ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.தற்போது சீன திரைப்பட விழாவுக்கா இந்தியா வந்திருக்கும் ஜாக்கிசான் தனக்கு பிடித்த படம், தனது குழந்தை பருவம், தன் வாழ்க்கை தத்துவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
ஸ்டண்ட் கதைகளுடன் காமெடியையும் புகுத்தி தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்துக்கொண்ட அவருக்கு, தற்போது சண்டைப் படங்கள் செய்வதில் விருப்பமில்லை. ”ஆசியாவின் ராபர்ட் டி நீரோவாக இருக்க விரும்புகிறேன்” என்கிறார் அவர்.
ஸ்டண்ட் காட்சிகள் ....
“சவால்களை நான் விரும்பினே, சவால்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன” “ஆர்மர் ஆப் காட் படத்தில் 75 அடி உயரத்திலிருந்து குதிக்கும்போது செத்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்” “அப்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லை” ஆனால், கிராபிக்ஸ் வந்த பிறகும், எனது ரசிகர்களுக்காக அதைச் செய்ய நேர்ந்தது. ”உண்மையிலேயே ஸ்டண்ட் காட்சிகளை செய்ய நாம் விரும்பவில்லை.”
“ஆபத்தில்லாத ஸ்டண்ட்களை டூப்புகள் வைத்துக்கொள்வேன். ஆபத்தானவைகளை நானே செய்வேன். மக்கள் என்னை அப்படிப் பார்க்கத்தான் விரும்புகிறார்கள். அந்தக் காட்சிகளில் வேறொருவர் நடித்தால், அதனை அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்” என்று சொல்லும் ஜாக்கி சானுக்கு, ஊசி போட்டுக்கொள்வதென்றால் பயம் என்பது வினோதமானதுதான்.
”ஒருமுறை எனது முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தையல் போட வந்தார்கள். அப்போது கூட ஊசி வேண்டாம் என்றுதான் சொன்னேன். அப்படி இல்லையென்றால், மின்சார ஷாக் மூலம்தான் செய்ய முடியும் என்றார்கள். நான் அதனை ஒத்துக்கொண்டேன்.”
என் அப்பா என்னை பிறந்ததும் விற்க ஒப்புக் கொண்டார் ...
”என் அப்பா ஒரு தைய்வான் உளவாளி. ஹாங்காங்கில் ஒளிந்துகொண்டு சைனாவுக்கு எதிராக செயல்பட்டார். அவருக்கு 2 மகன்கள் இருந்தார். என் அம்மாவுக்கு 2 மகள்கள் இருந்தார்கள்.
அவர்கள் இருவருக்கும் பிறந்த முதல் மகன் நான். நான் மிகவும் குண்டாக இருந்தேன். அதனால் என் அம்மாவுக்கு ஆபரேசன் செய்ய நேர்ந்தது. அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனை பில் செலுத்த முடியவில்லை. மிக ஏழ்மையான அப்பாவிடம் சென்று 500 ரூபாய் தருகிறேன் . அந்த குழந்தையை கொடுத்துவிடு என்று சொன்னதும் அப்பா எடுத்துக்கொள்ளுன்கள் என்று சொல்லிவிட்டார்.”
”அப்போது அவரது நண்பர்கள் வந்து என் அப்பாவிடம் - உனக்கு இப்போது 40 வயதாகிவிட்டது. என்று சொல்லி, அவர்கள் பணத்தை சேகரித்து கொடுத்து மருத்துவ பில்லை கட்டினார்கள்”
ஒரு மகனாக ஜாக்கியும், ஜாக்கியின் மகனும் ...
”நான் ஸ்டண்ட் கலைஞனாக இருந்தபோது. எனக்கு அப்பா பணம் கொடுத்ததில்லை. சைனீஸ் புத்தாண்டின் போது வேலை இருக்காது. என்னிடம் 2 டாலட்கள் இருக்கும். அதை வைத்து நிறைய ரொட்டி வாங்குவேன். ஒவ்வொரு நாள் முடியும்போதும், எத்தனை ரொட்டிகள் இருக்கிறதென பார்த்துக் கொள்வேன். இப்போதுபோல, பெற்றோரிடம் பணம் கேட்பது அத்தனை சுலபமல்ல. ஆஸ்திரேலியாவில் என் அப்பா மிக வறுமையில் இருந்தது எனக்கு தெரியும். அத்துடன் போன் செய்யவே, பேருந்தில் சென்று காத்திருக்க வேண்டும்”
"நான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், நலத்திட்ட அமைப்புகளுக்கு கொடுத்து விடுகிறேன்” எனும் ஜாக்கிசானிடம் - இது சற்று அதிகமாக தெரியவில்லையா? நீங்கள் ஏழ்மையில் வளர்ந்ததால் மகனுக்கும் ஏழ்மையைக் கொடுக்கிறீர்களா? என்று கேட்டதற்கு.
”இப்போது நான் பணக்காரன் இல்லை என்றாலும், ஏழையும் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது வருமானத்தில் பாதியை நலத்திட்டங்களுக்காக கொடுக்கும்போது எனது மகனிடம் சொன்னேன். ஒருவேளை உனக்கு திறன் இருந்தால் எனது பணம் உனக்கு தேவைப்படாது. உனக்கு திறன் இல்லாவிட்டால், எனது பணத்தை வீணாக்கிவிடுவாய் என்று சொன்னேன். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான். அவனுக்கு அம்மா இருக்கிறார். இப்போதே நல்ல இசையமைப்பாளராகவும், நடிகனாகவும் இருக்கிறான்.”
சுதந்திரம், கட்டுப்பாடு குறித்து ...
“இப்போது சில நேரங்களில் இளைஞர்கள் மிக அதிகமாக சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு கட்டுப்பாடு தேவை. உடனே நீ எப்படி சொல்லாம் என்று கேட்காதீர்கள்.”
“சாலையில் செல்கிறோம். என் மகனுக்கு எப்படி சாலையை கடப்பது என சொல்லிக் கொடுக்கும்போது சிவப்பு விளக்கை குறித்து சொல்கிறோம். அவன் வளரும்போது அவனையே சாலையை கடக்க விடுகிறோம். ஆனால் அந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். சாலையில், வாகனத்தை வேகமாக எடுத்துச் செல்கிறான். மது அருந்துகிறான் என்றால் நான் அவனைக் கண்டிப்பேன். அவன் தவறாக செயல்படும்போது கண்டிப்பதிலும் சுதந்திரம் அடங்கியிருக்கிறது”
“எனக்கு ஒரு ஒழுங்கு வேண்டும். இளமையிலிருந்து நான் சண்டைக்காரனாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் நான் மாபியா கும்பலில் நடித்ததில்லை, கொலைகாரனாக நியாயப்படுத்தியதில்லை. என்ன செய்தாலும் சில ஒழுங்குகள் இருக்க வேண்டும்”
ஒரு கலைஞனாக ...
என்னை நினைவில் வைத்துக்கொள்ளும் படங்களை செய்ய விரும்புகிறேன். எனக்கு இந்தியப் படங்களில் நடிக்கும் விருப்பம் உள்ளது. இந்திய படங்களை சமீபத்தில்தான் பார்க்க தொடங்கினேன். குறிப்பாக 3 இடியட்ஸ், மிக அருமையான படம். வண்ணம், கேமிரா, கதை என எல்லா விதத்திலும் அருமையாக இருந்தது.
முழுமையான பேட்டி ... : @NDTV

0 comments:
Post a Comment