”காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும், வேணு கானங்களும்
தோகை விரிப்பதென்ன?”
- கவிஞர் பழனிபாரதி
இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல் சினிமா, முடக்கப்பட்ட கதையைச் சொல்லும் ”செல்லுலாய்ட் டிரீம்ஸ்” திரைப்பட அறிமுகத்தை மாற்று-வில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். தமிழில் அந்தப்படம், ஜே.சி.டேனியல் என்ற பெயரில் வருகிறது.
-
முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கவிதை வரிகள் ஜே.சி.டேனியல் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. மயக்கும் இசையும், கவர்ந்திழுக்கும் அதன் வரிகளும் பேசப்படவேண்டியவைதான். அந்தப் பாடலை பாடியுள்ள பாடகியின் அறிமுகம் அதைவிடவும், முக்கியமானது.
சாலைகளின் நடுவே சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில், கண் தெரியாதவர் தனது உதவியாளருடன் - சில்லரை டப்பாக்களை குலுக்கியதுண்டு.
சற்று தூரத்தில், ஒரு பழைய டெம்போவில், பாடல்கள் இசைக்க ஏற்ற இறக்கமான குரலில் - நிறைய மாற்றுத் திறனாளிகள் பாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முறையாக இசைப் பயிற்சி இருக்காது. இருந்தாலும், ஏதோரு ஆர்வத்தில் பாடத் தொடங்கி, பின் வேறு வழியில்லாமல் பாடிப் பாடி, சோர்ந்து போயிருப்பது அவர்களின் குரல்களிலேயே வெளிப்படும்.
வைக்கம் விஜயலட்சுமி - அப்படியொரு கண் தெரியாத பாடகர்தான். ஆனால், அவரது குரலில், அந்த சோர்வும், சுருதிப் பிழைகளும் இல்லை.1981 ஆம் ஆண்டு வைக்கம் கிராமத்தில் முரளிதரன், விமலா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். அவருக்கு கண் தெரியாது என்பதை அறிந்த பெற்றோர், பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களைக் கேட்டே வளர்ந்த அவர், பாடல்களை முறையாக கவனித்து பாடுவதைக் கேட்ட அவரின் பெற்றோர், அதே துறையில் அவருக்கு ஊக்கம் கொடுத்து வளர்த்தனர்.
”இசையில் முறையான பயிற்சி இல்லாதபோதும், 100 ராகங்களை தனது சொந்த முயற்சியில், இசைப் பேழைகளின் உதவியில் அவர் கற்றார்” அவரின் நண்பர்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.
1887 ஆம் ஆண்டு ஜேசுதாஸ் அவர்களை சந்தித்திருக்கிறார். பின்னர் மும்பை சண்முகாநந்த சபாவிலும், பிறகு பிற நகரங்களில் 400 மேடைகளில் சபாக்களில் பாடியுள்ளார். தற்போது அவரின் கவனம் இந்துஸ்தானி கற்பதில் திரும்பியுள்ளதாம். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் காற்றே ... காற்றே !
பெண்: காற்றே காற்றே - நீ
மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும், வேணு கானங்களும்
தோகை விரிப்பதென்ன?
ஆண்: காற்றே காற்றே - நீ
மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும், வேணு கானங்களும்
தோகை விரிப்பதென்ன?
பெண் : மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பென்ன?
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன?
காற்றில் திறப்பதென்ன?
நேற்று என்பது வெறும் கனவு
இன்று என்பது புது நினைவு
சோகம் சுமந்த தோள்களிலே
சாய்ந்திட வருதே வெண்ணீலவு
முட்டி முட்டி பால் குடிக்கும் கன்னுக்குட்டி செல்லங்களும்
குட்டி குட்டி பூக்களிலே தொட்டில் கட்டும் தென்றல்களும்
காதில் தேன்மொழி சொல்கின்றதே
பெண்: காற்றே காற்றே - நீ
மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும், வேணு கானங்களும்
தோகை விரிப்பதென்ன?
ஆண்: அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது
பழகிய கிளிகள் கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது
மின்மினியின் கண்களிலே நட்சத்திரம் பூக்கிறதே
கிங்கினியின் சந்தங்களில் கீர்த்தனங்கள் கேட்கிறதே
பெண்: காற்றே காற்றே - நீ
மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும், வேணு கானங்களும்
தோகை விரிப்பதென்ன?
ஆண்: காற்றே காற்றே - நீ
மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும், வேணு கானங்களும்
தோகை விரிப்பதென்ன?
பெண் : மேகம் மேகம் -அது
போகும் வழிகளில் நெஞ்சம் மிதப்பென்ன?
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன? காற்றில் திறப்பதென்ன?
தோகை விரிப்பதென்ன? தோகை விரிப்பதென்ன?
- பாடல் பழனிபாரதி
- சிந்தன் ரா
0 comments:
Post a Comment