Showing posts with label மக்கள் நலப்பணியாளர்கள். Show all posts
Showing posts with label மக்கள் நலப்பணியாளர்கள். Show all posts

Thursday, November 10, 2011

“ஏசுவைக்கூட ஒருமுறைதான் சிலுவையில் அறைந்தார்கள்”


ஜெயலலிதா பதவியேற்ற இந்த ஆறுமாத காலத்திற்குள் அவரது அரசு  செய்திருக்கும் அட்டூழியங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.  தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர் கல்வியை ஓரங்கட்டியது, பரமக்குடியில் ஏழு தலித்களை சுட்டுக்கொன்றது, அண்ணா நூலக இடமாற்றம், 13500 மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் என  இதுவரை அரங்கேறியிருக்கிறது.

ஈவிரக்கமில்லாமல் 13,500 மக்கள் நலப் பணியாளர் வீடுகளின் விளக்குகளை ஊதி அணைத்திருக்கிறார் ஜெயலலிதா. அவர் பதவிக்கு வரும்போது ஒவ்வொரு முறையும், இப்படியாக ஆயிரக் கணக்கில் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யும் குரூர மனோபவம் கொண்டவராக இருக்கிறார். அந்த சாதாரண, உழைத்து வாழும் எளியவர்கள் அதிர்ச்சியடைந்து, கதறுவதைப் பார்ப்பதில் என்ன திருப்தியோ, தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் இந்த அடாவடித்தனத்திற்கு கடும் எதிர்ப்பு  எழுந்திருக்கிறது.  சி.பி.எம். சி.பி.ஐ, தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க என பல கட்சிகளும் ஜெயலலிதாவின் அராஜகத்தைச் சாடியிருக்கின்றனர். சி.ஐடியூ, விவசாயிகள் சங்கம், அரசு ஊழியர் சங்கங்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன.

பத்திரிகையில் செய்தி பார்த்து நேற்று மக்கள் நலப் பணியாளர்கள் கொதித்து வீதிக்கு வந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஈரோட்டில் காளியம்மாள், “வேலை போய்விட்டதே. குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவேன்” எனத் தரையில் உருண்டு கதறியிருக்கிறார். திண்டுக்கல்லில் நாகலட்சுமி, “ஒவ்வொருமுறையும் எங்களை டிஸ்மிஸ் செய்து அவமானப்படுத்துகிறது அரசு. நாங்கள் மக்களுக்குத்தானே பணியாற்றினோம். எங்களைத் தூக்கில் போடுங்கள் அல்லது வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தோடு வெட்டிக் கொல்லுங்கள்.” எனக் கண்ணீர் வடித்திருக்கிறார்.

அமலோற்பவம் என்னும் பணியாளர், “ஏசுவைக்கூட ஒருமுறைதான் சிலுவையில் அறைந்தார்கள். எங்களை இந்த அரசு மூன்றுமுறை சிலுவையில் அறைந்து விட்டது” என்றார். மாநிலப் பொருளாளர் ரங்கராஜன், “எங்களில் அனைவரும் ஐம்பது வயதைக் கடந்து விட்டோம். இனி நாங்கள் எங்கு சென்று எந்த வேலை பார்க்க முடியும். எங்களை நம்பியுள்ள குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.” என்றார்.

பாசிசத்திற்கும், அதிகாரத் திமிருக்கும் ஏழையின் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. சாமானியர்களின் துயரங்களையும், , வலிகளையும் அது ரசிக்கவேச் செய்யும். ஆனால் இன்னும் நான்கரை வருடங்கள் கழித்து பொறுத்திருப்போம் என்றிருக்காமல், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினால், உடனடியாகவே கணக்குத் தீர்க்க முடியும்.

Wednesday, November 9, 2011

மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ்: ஜெயலலிதாவின் கொடூரம்!


கையெடுத்துக் கும்பிட்டபடி, இரண்டு விரல்களை அசைத்தபடி மக்களிடம் ஒட்டுக் கேட்க வந்த ஜெயலலிதா இவர் இல்லை. கோரப்பல் முளைத்த அதிகார ரூபத்தில் காட்சியளிக்கிற  உருவம் இது. மிக்ஸி தருவேன், கிரைண்டர் தருவேன், ஆடு தருவேன், மாடு தருவேன் என அள்ளிவிட்டவர், இதோ இருந்த வேலையையும் பிடுங்கிக்கொண்டு விட்டார். அவரது வழக்கமான பாணியில் ஒரே நாளில் 13500 மக்கள் நலப்பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை உருவாக்கவும், அவற்றின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திமுக அரசு 2.7.1990ல் 25ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் ரூ.200 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது.

ஆனால், 10 மாத காலமே பணி செய்த இவர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எவ்விதக் காரணமும் இன்றி 1991 மே மாதத்தில் பணி நீக்கம் செய்தது. இதன்பிறகு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 1997ல் மாதம் ரூ.500 தொகுப்பூதியத்தில் திமுக அரசு இவர்களை பணியமர்த்தியது. பின்னர் மேலும் 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

2001ம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006ல் திமுக அரசு இவர்களை பணியில் அமர்த்தி மாதம் ரூ.1000 வீதம் தொகுப்பூதியம் வழங்கி ஆணையிட்டது.

மக்கள் நலப்பணியாளர்களின் சரிபாதி பேர் பெண்கள். மேலும் இவர்கள் அனைவரும் 40வயத்திற்கும் அதிகமானவர்கள். பணி நியமனம் பெற்று 2 முறை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. இந்த வேலையை நம்பி இவர்கள் இருந்து விட்டதால் வேலைவாய்ப்பக பதிவு மூப்பும் கலாவதியாகி விட்டது. அரசுப் பணிகளுக்கான வயது வரம்பும் கடந்து வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகின்ற மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மக்கள் நலன் சார்ந்த பணிகளை கடுமையாக பாதிக்கும் என்பதுடன், மக்கள் நலனில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கொடூரமான இந்த அரசாணையை திரும்ப பெற்று மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் இடையறவு (பிரேக்) இன்றி பணியில் தொடர வழிவகை செய்ய வேண்டும். நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், மக்கள் நலப்பணியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் போராட நேரிடும் என்றும் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்று  ஆறு மாதங்களே ஆகியிருக்கின்றன. அதற்குள் தமிழகத்தில் இந்த அம்மையார் நடத்தியிருக்கும் அழிச்சாட்டியங்களும், அடாவடித்தனங்களும் பெரும் பட்டியலாய் நீண்டுகொண்டே இருக்கிறது. முணுமுணுத்த மக்கள் இப்போது கோபம் கொள்ளத் துவங்கியிருக்கின்றனர்.

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)