நேற்று
(01.07.2013) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், முகம் மறைத்த பெண்ணின்
பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. தனக்கு மயக்க மருந்து கலந்து, சுய
விருப்பமில்லாமல் ஒரு ஆணோடு படுக்கையறையில் விட்டதாக அவள் சொல்லும்போது
நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.
14
வயதில் கர்ப்பம் தரித்திருக்கிறாள் அந்தப் பெண். சென்னை பீச் அருகேயுள்ள
ஒரு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெற்றவர்கள் - அந்தக் குழந்தையை
யாருக்கோ கொடுத்துவிட்டார்களாம். குழந்தையை கொலை செய்தீர்களா? சினிமா
தயாரிப்பாளர்களுக்கு உங்கள் மகளை அனுப்பி வைத்தீர்களா? என்று ஆவேசமாகக்
கேட்டுக் கொண்டிருந்தார் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
இப்படி
வரம்பு மீறிய சம்பவங்களை மட்டுமே மையத் தளத்தில் வைத்து விவாதிக்கும்
தொலைக்காட்சிகளின் போக்கை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சிகள்
என்றல்ல, ஒவ்வொரு ஊடகமுமே - வரம்பு மீறிய, நடைமுறைக்கு நெருக்கமில்லாத
சம்பவங்களைக் குறித்தே அதிகம் பேசுகிறார்கள். பரபரப்பைக் கிளருவதில்தான்,
அவர்களின் வியாபாரமே அடங்கியிருக்கிறது.
சாதனைப்
பெண்கள் நம் சமூகத்தின் எந்த இடத்தில் வைக்கப்படுகிறார்கள்?, இந்திய
ஹாக்கி வீரர்கள் விமான நிலையத்தின் வாசலில் எந்த வரவேற்புமில்லாமல்
நிற்கவைக்கப்பட்ட காட்சி கண்முன் வந்து அகல்கிறது. அதுவே, விளம்பரங்களில்
கோடியாய்க் குவிக்கும், எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் அவருக்கான
மவுசைச் சொல்ல வேண்டியதில்லை.
தொலைக்காட்சியில்
வெளியான அந்த சம்பவத்தை பொருத்தமட்டில் - “என் அம்மாவுக்கு 10 ஆயிரம்
ரூபாய் இருந்தால் போதும், ஒரு புல் பாட்டில் வாங்கிக் கொடுத்தா என் அப்பாவை
கவுத்திடலாம். என் அண்ணனை மிரட்டினாலே போதும் என அவன் இரவு 2.30 மணிக்கு
என்னிடமே சொல்லுகிறான். கதவைத் தட்டி, அழுதேன் யாரும் வந்து கதவைத்
திறக்கவில்லை. இதுபோல நடந்தால் எனக்கு எப்புடி இருக்கும் மேடம்?!” என்று
அந்தப் பெண் கேட்டதுதான் மனசை உறுத்துகிறது.
அன்பும்,
சிந்தனையும் இருக்க வேண்டிய இடத்தில், பணமும், மதுவும் -
ஆக்கிரமித்திருக்கின்றன. ”நேற்று என்பது கையில் இல்லை, நாளை என்பது பையில்
இல்லை. இன்று மட்டுமே உன்னிடம் உண்டு” என சில சாமியார்கள் தத்துவங்களைப்
பொழிகிறார்கள். அந்த கார்பொரேட் சாமியார்கள் சொல்லும் கார்பொரேட்டுகளின்
தத்துவம்தான் நம் சக வாழ்வுக்கு யமனாகவும் அமைந்திருக்கிறது.
இன்றை
அனுபவித்துவிட வேண்டும் என்று திரும்பத் திரும்ப புகட்டும் ஊடகங்களின்
பிரச்சாரம். எங்கு திரும்பினாலும் காணக் கிடைக்கும் ஆடம்பரப் பொருட்களின்
வியாபாரம். ‘புதிதாக உடுத்து, புதிதாக வாழ்’ என்று கற்பிக்கும்
விளம்பரங்கள் என எல்லாமே மனிதனை ‘பணம் அன்றி வேறேதும் வாழ்க்கை இல்லை என்று
சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.
இரண்டாவதாக,
சிற்றின்பக் கனவுகளை விதைக்கும் வேலையை அரசுகளே செய்கின்றன. மது வியாபார இலக்கு நிர்ணயத்தையும், ‘அரசியல்’ ரீதியாக மட்டும் கத்திரியைத் தீட்டும் சென்சார் செயல்பாடுகளையும் என்னவென்று சொல்ல?
பெண்ணின் உடலை மையமாக வைத்துத்தான் பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் கட்டமைக்கப்படுவதையும் மறந்துவிடக் கூடாது.
பெண்ணின் உடலை மையமாக வைத்துத்தான் பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் கட்டமைக்கப்படுவதையும் மறந்துவிடக் கூடாது.
நமது சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணர வேதனையாக இருக்கிறது. நாம் ஏற்கனவே, நுகர்வுக் கலாச்சார மோகம் குறித்து “வீட்டுக்கொரு கொலைகாரன்”
என்ற தலைப்பில் படித்தோம். நம் வீட்டு ஜன்னலை மூடிக் கொண்டால்,
நமக்கொன்றும் பிரச்சனை இல்லை என்ற மனநிலை பலருக்கும் உள்ளது. ஆனால்,
வீடுகள் ஒவ்வொன்றும் பாதுகாப்பற்ற சிறைகளாக மாறி வருவதை எப்படி தடுக்கப்
போகிறோம்.
“வாங்கு,
அனுபவி, வீசு” என்ற நுகர்வுக் கலாச்சாரம் - பல விதங்களில் சமூகத்திற்கு
யமனாக இருக்கிறது. விதவிதமான விளம்பரங்கள் அச்சடித்த பிளாஸ்டிக் பைகள்,
நமது கைகளில் தவழ்ந்தபோது அறிவோமா, இது ஏதோவொரு மரத்தின் வேரில் நச்சாக
இருக்கப்போவதை? பெண்களை அரையாடையோடுஆட வைத்து காசு பார்க்கும்
வியாபாரத்துக்கும், மேற்சொன்ன பெற்றோரின் மனநிலைக்கும்... இந்த சமூக
அவலத்தை பதிவு செய்து விற்பனை செய்யும் தொலைக்காட்சிக்கும் ... ஏதாவது
வித்தியாசம் உண்டா?.
இவற்றை மாற்றியமைப்பது நம் கையில்தான் இருக்கிறது. சக மனிதர்களை, சக மனிதர்களாய்ப் பார்க்கும் உலகை நாம்தான் படைக்க வேண்டும்.
- சிந்தன் ரா
- சிந்தன் ரா
very sharp expression of your moral anger.
ReplyDeletePerfect view...
ReplyDelete