- ஹாசன் சுரூர்
அமெரிக்கா உலகம் முழுவதும் மிகப்பெரும் அந்தரங்கத் தகவல் திருட்டை நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலின் போக்கு குறித்து கடுமையாக எச்சரிக்கிறார் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசாஞ்ச்.
மேலும் பேஸ்புக், டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் முழுமையான அரசின் கண்கானிப்புக்கு ஆளாவது குறித்தும் - இதன் காரணமாக எகிப்திய போராளிகள் சுற்றிவளைக்கப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.
ஸ்னோடன் -வெளியிட்ட அமெரிக்க உளவு குறித்த தகவல்கள் பற்றி அறிந்ததும் முதலில் என்ன உணர்வு ஏற்பட்டது?
விக்கி லீக்ஸ் வெளியீடுகள் அராபிய எழுச்சிக்கு உந்துதலை கொடுத்ததென நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஸ்னோடன் வெளியிட்டுள்ள விசயம், எதிர்காலத்தில் மக்கள் எழுச்சிகளை அடக்குவதற்கான அம்சம் இருப்பதாக கருதுகிறீர்களா?
தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
ஆங்கில மூலம்: http://www.thehindu.com/news/international/world/assange-america-is-at-the-precipice-of-turnkey-totalitarianism/article4818013.ece

ஒரு புரட்சியை நீங்கள் தொடங்கினால், அதன் வெற்றியை உறுதியாக்கிய பின் இறங்க வேண்டும் |
கடந்தவருடம் “கட்டமைக்கப்படும் உளவு ராஜ்ஜியம்” என்று பெயரிட்டு வெளிப்படுத்திய ஏற்பாட்டை அம்பலப்படுத்துவதற்காக செய்துகொண்டிருந்த போராட்டத்தில், இந்த வெளியீடுகள் - வெற்றிக்கான வாசலை திறந்துவிட்டுள்ளது. விக்கிலீக்ஸ், தனது பணியின் இயல்பு காரணமாக அமெரிக்க பாதுகாப்பு முகமையின் நடவடிக்கைகளை அறிந்துவைத்துள்ளது. ஸ்னோடனின் புதிய ஆவணங்கள், அபாயகரமான உளவு ராஜ்ஜியத்தின் படு மோசமான முகத்தை அம்பலமாக்கி நிரூபிக்கின்றன.1971 ஆம் ஆண்டில் வியட்னாம் யுத்தம் குறித்து அமெரிக்க மக்களை தவறாக வெளிநடத்தியதை அம்பலப்படுத்திய எல்ஸ்பெர்க் - இப்போது இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதை அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமானதென்று சொல்கிறார்... அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
அமெரிக்க வரலாற்றில் இது மிக மிக முக்கியமானது. ஒரு நவீன ராணுவ அரசாங்கத்தின் அபாயமான சர்வாதிகார திருப்பத்தின் விளிம்பில் அமெரிக்கா நிற்கிறது. இதைவிட விக்கி லீக்ஸ் கேபிள்கள் மிக முக்கியத்துவம்வாய்ந்தவையாகும். அந்த ஆவணங்கள் உலகின் ஒவ்வொரு நாடு குறித்தும் தொடர்புடைய பிரச்சனைகளை உள்ளடக்கியிருந்தன.அரசாங்கத்தினால், மக்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இதுபோல ஊடுருவப்படு நிலையில் அவர்கள் தங்களது ஆன்லைன் ரகசியத்தை எந்த வழிகளில் பாதுகாத்துக்கொள்ள முடியும்?
ரகசியத்தை முழுமையாக பாதுகாத்து வைத்துக்கொள்வது இன்று மிகமிகக் கடினமாகிவிட்டது. அமெரிக்காவின் உலகளாவிய உளவு ராஜ்ஜியத்தின் ஏதாவது ஒரு பகுதியாக நமது தகவல்களும் வாரிச் செல்லப்படாமலிருப்பது கடினம். உதாரணமாக TOR, Tails முறைகளில் அனானிமஸாக, கவனமாக வேளிப்பட்டாலும், உங்கள் சக உறவினர்களுடனான ஸ்கைப், பேஸ்புக், இ-மெயில், எஸ்.எம்.எஸ் விவாதங்களில், உண்மையை சொல்வீர்கள். தம்மை அறியாமல் உங்கள் தகவல்கள் திருடப்பட்டுவிடும்.
விக்கி லீக்ஸ் வெளியீடுகள் அராபிய எழுச்சிக்கு உந்துதலை கொடுத்ததென நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஸ்னோடன் வெளியிட்டுள்ள விசயம், எதிர்காலத்தில் மக்கள் எழுச்சிகளை அடக்குவதற்கான அம்சம் இருப்பதாக கருதுகிறீர்களா?
எகிப்தில் முபாரக்கின் ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் இது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. எகிப்திய புரட்சியில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் “உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று தொடங்கி Facebook அல்லது Twitter -ஐ உபயோகிக்காதீர்கள் என வாசகங்கள் இருந்தன. போராளிகளை முன்னதாகவே சுற்றி வளைத்து கைது செய்த நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் அந்த முடிவுக்கு வந்தார்கள். அனைத்தையும் ஊடுருவும் உளவின் பொருள் - ஒரு புரட்சியை நீங்கள் தொடங்கினால், அதன் வெற்றியை உறுதியாக்கிய பின் இறங்க வேண்டும் என்பதுதான்.ஸ்னோடன் வெளியிட்டுள்ள தகவல்கள் காரணமாக, இன்னும் பல உண்மைகள் வெளிக் கொண்டுவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா?
3 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்த பிராட்லி மேனிங்-இன் வழக்கு விசாரணை கடந்த வாரம் திங்களன்று தொடங்கியுள்ளது. இதை விடவும் மிகப்பெரிய புலணாய்வு என் மீதும் - விக்கிலீக்ஸ் மீதும் தொடர்ந்து நடந்துவருவதை அமெரிக்க நீதித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு இருந்தும் அல்லது இதன் காரணமாகவே கூட நமது உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்பது குறித்த உண்மையை வெளிப்படுத்துவதற்காக எட்வர்ட் ஸ்னோடன் முன்நின்றார். அவருடைய துணிவு, உறுதிமிக்க பத்திரிக்கையாளர்கள் லாரா பாயிட்ராஸ் மற்றும் கிளென் கிரீன்பீல்ட் ஆகியோர் அவரோடு இணைந்து கொண்டனர். அதே கேவலமான தாக்குதல்கள் எட்வர்டு ஸ்னோடனுக்கு எதிராக நடப்பதை நாம் பார்க்கிறோம். அரசியல் தாக்குதல்களும், தனிமனித குணாம்சத்தின் மீதான தாக்குதல்களுமாக அது நடத்தப்படுகிறது. என் மீது சுமத்தப்பட்ட அதே சட்டவிரோதமான களங்கங்கள் பத்திரிக்கையாளர்கள் கிளென் கிரீன்பீல்டு மற்றும் லாரா பாயிட்ராஸ் ஆகியோரை தாக்கிக் கொண்டிருக்கின்றன.ப்ரிசம்: மோசடி அம்பலப்படுத்திய உளவாளி பேட்டி தமிழில்
தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி
ஆங்கில மூலம்: http://www.thehindu.com/news/international/world/assange-america-is-at-the-precipice-of-turnkey-totalitarianism/article4818013.ece
please provide the source when you translate any article
ReplyDeleteThanks
Raja