உலகில் மிக அதிக அளவில் திருடப்பட்ட இணைய அந்தரங்க
தகவல்கள் ஈரானியர்களுடையது, இதற்கு நிகராக இந்தியர்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. ப்ரிசம் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து 4 பாகங்களில்
அதன் செயல்பாடுகளை விவரித்தோம்.
முந்தைய பதிவு: 4) ஒரு ஹாலிவுட் படம் உண்மையாகிறது ...
ஒரு நாட்டின் அனுமதியின்றி அந்த மக்களை உளவு செய்வது
மிக அதிர்ச்சிகரமான விஷயம். அதுவும், பேஸ்புக், டுவிட்டர், பிளாக்கர், யூடியூப் போன்ற
இணைய தளங்களின் சேவைகளை அனுகினால், நம்
அந்தரங்கத்தை விலைகொடுத்தே ஆகவேண்டும் என்ற
நிலைமை இருப்பதும், அது குறித்து நம்மால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது.
அமெரிக்க நாளேடுகளின் கேலிச் சித்திரம் |
இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு போகும் நிலையில்
நாம் ஏன் தள்ளப்பட்டோம்? – ஒவ்வொரு தனி மனிதனின் தகவலும் மெட்டா டேட்டாக்களாக இன்றைக்கு
வரை அமெரிக்க உளவு கணினியில் சேகரமாகிறது. இந்தப் பிரச்சனை குறித்து ‘தனி நபர் சுதந்திரம்’,
‘கருத்து சுதந்திரம்’ பற்றி பேசும் இந்திய ஊடகங்கள் போதுமான வெளிச்சத்தை செலுத்தவில்லை.
எனவே, அவர்களின் மூலமே உலகத்தை அவதானிக்கும் இந்திய மத்தியதர வர்க்கத்துக்கும் இன்னும்
ரெளத்திரம் வரவில்லை.
இந்திய அரசாங்கத்தின் சார்பில் சல்மான் குர்சித்
வாய் திறந்திருக்கிறார். முதலில் அரசு இது குறித்து ‘சர்ப்ரைஸ்ட்’ என்றது. திகைப்பாக
இருந்ததாம். இப்போது நம் அமைச்சர், “கணினி எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த தொழில்நுட்ப
தகவல்களைத்தான் அவர்கள் கண்கானிக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
உண்மை இதுதானா? – இல்லை என்கிறார் எட்வர்ட் ஸ்னோடன்.
அமெரிக்கா தன் நாட்டின் உள்ளேயும், மற்ற நாடுகளிலும் ஒவ்வொரு இணைய, ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளரின்
தகவலையும் – தானியங்கி முறையில் திரட்டியது என்று சொல்கிறார். அதாவது இன்றைய நமது உரையாடலை
நாம் மறந்துவிட்டாலும், அந்தக் கணினி மறக்காது.
இந்திய அரசும் அப்படியொரு சர்வைலன்ஸ் திட்டத்தை
வைத்திருப்பதும் தற்போது வெளிவந்திருக்கிறது. (இது தொடர்பான செய்தி) செண்ட்ரலைஸ்ட் மானிட்டரிங் சிஸ்டம் என
பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.400 கோடி. இது பயன்பாட்டுக்கு
வந்தால், ஒவ்வொரு தொலைபேசி பேச்சையும், ஆன்லைன் தகவல் தொடர்பையும் உடனுக்குடன், பாதுகாப்பான
முறையில் திருட முடியும்.
இந்திய உளவு விளக்க வரைபடம் | நன்றி; இந்து |
சட்டப்படி ஒருவரின் தகவலை, தேவையின் அடிப்படையில்
படிப்பதென்பது வேறு, ஆனால் உடனுக்குடன் கண்கானிப்பு, எந்த சட்ட முறைகளும் இல்லாமல்
களவாடுவது, தொலைபேசி பேச்சுக்களை பதிவு செய்வது என்ற இந்த திட்டம் 2013 – 2014 ஆண்டுகளில்
செயலாக்கத்துக்கு வரும். 1 லட்சம் தொலைபேசிகளில் இருந்து மாதத்துக்கு 7500 முதல்
9000 அழைப்புகளை பதிவு செய்திட முடியும்.
ஆதார் அட்டைகள் வெகு வேகமாக வழங்கப்பட்டு வரும் பின்னணியில்
இதனை சிந்தித்தால் அந்த திட்டத்தின் வீச்சு நமக்கு புரிகிறது. நம்முடைய வாங்கும் திறன்,
செலவளிக்கும் முறை, தனி நபரின் பலம், பலவீனம், நட்பு வட்டம், தொழில் தொடர்புகள் என
அனைத்தையும் இந்த முறையில் கண்கானிக்க முடியும்.
அரசு ஒருத்தனை கட்டம்கட்டிவிட்டால், அரசிடம் உள்ளதுபோன்ற
தகவல் தொழில்நுட்ப வசதிகள் வைத்திருப்போர் இந்த உளவுத் தகவல்களை படிக்க முடிந்தால்
– நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஊடுருவ முடியும். மிகப்பெரிய சிந்தனைப் பேரழிவை
நிகழ்த்த முடியும்.
உதாரணமாக
– ஒருவர் குறிப்பிட்ட சில நல்ல புத்தகங்களை
வாங்கி படித்திருக்கிறார் என்றால் – அவருடைய சிந்தனையை சிதைக்கும் வகையில்,
திட்டமிட்ட
விளம்பரங்கள், மூன்றாம்தர இணையங்களை அவருக்கு பரிந்துரைக்க முடியும்.
ஒருத்தரின் உளவியலைக்
கண்டறிந்து, அதனடிப்படையில் அரசின் தவறுகளை விமர்சிக்காதவாறு தடுக்க
முடியும். மதச் சண்டைகள், சாதிய மோதல்கள், கலாச்சாரக் கேடுகளை உருவாக்க
முடியும். இன்றைய அரசு ஏராளமான குற்றங்களை புரிந்துவரும் நிலையில், நம்
சிந்தனைகளை சிதைக்கும் பலமும் கிடைத்தால் - பின் அவர்கள் எதற்குத்தான்
அஞ்சுவார்கள்???
நிராயுதபாணியாக
இருக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும்
இப்படிப்பட்ட தாக்குதல்கள் நம்மை மேலும் அடிமை நிலைக்கே இட்டுச் செல்லும்
ஆபத்து உள்ளது. இந்த அடிமைச் சிறையாக இணையம் மாறுவதைத் தடுப்பது நம்
ஒவ்வொருவரின் கடமை.
முந்தைய பதிவு: 4) ஒரு ஹாலிவுட் படம் உண்மையாகிறது ...
0 comments:
Post a Comment