இணையத்தில் நாம் ரகசியமாக பதிந்து பராமறித்துவந்த தகவல்களை - அமெரிக்க உளவுத்துறைக்கு மொத்த குத்தகை விட்டவிவகாரத்தில் பேஸ்புக்கும், மைக்ரோசாப்ட்டும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்ல, யாஹூ நிறுவனம், அமெரிக்க அரசுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தியதாகவும் தெரிவித்திருக்கிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த இவர்கள் - அமெரிக்க மக்களின் கோபத்துக்கு ஆளாவதற்கு பயந்து அப்ரூவர் ஆகியிருப்பதாகத்தான் தோன்றலாம். ஆனால் அவர்கள் சொல்லியிருப்பதிலும் முழு உண்மை இல்லை.
பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: “அமெரிக்க அரசிடமிருந்து 9,000 முதல் 10,000 வேண்டுகோள்கள் பெறப்பட்டதாகவும். 2012 ஆம் ஆண்டின் பிற்பாதியில் தனது பயன்பாட்டாளர்களில் 18 ஆயிரத்திலிருந்து 19 ஆயிரம் பேர் வரை உளவு வளையத்தில் சேர்த்ததாகவும் சொல்லியிருக்கிறது.
மைக்ரோசாப்ட் தனது வெளிப்படைத் தன்மை அறிக்கையில் - அமெரிக்க அரசுக்கு 31 ஆயிரம் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் கொடுத்ததாகவும். 24 ஆயிரத்து 565 பேர் பற்றிய தகவல்களை அமெரிக்க அரசு கேட்டதாகவும் சொல்லியிருக்கிறது.
ஆனால், இந்த எண்ணிக்கைகள் குறைவு, உலகின் அனைத்து நாடுகளிலும், எந்த பயனரின் தகவல்களையும் தங்குதடையின்றி சேகரிக்க அனுமதியளிக்கப்பட்டதாகவும் எட்வர்ட் ஸ்னோடன் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, “அமெரிக்கா வேறெந்த எதிரி நாட்டையும் விட - தனது சொந்த குடிமக்களையே அதிகம் கவனித்து வந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரிசம் - திட்டத்தின் வீச்சு எந்த எந்த நாடுகளில், எவ்வளவு இருந்தது என்பதை கீழ்க்காணும் வரைபடம் காட்டுகிறது.
சமூக வளைத்தளங்கள், மற்றும் தொலைபேசிகளின் ரகசியக் குறியீட்டு எண்களை மிகப் பெரிய அளவிலான கணினி மற்றும், தொலைபேசி உறையாடல்கள் தொகுத்து, சேமிக்கப்பட்டுள்ளன. (இந்த சேமிப்புகளை மெட்டா டேட்டா என குறிப்பிடுகின்றனர்) 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்க கணினிகளில் இருந்து சுமார் 3 பில்லியன் தகவல்கள் இப்படி டேட்டாக்களாக எடுக்கப்பட்டுள்ளன.
மேலேயுள்ள மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வண்ணங்கள், - அமெரிக்கா பயன்படுத்தும் மென்பொருளில் உள்ளது. ஒரு உளவு அதிகாரிக்கு, எந்தெந்த நாடுகளில், எவ்வளவு தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாகும். உலகம் முழுவதும் சேமிக்கப்பட்டுள்ள தகவல் துண்டுகள் - 97 பில்லியனாக இருக்கலாம் என்கின்றன அந்த ஆவணங்கள்.
மிக அதிக தகவல்கள் திருடப்பட்டது இரானில் இருந்துதான். சுமார் 14 பில்லியன். பாகிஸ்தானில் 13.5 பில்லியன். ஜோர்டான் மூன்றாவது இடத்திலும். எகிப்து 4 வது இடத்திலும். இந்தியா 5 வது இடத்திலும் இருக்கிறது.
இந்த வரிசையைப் பார்த்தால் - ஒவ்வொரு நாட்டின் அரசியல் விவகாரங்களை மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகளையும் கணித்து - தனக்கு சாதகமான போக்குகளை ஏற்படுத்த இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கும் என்பது சொல்லாமலே புரியும்.
இது உங்களையும் என்னையும் குறித்த செய்தி!
நமக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. அரசாங்கத்திற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை. இருந்தாலும், நான் உளவுபார்க்கப்படுகிறேன். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அரசாங்கக் குறிப்பில் சேகரிக்கப்படுகிறது. - இது மோசமானது. - ஆனாலும், நாம் ஏன் இதுகுறித்து வருத்தப்பட வேண்டும்??
ஆனால் உண்மை அதுவல்ல. நாம் எதுவும் தவறாக செய்திருக்காத போதும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில ரகசியங்கள் இருக்கின்றன. நீங்கள் தினமும் எந்த செய்திகளை படிக்கிறீர்கள்? எது உங்கள் உணர்வுகளுக்கு தீனி போடுகிறது? உங்கள் மண வாழ்க்கை குறித்த அபிப்ராயம் என்ன? தற்கொலை எண்ணம் வந்திருக்கிறதா? என ஏதாவது ஒரு விஷயம் ரகசியமாக உள்ளது.
உங்கள் கைபேசியிலிருந்து, கை ரேகை வரை ஒரு அமைப்போடு இணைக்கப்பட்டிருந்தால். உங்கள் தனிமைக்கு ஏதாவது மதிப்பிருக்கிறதா? - நமக்கு தனித்தன்மைதான் இருக்குமா? - நமக்கு இதுகுறித்து கவலை எழ வேண்டும்.
நீங்கள் ஒரு அமெரிக்க ஆதரவாளராக இருக்கலாம். உங்களுக்கு, அந்த அமைப்பு முறை மீது காதல் இருக்கலாம். உங்களது தனிமையும் சேர்த்தே களவுபோகிறது. உங்கள் நடவடிக்கைகளும் கண்கானிப்புக்கு உள்ளாகின்றன. இந்தத் திட்டம் மிக மெதுவாக, உலகை சில நபர்களின் கண்கானிப்புக்குள் கொண்டுவருகிறது. ஒரே அதிகாரத்தின் கீழ் நம்மை அம்மணமாக நிற்க வைக்கப்பார்க்கின்றன.
இந்த வளையத்தில் சிக்காமல் தப்பிக்க முடியுமா?
-இரா.சிந்தன்
(தொடரும்)
2) தானியங்கி முறையில் இ-மெயில்களை திருடும் திட்டம் - ப்ரிசம் !

ப்ரிசம் தகவல் திருட்டு வளையத்தில் - கம்பெனிகள் சேர்ந்த விபரம், சேர்ந்த நாள் அடிப்படையில் |

1) உங்கள் அந்தரங்கத்திற்கு அமெரிக்கா கொடுக்கும் விலை 2 கோடி டாலர்கள் ! - 1
2) தானியங்கி முறையில் இ-மெயில்களை திருடும் திட்டம் - ப்ரிசம் !
'பரிசம்' அமெரிக்க தகவல் திருட்டு குறித்த மாற்றுவின் கட்டுரைகள் பாராட்டத் தக்க அளவில் இணையதள கணக்காளர் மத்தியில் இணைய உளவு குறித்து எச்சரிக்கை உணர்வை ஏற்ப்படுத்துகிறது .பொறுப்புணர்வோடு செயல புரியும் மாற்றுவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை -vilvam
ReplyDeleteatrocious act of the american govt.good job is being done by maattru
ReplyDelete