கிறது நாளைய இந்தியா. குளிரூட்டப்பட்ட அரங்குகளில் இந்தியா வளர்வதாக வாய்கிழிகிறது.

- மதுக்கூர் இராமலிங்கம்

Wednesday, November 30, 2011

அந்நியருக்கு நெஞ்சும், இந்தியாவுக்கு வயிறுமாக மன்மோகன்சிங் அரசு!

சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. நிதிஷ்குமார், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்றவர்களே தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என குரல் எழுப்பியிருக்கின்றனர். தி.மு.க, திரிணாமூல் போன்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே,  மத்தியிலிருக்கும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் முடிவுக்கு தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. தேசம் முழுவதும்  டிசம்பர் 1ம் தேதி கடையடைப்பு என அனைத்திந்திய  வர்த்தகர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இவ்விஷயத்தை முன்வைத்து கொந்தளிப்பு அடங்காமல் இருக்கிறது. எதோ தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம்  சேர்ந்து பாராளுமன்றத்தில் தேவையில்லாமல் அமளிசெய்து முடக்குவது போல மன்மோகன் வகையறாக்கள் சீன் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயாரில்லாமல், அயோக்கியத்தனம் செய்து வருகிறது காங்கிரஸ். கோடீஸ்வரர்கள் அமைச்சர்களாக உள்ள காங்கிரஸ் அமைச்சரவைக்கு, சில்லரை வர்த்தகத்தின் சீரழிவை பற்றியோ அல்லது கோடிக்கணக் கான நடுத்தர, சாதாரண வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது பற்றியோ அக்கறை இல்லை.

இவ்வளவு எதிர்ப்பையும் மீறி, மன்மோகன்  தனது அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டு இருக்கிறார். நேற்று காங்கிரஸின் இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவை எனபதை வலியுறுத்தி இருக்கிறார். நுகர்வோர்கள் பயன்பெறுவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு கூடுதல் விலை பெறவும் தொழில்ட்ப இறக்குமதிக்கு வழிகோலவும் தீவிர ஆலோசனைக்கு பிறகே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாம். இதன் மூலம் நாட்டிற்கு நவீன தொழில்ட்ப வசதிகள் கிடைக்குமாம். கிராமப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுமாம். விவசாய விளைபொருட்கள் சேதம் அடைவது குறையுமாம். இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது சரியல்லையாம். சிறு தொழில் துறையை மேம்படுத்தும் விதத்தில், சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்கள்.

இப்படி எவ்வளவு வாக்குறுதிகளையும், சால்ஜாப்புகளையும் இந்த காங்கிரஸ் அரசு இதே வாயால்  சொல்லி வந்திருக்கிறது! பத்து கோடிபேருக்கு வேலை உருவாகும், வறுமையை ஒழிப்போம், பொருளாதார வளர்ச்சி அபரிதமாகும், விவாசய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடியும் என்று, தாராளமயத்தினை வேகப்படுத்தும் போதெல்லாம் எத்தனை முறை இதே மன்மோகன் சொல்லியிருக்கிறார்! அதெல்லாம் நடந்தா விட்டது? பணவீக்கம், விலைவாசி  எல்லாம் தாறுமாறாய் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரமே உருக்குலைந்து போவதுதானே நடந்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்வதும், இளைஞர்கள் வேலை இல்லாமல் பித்துப் பிடித்துப் போவதும், சாமானியர்களின் எதிர்காலம் இருண்டு போவதும்தானே கண்ணெதிரே நடந்துகொண்டு இருக்கிறது.

எல்லா உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு, நாட்டின் நலனை காலில் போட்டு மிதித்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் போராட்டங்களையெல்லாம் நசுக்கிவிட்டு அந்நிய முதலீட்டுக்கு சில்லரை வணிகத்தில்  இடமளிக்க ஏன் இந்த வேகம் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸுக்கும்?

அந்நியருக்கு நெஞ்சும், இந்தியாவுக்கு வயிறுமாக இருக்கும் இந்த அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களை அடையாளம் காண்போம். வேரறுப்போம்.

Friday, November 11, 2011

இலங்கை: தீர்வின் திசை வேண்டி!

மாலத்தீவில் சார்க் நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மாலத்தீவு புறப்படும் அவசரத்தில் கூட பிரதமர் மன்மோகன் சிங் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டுத்தான் புறப்பட்டார். அதாவது, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமல்ல, இனியும் உயர்த்தப் போவதில்லை என்ற உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்பதுதான் அது.

அந்த அளவுக்கு செயல்திறனும் பொறுப் புணர்ச்சியும் மிக்கவர்தான் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் இவரை சிலர் செயல் திறன் அற்றவர் என்று பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பதுதான் வேதனை.

சார்க் கூட்டமைப்பில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்சேவும் மாலத்தீவு மாநாட்டில் பங்கேற்கிறார். இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து, இந்தியா அளிக்கும் உதவி தமிழர்களுக்கு சரியான முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து ராஜபக்சேவுடன் பேசுவேன் என்று ஒரு வார்த்தை கூட மன்மோகன் சிங் கூறவில்லை.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன் வெல்த் நாடுகளின் மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கும் ராஜபக்சே வருகை தந்தார். அவரை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் கூட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கே ராஜ பக்சேவை சந்தித்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் விவாதிக்கவில்லை.

இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சே, பத்திரிகைகளில் வருவதைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும் பல பத்திரிகைகள் குப்பை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

எதைத்தான் மதித்தார் மகிந்த ராஜபக்சே? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்ட அறிக்கையை கூட குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் இருந்து வருகிறார் அவர். சித்ரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 47வது அமர்வு ஜெனிவாவில் 2011 நவம்பர் 8 அன்று நடைபெற்றது. இலங்கையிலும் வடக்குப்பகுதியிலும் ஏழு ரகசிய சித்ரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும், அதில் 700க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் இளை ஞர்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அக்கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வவு னியாவில் ஐந்து முகாம்களும், முல்லைத் தீவில் இரண்டு முகாம்களும் செயல்படுவதாக ஐ.நா. குழுவின் உதவித் தலைவர் பெரிஸ்கேர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகில் அதிக அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இவ்வாறு சட்டவிரோத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோர் பெயர்ப் பட்டியலை ஐ.நா. சபை பலமுறை கோரியபோதும் இலங்கை இன்னமும் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் சார்பில் இந்த விசாரணையில் பங்கேற்ற முன்னாள் சட்ட அமைச்சர் மொகான்பிரீஸ், ஐ.நா. சபையின் சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டின் சில அம்சங்களில் இலங்கை கையெழுத்திடவில்லை என்று வாதிட்டுள்ளார். அதாவது சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டில் நாங்கள் கையெழுத்திடவில்லை. எனவே அப்பாவி தமிழ் மக்களை சித்ரவதை செய்வதை ஐ.நா. தடுக்க முடியாது, விசாரிக்கக் கூட முடியாது என்பது அவரது வாதம். ஆனால் சித்ரவதைகளை சகிக்க முடியாது என்பதை 110 சதவீதம் ஒத்துக் கொள்வதாக அவர் வாய்ப்பந்தல் போட்டுள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விவரங்கள் கண்ணீரை வரவழைக்கிறது என்றால், லண்டனைச் சேர்ந்த சேனல் 4 வெளியிட்ட காணொளி காட்சிகள் இதயத்தில் உள்ள இரத்தத்தை முற்றாக வற்றிப்போகச் செய்கிறது.

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை ராணுவத்தின் குண்டுமழையில் அப்பாவி தமிழ் மக்கள் 40 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது ஐ.நா. குழு அளித்துள்ள விவரம். போர் நிறுத்தப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களை மட்டுமல்ல, செஞ்சிலுவைச் சங்க கட்டிடங்கள், மருத்துவமனைகள் எதையும் இலங்கை ராணுவம் விட்டு வைக்கவில்லை. நரவேட்டையாடியது என்பது ஐ.நா. குழு வெளியிட்டுள்ள அறிக்கை. இவர்களது கொலைவெறிக்கு பெண்கள், குழந்தைகள் கூட தப்பவில்லை. மிகக்கடுமையான முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது ஐ.நா. குழுவின் குற்றச்சாட்டு. ஆனால் இதுகுறித்து முறையான எந்தவொரு விசாரணைக்கும் ராஜபக்சே அரசு தயாராக இல்லை.

மாறாக, சர்வதேச சதுரங்கக் களத்தில் சாதுர்யமாக காய் நகர்த்தி தன்னுடைய குற்றங்களை முற்றாக மறைத்துவிட, நியாயப்படுத்த ராஜபக்சே அரசு முயலுகிறது. இலங்கையில் காணாமல் போகிறவர் பட்டியலில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல. உண்மையை பேசும் சிங்கள மொழி பத்திரிகையாளர்களும் உள்ளனர்.  இத்தகைய கடத்தலும் காணாமல் போவதும் இன்னமும் தொடர்கதையாக நீடிக்கிறது.

சேனல் 4 காட்டிய காட்சிகள் உலக மனித சமூகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு காகம் இறந்தால் கூட சக காகங்கள் கூடி கூச்சலிட்டு தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும். ஆனால் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்ட மனிதச் சதைகளை காகங்கள் கொத்தித் தின்கிற காட்சியும் இதுவரை அவல இலக்கியங்களில் கூட சொல்லப்படாத அளவுக்கு பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டு, சதைகளை தூக்கிச் செல்லும் காட்சிகளும் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

இன்னமும் கூட முள்வேலி முகாம்களிலிருந்து தமிழ் மக்களுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை பல்வேறு ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன.

அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான ராணுவத்தினரின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்கதையாக நீடிக்கிறது. 12வயது சிறுமி ஒருத்தியை ராணுவத்தினர் “விசாரணைக்காக” தூக்கிச்செல்ல முயன்றபோது அவளுக்கு அம்மை நோய் கண்டிருப்பதாகக் கூறி தற்காலிகமாக தனது மகளை தப்பவைத்தேன் என்று கூறியுள்ளார் ஒரு தந்தை. குண்டுவீச்சில் தான் பலியானால் தனது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுமாறு கூறியுள்ளார் ஒரு பெண். தனது சடலத்தின் மீது ராணுவத்தினரின் கைகள் ஊர்வதை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் அந்தப்பெண். பிணங்களை லாரியில் ஏற்றிய போது தானும் பிணம்போலக்கிடந்து முகாமிலிருந்து தப்பித்ததாக கூறியுள்ளார் ஒரு இளைஞர். இவை ஒன்றிரண்டு நிகழ்ச்சிதான். மொத்த பயங்கரத்தையும் தொகுத்துப் பார்த்தால், இலங்கைத் தீவே கண்ணீரால் மூழ்கிவிடும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு அந்நாட்டு மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னமும் நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. மொழிவழி தேசிய இன மக்களான தமிழ் மக்களின் சம உரிமை மறுக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று தமிழ் தள்ளி வைக்கப்பட்டது. நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை என அவர்களது பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது. மக்களாட்சியில் கூட அவர் களுக்கு உரிய உரிமை கிடைக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்ற ஜனநாயக முறை அகற்றப்பட்டு, அதிபர் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு உட்பட அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டன. இதனால்தான் கனன்று கொண்டுதான் இலங்கை தமிழர் பிரச்சனை 1983ல் பெரும் தீயாக உருவெடுத்தது. போரில் வெற்றிபெற்றுவிட்டதாக கெக்கெலி கொட்டும் ராஜபக்சே அரசு, தனது நாட்டின் சொந்த குடிமக்களான தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட வழங்க முன்வரவில்லை.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய தமிழ் மக்கள் தங்களது முந்தைய சொந்த வாழ்விடங்களில் மீள்குடி அமர்த்தப்படவில்லை. மாறாக அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்துவதாக தகவல்கள் வருகின்றன. போருக்குப் பிறகும் கூட தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கல்வி நிலையங்கள் முழுமையாக செயல்படவில்லை. மாறாக ராணுவமுகாம்கள் செயல்படுகின்றன.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்மக்கள் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றது. ராஜபக்சே அரசை தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதையே இந்த முடிவு உணர்த்தியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதாரம், பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் என்பதை இந்த முடிவு உணர்த் தியதாக குறிப்பிட்டார். தாங்கள் கோருவது மாநில சுயாட்சியே என்றும் இந்த அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் இந்த கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமானால் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்க வேண்டும்; தமிழ்மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்; தமிழ் மக்க ளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து நிலைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள் ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மக்க ளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் அரசியல் சாசனத்தின் அனைத்துப் பிரிவுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்களது பண்பாட்டு அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். நில உரிமை உள்ளிட்ட அவர்களது அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டவிரோத காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக உறவுகள் குறித்து இந்தியா கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் உதவி தமிழ் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து கவலைகொள்வதில்லை. இந்தக் குற்றச்சாட்டை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயே முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதில் சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வ மான பிரச்சனையாக நீடிக்கிறது, அது நியா யமானது என்ற அடிப்படையிலும் இந்தியா உண்மையான அக்கறையுடன் தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியாக, முன்பின் முரணின்றி போராடி வந்துள்ளது. உணர்ச்சி ஊட்டக் கூடிய முழக்கங்களை மட்டும் முன் வைக்காமல் காரியசாத்தியமான தீர்வை முன் வைத்து போராடி வந்துள்ளது. தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. விருதுநகரில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் முதல் தீர்மான மாக இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்; அவர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதயத்தில் ரத்தம் வடியச்செய்யும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்திற்கும் விருதுநகர் மாநாடு அறை கூவல் விடுத்தது. மத்திய அரசின் பிரதிநிதியாக விளங்கும் ஆளுநர் மாளிகை முன்பு நவம்பர் 12ந்தேதி தமுஎகச சார்பில் ஆர்ப்பாட்டமும், கையெழுத்துப் படிவங்களை வழங்கும் இயக்கமும் நடை பெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சி. தமிழகத்தின் மனசாட்சியாக விளங்கும் தமுஎகச கேட்கிறது, மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
- மதுக்கூர் ராமலிங்கம்
(மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்)

Monday, November 7, 2011

மத்திய அரசின் உதவியுடன் வெள்ளையாகிறது கருப்பு!



வெளிநாடுகளில் இந்தியர்களின் சட்டவிரோதக் கருப்புப் பணம் பாதுகாப்பாக இருப்பதும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்குவதும் மத்திய அரசின் ஒத்தாசையுடன்தான். கருப்புப் பணத்தைத் தடுக்கவும், ஸ்விஸ் நாட்டு வங்கிக் கணக்கை விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறுகிற மத்திய அரசு, மறு பக்கம் இந்தக் கருப்புப் பணக்காரர்களைப் பாதுகாப்பது 30 ஆண்டுக்கால ஸ்விஸ் அக்கவுண்ட் வரலாறாகும்.

அரசியல் தலைவர்களும் பெரும் தொழிலதிபர் களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் உள்ளிட்ட ஒரு பெரும் கூட்டம் தான் அரசுக்கு வரி செலுத்தாமலும், தங்களுக்குப் பெருமளவு பணம் வரும் வழியை அரசுக்குத் தெரிவிக்காமலும் அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் திரட்டிய கள்ளப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்குவதற்கான தந்திரம் ஏற்றுமதிக் கணக்கிலான மோசடி மூலம் செய்யப்படுகிறது. இதுவும் மத்திய அரசுக்குத் தெரிந்தே நடக்கிறது. மிகப்பெரும் வசதி படைத்த இந்தியர்களின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் பல்வேறு வெளிநாடுகளின் வங்கிகளில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது என்பது வெளிப்பட் டுள்ள கணக்கின்படி தெரிகிறது. இவற்றில் மிக அதிக தொகை போடப்பட்டுள்ளது ஸ்விஸ் வங்கிகளிலாகும்.

ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் பேர் ஸ்விஸ் நாட்டுக்குப் பயணமாகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் இந்நாட்டுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்கிறவர்கள். இந்த இரு பிரிவுகளிலும் அதிகம் பேர் இந்தியர்கள்தான். உச்சநீதி மன்றம் கேள்வியெழுப்பிய பிறகுதான், வெளிநாடுகளின் வங்கிகளில் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பெயர் முதலான விவரங்களைத் தரவேண்டுமென ஸ்விஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இந்திய அரசு கோரியுள்ளது. இதுவும் கூட கருப்புப் பண முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்துத்தான் கோரியுள்ளது. சுவிஸ்வங்கியில் மூன்று கேரள எம்.பி.க்களுக்கும் கணக்கு உள்ளதென்ற செய்தி வந்ததைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருப்புப் பணக்காரர்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை என்று சொன்னது இந்த உறுதி மொழியின்படிதான்.

கருப்புப் பணம் குறித் துத் தொடர்ந்து செய்திகள் வருவதாலும், கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க சர்வதேச அளவில் முயற்சி நடப்பதாலும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கான வேலை மிக வேகமாக நடைபெறுகிறது.

சுரங்கத் தொழில், பங்கு மார்க்கெட், மருந்துக் கம்பெனி வட்டாரங்கள்தான் ஏற்றுமதியில் பொய்க் கணக்குகளை உருவாக்கி, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க உதவுகின் றன. இதற்கு அரசு நிர்வாகங்களும் உதவியாக இருக் கின்றன. 2010-11 ல் ஏற்றுமதி யில் 79 சதவிகிதம் அதி கரிப்பு என்பது இதன் மூலம்தான் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. செம்பு உப கரணங்களின் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்தது என் கிற கணக்கு தொழில் துறையை அதிரச் செய்துள்ளது. இந்த அளவுக்கு செம்பு உபகரணங் களை ஏற்றுமதி செய்வதற்கான செம்பு உற்பத்தித்திறன் இந் தியாவிடம் இல்லை. செய்யாத ஏற்றுமதியைச் செய்ததாகக் காட்டி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு இது ஓர் உதாரணம்.

ஸ்விஸ் வங்கியில் மிக அதிகமாய்க் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தியர்கள்தான் என்பது ஸ்விஸ் பாங்கிங் அசோ சியேசன் வெளியிட்ட கணக்கில் ஏற்கெனவே தெளிவாகியிருக்கிறது. தேசத்தின் ஜிடிபியின் 40 சதவிகித தொகை அந்நிய நாடுகளில் சட்ட விரோத மாகச் சேமிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தீக்கதிர்

Tuesday, March 22, 2011

‘ஸ்பெக்ட்ரம்’ கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு காண்கிறார்கள்!


சுதந்திர இந்தியா இப்பொழுதுபோல், முன்னெப்போதாவது இந்த அளவுக்கு அவமானப்பட்டு, அம்பலப்பட்டு இருந் திருக்குமா? என்றால்.. அநேகமாக ‘இருந்திருக்காது’ என்ற முடிவுக்கு நிச்சயமாக வரமுடியாவிட்டாலும் கூட தோராயமாக ‘ஆம்’ என்று சொல்லலாம்!

இந்திய அரசு, இந்திய பெருமுதலாளி கள்-நிலப்பிரபுக்கள் நலன் காக்கும் அரசு தான் என்பது ஊரறிந்த ரகசியம்! ஆனால், தற்போது அதையும் தாண்டி உலக முத லாளிகளின் - நிலப்பிரபுக்களின் அரசாக தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ‘உலகறிந்த உண்மை’!

இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? இது புதுக்கதை அல்ல! இது 1990 களில் துவங்கிய பழைய கதைதான்! என்றாலும் கதையின் உச்சகட்டம் (கிளைமேக்ஸ்) இப்பொழுதுதான் ‘வெ(ள்)ளித்திரை’க்கு வந்துள்ளது.

1990களில் இந்திய ஆளும் வர்க்கத் தின் “சுரண்டல்” எல்லையை உலகளா விய அளவில் விரிவுபடுத்தப்போவதாக சொல்லப்பட்ட ஆசை வார்த்தைகள் தான் உலகமயம், தனியார்மயம், தாராளம யம்! அதாவது எல்பிஜி (டுஞழு) கொள் கை! அதாவது இந்திய முதலாளிகள் உலகத்தின் எந்த இடத்திலும் தொழில் தொடங்கலாம்; வர்த்தகம் செய்யலாம்! அதுபோல் உலக முதலாளிகளும் இந்தி யாவில் தொழில் தொடங்கலாம்; வர்த்த கம் செய்யலாம்! பொதுத்துறைகள் தேவையற்றது; தனியார் துறைதான் தேவையானது! இதனால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் பாயும் என்றார்கள்!

அதிலும் குறிப்பாக அணுசக்தி ஒப்பந் தம் ஏற்பட்டுவிட்டால், இந்தியாவில், கிரா மங்களில், நகரங்களில் வீட்டுப்பானை யில் இருக்கும் குடிநீரை ‘மொண்டு மொண்டு’ குடிப்பதுபோல், மின்சாரம் ஒவ் வொரு வீட்டிலும் ‘மண்டலம் போட்டு படுத்துறங்கும்’ என்று ‘பீலா’ விட்டார்கள்.

தற்போது ஜப்பானில் சுனாமி சீற்றத் தால், அணு உலைகள் ஒவ்வொன்றாக உடைந்து நொறுங்குவதையும், அதனால் வெளியேறும் உயிர்க்கொல்லி கதிர்வீச்சு பரவுவதையும் கேள்விப்பட்டவுடன், நம் நாட்டு அணு உலைகள் எல்லாம் பாது காப்பாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஜப்பானின் அணு உலை களை கட்டிய, ‘ஐஎஸ்ஐ முத்திரை’ குத்திய, அதே சர்வதேச அணுசக்தி முகமை (கழகம்) வழிகாட்டுதலில்தான், அல்லது மேற்பார்வையில்தான் இங்கும் கட்டப்பட்டிருக்கும்; கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதை அடிக் கோடிட்டுக்கொள்வோ மாக!

ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு குறைந்த பட்ச செயல்திட்டமும், இடதுசாரிகளின் ஆதரவும் இருந்ததால்தான் அந்த அரசு ஓர ளவு அடக்கி வாசித்துக்கொண்டிருந்தது எல்பிஜி கொள்கையில்! தற்போதைய ஐ.மு.கூட்டணி-2 அரசுக்கு அத்தகைய குறைந்தபட்ச செயல்திட்டமோ, இடது சாரிகளைப்போல் மக்கள் நலன் சார்ந்த நிர்ப்பந்தமோ- அதாவது பிரதமர் மன்மோ கன் சிங் பாஷையில் சொன்னால், இந் திய இடதுசாரிகளின் கொத்தடிமையாக அவை இல்லாத காரணத்தினால், இன் றைக்கு இந்திய அரசு, அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கொத்தடிமையாக இருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

இந்திய இடதுசாரிகள், இந்திய மக்க ளின் நலன் சார்ந்து தந்த நிர்ப்பந்தங் களை, ‘என்னை இடதுசாரிகள் கொத்தடி மையாக நடத்தினார்கள்’ என்று வர்ணித் தார்; வருத்தப்பட்டார்! ஆனால், தற்போது ‘விக்கிலீக்ஸ்’ “லீக்” செய்திருக்கும் பல விஷயங்களில் ஒன்றான - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்தியாவிலுள்ள அமெரிக் கத் தூதரகத்திற்கு எழுதிய ‘ஓலை’யில், மன்னிக்கவும், அன்பு வேண்டுகோளுக்கு மன்மோகனார் என்ன சொல்லப்போகி றார்? வழக்கமாக எல்லாவற்றிற்கும் என்ன சொன்னாரோ... அதைத்தான் இதற்கும் சொல்லப்போகிறார்!

ஐயா, பாரதப்பிரதமரே! நாட்டின் அரசியல் சட்டப்படி ஆளும் அதிகாரம் படைத்தவரே...! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதே... தெரியுமா? எனக்குத் தெரிந்த 2ஜி என்னவென்றால்-ஒன்று சோனியா ‘ஜி’, இன்னொன்று ராகுல் ‘ஜி’ ; மற்றபடி எந்த ‘ஜி’யும் எனக்குத் தெரியாது? இந்திய விண்வெளித்துறையில் (இஸ் ரோ) 3ஜி அலைக்கற் றையில் ஊழல் நடந் திருக்காமே... அது தெரியுமா? அப்படி யொரு ‘ஜி’யும் இருக்கிறதா? அதுவும் தெரி யாது! கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீட்டில் ஊழல் நடந் திருக்கிறதே, அதுவாவது தெரியுமா? அப் படியா...! அதுவும் தெரியாது! காமன் வெல்த் நாடுகள் விளையாட்டில், ஊழ லும் புகுந்து ‘விளையாடி’ இருக்கிறதே... அதாவது தெரியுமா? விளையாட்டில் எனக்கு ஆர்வமே இல்லை; நேரமும் இல்லை; அப்படி ஒன்றும் நடந்ததாகவும் எனக்குத் தகவல் இல்லை. ஆக அதுவும் எனக்குத் தெரியாது.

ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு நம் பிக்கை கோரும் தீர்மானத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாவது தெரியுமா? அதுவும் தெரியாது! பிரணாப் முகர்ஜியை - ஏன் நிதி மந்திரி ஆக்கினார்கள்; மாண் டேக் சிங் அலுவாலியாவை ஏன் நிதிமந் திரி ஆக்கவில்லை; சிதம்பரத்தை எதற்கு உள்துறை மந்திரி ஆக்கினார்கள்; கமல் நாத்திடமிருந்த வர்த்தகம், தொழில்துறை களை ஏன் எடுத்தார்கள்; ஆனந்த் சர்மா வை எதற்கு வர்த்தகம், தொழில்துறை மந்திரியாக போட்டார்கள்? என்று கேள் விமேல் கேள்வி கேட்டு, அதையெல்லம் உளவுபார்த்து (மன்னிக்கவும்-விசாரித்து) ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என அமெ ரிக்க வெளியுறவுத்துறை, இந்தியத் தூதர கத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறதே... அதாவது தெரியுமா? அதுவும் தெரியாது!

டாக்டர் மன்மோகன் சிங் நாட்டின் பிரதம மந்திரியா? ‘தெரியாது’ துறை மந்தி ரியா? என்று நமக்குத் தெரியவில்லை! ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது- இவ ருக்கு பிடித்த ஒரே வார்த்தை... “தெரி யாது!” என்பதுதான். இப்படிப்பட்ட பிரதம மந்திரி நமக்கு கிடைத்தது மிகப் பெரிய ‘துரதிர்ஷ்டம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய வரலாற்றிலேயே இது வரை நடந்திராத ஊழல், லஞ் சம், அமெரிக்கவிடம் தஞ்சம்; இந்திய உழைப்பாளிகளுக்கு வஞ்சம்; அந்நிய - இந்திய பெரு முதலாளிகளுக்கு பட்டுக்குஞ் சம்; மொத்தத்தில் இந்திய மக்க ளுக்கு பஞ்சமா பாதகம்! இத் தனையும் செய்துவிட்டு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஹை டெக் முதலாளிகளாக தமிழகத் தில் திகழும் திமுகவுடன் இளைய பங்காளியாக ‘ஈ‘ என்று இளித்துக்கொண்டும், “நீயும், நானும் ஒண்ணு; ஜனங்க வாயில மண்ணு!” என்று தமிழக மக்க ளின் காதுகளில் பூ சுத்த வரு கிறது திமுக-காங்கிரஸ் கூட்டணி!

இத்தகைய கேடுகெட்ட கூட்டணிக்கு, அதாவது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, தமிழக வாக்கா ளர்களுக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த் தை என்ன தெரியுமா? “படுதோல்வி!” ஆம், எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழ கத்தில் நடைபெறவுள்ள 14வது சட்ட மன்றத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி காதுகளில் ஒலிக் கப்போகும் ஒரே தமிழ் வார்த்தை “படு தோல்வி!”. இதுவும் பிரதமருக்கு தெரியா மல் போக வாய்ப்பில்லை! அதனால்தான் ‘ஸ்பெக்ட்ரம்’ கரன்சி நோட்டுகளோடு பகல் கனவு காண்கிறார்கள்! என்றாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு, தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தையாக “படுதோல்வி” அமையும் என்பது மட்டும் நிச்சயம்!

பி.தங்கவேலு

Thursday, March 10, 2011

‘இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது



அலைக்கற்றை ஊழலில் நடந்தது தனக்கு எதுவுமே தெரியாது என்றார். எல்லாம் அமைச்சர் ராசா செய்த வேலை,ராசாவை மந்திரியாக்கியது கூட்டணி நிர்ப்பந்தம், என்ன செய்வது என்று கைவிரித்தார்.

அடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சம்பந்தப்பட்ட எஸ்-பேன்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக நடைபெறவிருந்த ஊழல். பல லட்சம் கோடி ரூபாய் பெறுமான அலைகற்றைகளை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்க ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதுவும் தனக்குத் தெரியாது என்றார்.அந்த ஒப்பந்தத்திற்கு 2005ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் இல்லாத அமைச்சரவைக் கூட்டம் ஏதாவது நடந்ததா என்ன? நடக்குமா என்ன?
இப்போது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இன்னும் வழக்கு நிலுவையில் உள்ள பி.ஜே.தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை நியமித்ததற்காக மத்திய அரசை நீதிமன்றம் கண்டித்தும் உள்ளது. அவரை நியமனம் செய்த குழுவின் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங் (உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மற்ற இரண்டு உறுப்பினர்கள்).
ஒரு ஊழல்வாதியை ஊழல் தடுப்பு ஆணையராக எப்படி நியமித்தீர்கள் என்று கேட்டால் அவர் மீது வழக்கு இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். அந்தக் குழுவின் உறுப்பினராக இருந்த சுஷ்மா சுவராஜ் தாமச் மீது வழக்கு இருப்பது பற்றி சொல்லியிருக்கின்றார். அதையும் மீறி நியமித்து விட்டு இப்போது கேட்டால் என்ன சொல்கிறார், தனக்கு தெரியாது. அமைச்சர் பிருதிவிராஜ் சவுகான் தனக்குக் கொடுத்த குறிப்பில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மீது பழி போடுகின்றார். சுவராஜ் சொல்லியிருக்கின்றாரே என்று கேட்டால் தாமஸ் கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர். மத்திய தொலை தொடர்புத் துறையின் செயலாளராக இருந்திருக்கிறார். ஆதலால் அவர் மீது ஊழல் வழக்கு எதுவும் நிலுவையில் இருக்காது என்று நினைத்தேன் என்கிறார். அதாவது இத்தகைய பதவிகளுக்கு ஒருவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் மீது வழக்கு எதுவும் இருக்கவில்லை என்றால்தான் நியமிப்பார்கள். நினைத்தாராம். மாட்டிக் கொண்ட திருடர்கள் இப்படித்தான் பதில் சொல்வார்கள் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகளுக்கும், ஏன் சாமான்ய மக்களுக்கும் கூடத் தெரியும்.

கடைசியாக தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இந்தப் பதிலும் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் கூட வரவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்ட பின்னர்தான் வருகின்றது. அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே இடதுசாரிகளும், பாஜக உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்போதெல்லாம் தாமஸை நியமித்தது சரிதான் என்று சாதித்தார். அவரது கட்சியும் சாதித்தது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றார்கள். தாமசுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் அதை ஏற்றுக் கொள்கின்றோம் என்றனர். இப்போது திருவாளர் பரிசுத்தம் முழுப் பொறுப்பேற்கிறாராம். ஒரு வேளை யாரும் நீதிமன்றத்திற்கே போகாமல் இருந்திருந்தால், யாரும் கேள்வியே எழுப்பாமல் இருந்திருந்தால் பாமாயில் ஊழல் வழக்கில் குற்றவாளியான தாமஸ் ஊழல் கண்காணிப்பு ஆணையராகத் தொடர்ந்திருப்பார். 2ஜி அலைக்கற்றை ஊழல் நடந்த நேரத்தில் தொலைதொடர்புத் துறையின் செயலாளராக இருந்தவரை, ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமித்தால், அவர் ஊழலைத் தடுப்பாரா என்ன? குற்றம் செய்தவர்களைக் கூண்டில் நிறுத்துவாரா என்ன?

ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் என்று சொல்லிக் கொண்டே போய் புதிய புதிய உண்மைகளைக் கக்குகின்றார். 1992ல் தொடரப்பட்ட ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்வோம். அவர் எப்படி கேரள மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்? அவர் எப்படி தொலைதொடர்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்?
மன்மோகனைப் பொறுத்த வரையில் தாமஸ் விஷயத்தில் இரண்டு முறை குற்றம் செய்திருக்கின்றார். தன்னுடைய அமைச்சரவையின் ஒரு துறைக்கு அவரை செயலாளராக நியமித்திருக்கின்றார். பின்னர் மீண்டும் அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்திருக்கின்றார்.

கடந்த பிப்ரவரி 16ம் தேதி தொலைக்காட்சிகளின் ஆசிரியர்களுக்கு அளித்த பேட்டியில் தான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் பதவியிலிருந்து விலகும் எண்ணமே தனக்கு வந்ததில்லை என்றார் மன்மோகன். அவை இப்படிப்பட்ட வேலைகள்தானோ என்னவோ? தன்னை இந்த ஊர் இன்னும் நம்புவதாக அவர் உறுதியாக நம்புகின்றார். ‘இன்னுமா நம்மள இந்த ஊர் நம்புது’ என்று அவராகவே கேட்டாலும் நம் ஊடக மேதாவிகள் அவரை திருவாளர் பரிசுத்தம் என்று இட்டுக் கட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அசோகன் முத்துசாமி

Friday, February 11, 2011

உலகமயத்தின் ஊழல் புரோக்கர் மன்மோகன்சிங்


1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக் கும் பிரதமருக்கும் சம்பந்தமில்லை என் றார்கள். ஆம், சம்பந்தமில்லைதான். ஏனெனில் அவர் இவ்வளவு சின்னத் தொகையிலெல்லாம் கை வைக்க மாட் டார். எதுவாக இருந்தாலும் 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் எஸ்- பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல். (எஸ்- பேண்ட் என்பது மிக உயர்ந்த வகை அதிவேக அலைக்கற்றை).

நேரடியாக மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் விண்வெளித் துறையின் கீழ் இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்ஓ) வரு கின்றது. அதன் வர்த்தகப் பிரிவு ‘ஆன்ட் ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற தனி யார் நிறுவனத்திற்கும் இடையில் 2005ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்படுகின் றது. அதன்படி அந்த தனியார் நிறுவனத் திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற் றையை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட லாம் என்று மத்திய தணிக்கைத் துறை மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின் றன. எப்படி?

வெறும் 15 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை மட்டுமே 3ஜி ஏலத்தில் விற்கப்பட் டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் சுமார் 67,719 கோடி ரூபாய். தேவாஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட விருந்ததோ 70 மெகா ஹெர்ட்ஸ். நான்கு மடங்குக்கும் மேல். ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு.

மேலும், இதே வகை அலைக்கற்றை 20 மெகா ஹெர்ட்ஸ் அளவு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பயன்படுத்த அனு மதிக்கப்பட்டது. அதற்கு வாங்கப்பட்ட கட்டணம் வெறும் 12,847 கோடி ரூபாய். மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எப்போதும் மக்களுக்கும், பொதுத்துறைக் கும் எதிரானவையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மக்களின் சுருக்குப் பைகளிலிருந்து கொள்ளையடித்து, முதலாளித்துவ திமிங் கலங்களுக்கு தீனி போடுவார்.

இந்த செய்தி ‘தி ஹிந்து’ குழும நாளி தழ்களில் வெளிவந்தவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு மறுப்பு வெளி யிடப்படுகின்றது. மேற்கண்ட நிறுவனத் திற்கு எஸ்-பேண்ட் அறைக்கற்றை ஒதுக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்ற கேள் வியே இல்லை என்பது அந்த மறுப்பின் சாராம்சம்.

ஆனால், ஒப்பந்தம் போட்டிருக்கின் றீர்களே திருவாளர் பரிசுத்தம் அவர் களே? ஏன், ஒப்பந்தம் போட்டீர்கள்? இப் படி ஒரு விவகாரம் நடந்திருப்பதே இது நாள் வரை மக்களுக்குத் தெரியாது. இப் போது அந்த பத்திரிகைகள் அம்பலப் படுத்தவில்லை என்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு இதே பிச்சைக் காசுக்கு நாட்டின் இயற்கை வளத்தை விற்றிருப்பீர் கள் இல்லையா? விற்றிருக்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. ஏனெனில், 2007லிருந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்த மாக புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. அதாவது அலைக்கற்றைகள் ஒதுக்கப் படுவதற்கு முன்பாகவே புகார்கள். ஆனால், அந்த புகார்கள் எதையும் பொருட்படுத்தாமல், நீங்கள் முடிவு செய்தபடியே அலைக்கற்றைகள் ஒதுக்கி னீர்கள். எதிர்ப்பு வந்தபோதே அப்படிச் செய்த நீங்கள், விஷயமே வெளியில் தெரி யாமல் இருந்திருந்தால் இந்த ஊழலை யும் செய்யாமலா இருந்திருப்பீர்கள்?

பொதுத் தணிக்கைக் குழு இந்த ஒப் பந்தத்தை இன்னும் ஆராய்ந்து கொண் டிருப்பதாகக் கூறுகின்றது. அது இழப்பு குறித்து இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றது உண்மைதானே? அப்படி விற்க ஒப்புக் கொண்டதே ஊழல்தானே? பிஎஸ்என்எல்லிடமும் எம்டிஎன்எல் லிடமும் வாங்கப்பட்ட கட்டணத்தைக் கணக்கிட்டாலே ரூ.40,000 கோடிக்கு மேல் வருகின்றது.

பொய்களுக்கு அளவேயில்லை. அலைக்கற்றை எதுவும் ஒதுக்கப்பட வில்லை என்கிறார் பிரதமர் (அலுவலகம்). ஆனால், அந்த தனியார் நிறுவனம் தன் னுடைய அகண்ட அலை வரிசை சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு தொலைத்தொடர்புத் துறை அலைக் கற்றை ஒதுக்கியிருக்கின்றது. அதை இப்போது அந்த துறை திரும்பப் பெறப் போவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, தேவாஸ் நிறுவனத்திற்கு விற் பது என்பதை திட்டவட்டமாக முடிவு செய்து விட்டார்கள். இல்லை என்றால், எதற்கு அந்நிறுவனம் தன்னுடைய சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அலைக்கற்றை வழங்க வேண்டும்?

இந்த ஒதுக்கீட்டுக்கு முன்னர் அதற்கான பொது அறிவிப்போ, ஏலமோ, டெண் டரோ விடப்படவில்லை. 2ஜி ஒதுக்கீட் டிற்கு ஏலம் விடுங்கள் என்று மன்மோகன் சிங் அமைச்சர் ராசாவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், ராசா அதையும் மீறி தன்னிஷ்டம் போல் ஒதுக்கீடு செய்தார் என்று சிலர் எழுதி வருகின்றனர். அதா வது, பிரதமர் நல்லவர், ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதைப் போல. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் ‘முதலில் வந்தவருக்கு முன்னுரிமை’ என்பது கூட கடைப்பிடிக்கப்படவில்லை. அப்படியானால் மன்மோகன் சிங்கை என்ன செய்ய வேண்டும்?

ஏன் ஏலமோ டெண்டரோ விடப்பட வில்லை என்கிற கேள்விக்கு இஸ்ரோ வின் இந்நாள் தலைவர் ராதாகிருஷ்ண னும், முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனும், ‘2003ல் தேவாஸ் மல்டிமீடியாவு டன் பேச்சு வார்த்தை துவங்கியபோது... வேறு நிறுவனங்கள் எதுவும் இருக்க வில்லை’ என்று பதிலளித்திருக்கின்றனர். வேறு நிறுவனங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது பொது அறிவிப்பு வெளியிட்டால்தானே தெரியும்? அதைச் செய்யாமலேயே வேறு யாரும் இல்லை என்று முடிவிற்கு வருவது எப்படி சரி யாகும்?

இந்த ஒப்பந்தம் பற்றி பிரதமருக்கே தெரியாது என்கிறார்கள். நாங்கள் அரசாங் கத்திற்கே தெரிவிக்கவில்லை என்கிறார்கள். அவர்களது கூற்றுப்படியே இந்த விஷயம் விண்வெளி ஆணையம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தில் அமைச்சரவைச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை யின் ராஜாங்க அமைச்சர் (இத்துறைக்கு பிரதமர்தான் காபினட் அமைச்சர்) ஆகி யோர் உறுப்பினர்கள். இணை அமைச் சருக்கும், அமைச்சரவைச் செயலாளருக்கும் தெரிந்த விஷயம் பிரதமருக்குத் தெரி யாது என்றால் யாராவது நம்புவார்களா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய் சொல்கிறார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“2005ல் மத்திய அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்ரோவுடனான எங்களது ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பின்னர்தான் செயற்கைக்கோள் மூலமாக இணையதள சேவை வழங்கும் எங்களது திட்டத்தை வளர்க்கத் துவங்கினோம்’’ என்று தேவாஸ் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் விஸ்வநாதன் ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு (ஆகஸ்ட் 23, 2010) பேட்டியளித்துள்ளார். (தி ஹிந்து. 9.2.11). அப்படியெனில், பிரதமருக்குத் தெரியாது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அல்லவா?

ஊழல் மேல் ஊழல் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் போல் வேறெப்போதும் இவ்வளவு ஊழல்கள் நடந்ததில்லை. ஆனால், மன்மோகன்சிங் மீது குற்றம் எதுவும் இல்லை என்று சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து பிதற்றி வருகின்றார்கள். நற்சான்றிதழ் கொடுப்ப வர்களின் யோக்கியதையைப் பார்த்தாலே மன்மோகன் சிங்கின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக, 1980களில் நிதி வருவாய் தொடர்பான ஊழல்கள் வெறும் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1991-96 கால கட்டத்தில் மட்டும் 26 ஊழல்கள் நடந்தன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டு காலத்தில் சிறுநாடு களின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அள விற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010).

இன்னும் எத்தனை ஊழல் நடந்திருக்கின்றதோ நமக்கு இப்போது தெரியாது. ஆனால், இவை அனைத்தும் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர் தான் இவ்வளவு பெரிதாகவும், இவ்வளவு அடிக்கடியும் நடந்து கொண்டிருக்கின் றன என்பது மட்டும் நிச்சயம்.

அசோகன் முத்துசாமி

Monday, January 24, 2011

பிரதமரை, காங்கிரஸ் கட்சி வாடகைக்கு எடுத்துள்ளது



பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் ரயில்வே சரக்கு கட்டண உயர்வால் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. விலைவாசியை சந்தைதான் தீர்மானிக்கும் என்ற அரசின் தவறான கொள்கையால் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகள் மட்டுமே பயனடை கின்றனர்.

மத்திய அரசு உள்நாட்டு மக்களை பற்றி கவலைப் படாமல் இந்திய சந்தையை உலகச் சந்தையோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதற்காக உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளும் சிபாரிசு செய்த பிரதமரை காங்கிரஸ் கட்சி வாட கைக்கு எடுத்துள்ளது.

டாடா, அம்பானி கம்பெனி முதலாளிகளின் பினாமியாகவே உள்ளார்.

உணவுக் கிடங்குகளில் தேங்கி கிடக்கும் தானியங்களை எலிகளுக்கு தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமுடியாது என்கிறார்.

கருப்பு பணம் ஸ்சுவிஸ் வங்கியில் போட்டுள்ள திருடர்களின் பட்டியலை வெளியிட முடியாது அதை நீதிமன்றம் கூட கேட்க கூடாது என்கிறார்.

முன்று முறை தேர்தலில் ஓட்டுபோடதவர்

தேர்தலில் மக்களை சந்திக்காதவர்

இந்திய குடியுரிமை இல்லாமால் இருந்தவர்

எனவே தான், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி அறியாமல், ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாமல் உள்ளார்.

அனைவருக்கும் இல வசக் கட்டாயக் கல்வி கொடுப் பது என்ற தனது கடமையை அரசு கைகழுவி வருகிறது. காசு இருப்பவர்களுக்கே கல்வி, மருத்துவம் என்று செயல்படுகிறது. அனை வருக்கும் பாதுகாக்கப் பட்ட சுத்தமான குடிநீர் வழங்காததும் இதன் வெளிப் பாடுதான்.

கடுமையான விலையேற்றம், மின்வெட்டு போன்றவை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விசைத்தறி தொழில் முடங்கிப்போய் உள்ளது. ஆனால் பஞ்சு ஏற்றுமதி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2012ம் ஆண்டிலும் மின்வெட்டு பிரச்சனை தீராது. விலை வாசி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மானியம் கொடுப்பதால் மட்டும் பிரச்சனை தீராது.

சென்னை நகரில் ஆங் காங்கே சாலைகள் தோண் டப்படுவதும், சாலையே இல்லாத தெருவில் நடை மேடை கட்டுவதும் எதனால்? தனது கட்சியின் முன்னணி ஊழியர்களை பணக்காரர்களாகவும், ரவுடி களாகவும் மாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதன்விளைவுதான் சிபிஎம் தலைவர் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதனை செய்ய மத்திய அரசு மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களை பாதிக் கிறது. மக்களுடைய கோபம் தான் ஆட்சியாளர்களை அடிபணியச் செய்யும்.

டி.கே.ரங்கராஜன்

Wednesday, December 1, 2010

பிரதமருக்கு தெரியாமல் நடந்ததா?

_______________
"திருவாளர் பரிசுத்தம் என்று மன் மோகன்சிங் குறித்து ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் உருகிக் கரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது உங்களால் தரையை ஈரமில்லாமல் வைத்திருக்க முடியாது."
_______________

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)