ப்ரிசம் - திட்டத்தில் உலகின் ஒவ்வொரு மனிதனும் கண்கானிக்கப்படுவது குறித்து பேசியபோது... அதைக் கேட்ட பலராலும் ஹாலிவுட்டின் எனிமி ஆப் தி ஸ்டேட்ஸ் திரைப்படம் நினைவுகூறப்பட்டது.
எனிமி ஆப் தி ஸ்டேட்ஸ் |
அதே சமயம், இந்திய நாளிதழ்களும் (தி இந்து - முழு விபரங்களையும் வெளியிட்டது, விகடன் உள்ளிட்ட சில இதழ்கள் சிறு கட்டுரைகள் வெளியிட்டுள்ள்ளனர்), தொலைக்காட்சிகளும் - மிகப்பெரிய அளவில் இந்திய இணையதள பயன்பாட்டாளர்களை கண்கானித்த - ஒரு அன்னிய ஊடுருவலைப் பற்றி கோபத்தை வெளிப்படுத்தவில்லை. ஏதொ இது அமெரிக்காவின் பிரச்சனை என்ற அளவில், ஸ்னொடன் செய்திகளை சர்வதேசப் பக்கத்தில் போட்டிருக்கிறார்கள்.
பத்திரிக்கைகளை விடுங்கள், இந்திய அரசே இப்பிரச்சனையில் அதிர்ச்சி தெரிவிக்கவில்லை, மாறாக ‘சர்ப்ரைஸ்ட்’ என்று சொல்லியிருக்கிறார்கள். திகைப்பாக இருக்கிறதாம்? . ஐரோப்பிய நாடுகளில் - தனி நபர் சுதந்திரம் குறித்து அக்கரை கூடுதலாக இருப்பதால், அது அமெரிக்காவுக்கு பலத்த அடியாக அமையும். இந்தியா அதனைக் கண்டிக்காதது, நமக்கு ஆபத்தான சமிக்கைதான்
----
எதுவும், திட்டமிடாமல் தன்னிச்சையாக நடப்பதாகத் தெரியவில்லை. இந்த உலகில் நீங்களும், நானும்தான் மிகவும் தன்னிச்சையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அனைவராலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவனம் ப்ரிசம் குற்றச்சாட்டில் அப்ரூவராகியிருப்பது, புதிய செய்தி. கடந்த 6 மாதங்களில் அமெரிக்கா கேட்ட அமெரிக்கா கேட்ட 10 ஆயிரம் தொலைபேசிகளை - ப்ரிசம் வளையத்தில் திறந்துவிட்டிருப்பதாக சொல்லியிருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அந்த தகவல்களை வழங்கவில்லையாம்.
ஸ்னோடன் சொல்வது உண்மையா? ஆப்பிள் சொல்வது உண்மையா? - கடந்த ஒரு வாரமாக அமெரிக்க அரசு ஸ்னோடனை சீன உளவாளி என்று சொல்கிறது. அவர் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்கிறது. கொலை செய்துவிட வேண்டுமென உளவுத்துறை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா அடையும் பதட்டத்தைப் பார்த்தால், இந்த திட்டத்தின் அளவு சாதாரணமானதாகத் தெரியவில்லை.
ஸ்னோடனை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், அவருக்கு ஆதரவுப் போராட்டங்கள் அமெரிக்காவை உலுக்கத் தொடங்கியுள்ளன. ஹாங்காங்கிலும் பேரணி நடந்திருக்கிறது. போராளி, பாதுகாக்கப்பட வேண்டுமென நாமும் விரும்புகிறோம். போராட்டங்களை வாழ்த்துவோம்.
-
இந்தத் தொடரில் - இன்னும் 2 கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தனி நபரும் பாதிக்கப்படும் பிரச்சனை இது என்ற போதிலும் - அரசுக்கு எதிராக எந்த சிந்தனையும் இல்லாத ஒருத்தன் இப்பிரச்சனைக்கான ஏன் அச்சப்பட வேண்டும்? என்பது முதல் கேள்வி.
இதிலிருந்து தப்பிப் பிழைக்க ஏதாவது வழி இருக்கிறதா? என்பது இரண்டாவது.
முதல் கேள்வியைப் பொருத்தமட்டில் சற்று விரிவாகவே பதில் கொடுக்க வேண்டும். ஒரு உளவுத்துறையின் பணி, குற்றம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து - வரும் முன் தடுப்பது என்பதாக நம்பப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு தனி நபரையும் உளவு வளையத்துக்குள் கொண்டு வருவதானது, மிகத் தவறான முறையில் - அப்பாவிகளையும் குற்ற வளையத்தில் கொண்டு சேர்க்கும் ஆபத்தில் போய் முடியும். அத்துடன் இது குற்றவாளிகளை தனித்து பிந்தொடர்வதில், சிக்கலை ஏற்படுத்தும்.
குற்றம் - குறித்த ஒரு அரசின் பார்வை மிகவும் முக்கியமானதாகும். அரசு எதிராக சிந்தித்தாலே நீங்கள் அரச துரோகிகளாக பார்க்கப்படுவீர்கள். காங்கிரஸ், பாஜகவை விமர்சித்தால் நாம் இந்தியாவின் எதிரிகளா??
சமீபத்தில் சிவசேனா தலைவரை விமர்சித்ததற்காகவும், அந்தக் கருத்தை விரும்பியதற்காகவும் - 2 பெண்கள் மீது வழக்கு போடப்பட்டதைப் போல ... எப்படிப்பட்ட அரசாட்சியில் வாழ்கிறீர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் மீதான தாக்குதல்கள். ஆனால் ப்ரிசம் திட்டம் உண்மையில், குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதல்ல.
சமீபத்தில் சிவசேனா தலைவரை விமர்சித்ததற்காகவும், அந்தக் கருத்தை விரும்பியதற்காகவும் - 2 பெண்கள் மீது வழக்கு போடப்பட்டதைப் போல ... எப்படிப்பட்ட அரசாட்சியில் வாழ்கிறீர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் மீதான தாக்குதல்கள். ஆனால் ப்ரிசம் திட்டம் உண்மையில், குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதல்ல.
இந்த உளவு வேலைகள் நடந்திருக்கும் நாடுகளில் ஈரானில் மிக சமீபத்தில் தேர்தல் நடந்தேரியது. எகிப்தில் மக்கள் புரட்சி நடந்தது - எனவே இந்த உளவு வேலைகள், அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை கொண்ட வர்களை கண்கானிக்கும் அரசியல் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதனால் இயல்பான ஆட்சி மாற்றங்களில் - திட்டமிட்ட தலையீடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இது ஜனநாயக நாடுகளை மேலும் சிதைக்கும். எகிப்தில் நடந்ததைப் பொல, அநீதிக்கு எதிரான கிளர்ச்சி, ராணுவ சர்வாதிகாரத்தின் தொடக்கமாக மாற்றப்படலாம்.
நம்மில் பலர் ஆதார் அட்டை கொடுப்பது போன்ற திட்டங்களை - நல்ல திட்டம் என்றே கருதுகிறோம். 125 கோடி மக்களின் தகவல்களும் இணையத்தில் தொகுக்கப்படும்கின்றன. அவர்களின் வரவுசெலவு, நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட உள்ளன.
இந்த தகவல்களை தனியார் கார்பரேட் வணிக நிறுவனங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனின், வாங்கும் சக்தியை உடனுக்குடன் கணக்கிட அது நல்ல வாய்ப்பை இது ஏற்படுத்தும்.
அரசு, தனியார் என இன்னும் எத்தனை பேரின் உளவு வளையங்களுக்குள் நாம் சிக்கிக் கொள்வோம் என்பது பூதாகரமான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த தகவல்களை தனியார் கார்பரேட் வணிக நிறுவனங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனின், வாங்கும் சக்தியை உடனுக்குடன் கணக்கிட அது நல்ல வாய்ப்பை இது ஏற்படுத்தும்.
அரசு, தனியார் என இன்னும் எத்தனை பேரின் உளவு வளையங்களுக்குள் நாம் சிக்கிக் கொள்வோம் என்பது பூதாகரமான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சரி இந்த வளையங்களில் இருந்து எப்படி தப்பிப்பது?
முதலில் ஒன்றுபட்ட மக்கள் எதிர்ப்பு மிக முக்கியமானதாகும். நமது தனிமை, அந்தரங்கம் ஆகியவற்றிற்கு பொருளில்லாமல் போனால் - அது என்ன உலகம்??
அன்னிய நாட்டுக்கு தகவல் கொடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்ட சாதனங்களை - இந்திய அரசை தடை செய்ய வைக்க வேண்டும்.
உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்க முடியாத வகையில் உள்ள மூடிய மென்பொருட்கள் (விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் உட்பட) குறித்த விழிப்புணர்வு பெருக வேண்டும்.
இவற்றிற்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். அவை இலவசமாகக் கிடைக்கும் என்பதை விட - வெளிப்படையானவை. அறிவிச் சொத்தால் படைக்கப்படும் மென்பொருள்கள் அனைத்தும், மக்களுக்கு பொது என்ற அடிப்படையில் அமைந்தவை.
இவற்றிற்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். அவை இலவசமாகக் கிடைக்கும் என்பதை விட - வெளிப்படையானவை. அறிவிச் சொத்தால் படைக்கப்படும் மென்பொருள்கள் அனைத்தும், மக்களுக்கு பொது என்ற அடிப்படையில் அமைந்தவை.
எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ் போன்ற - உண்மையை உலகுக்கு சொல்ல உயிரை பணயம் வைத்த போராளிகளை ஆதரிப்பது மிக முக்கியம்.
இதுவெல்லாம் எப்போது நடக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை கடினமானது, நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஒரு நம்பிக்கையை முழக்கமாக எடுத்துக் கொள்வோம் ... “புதிய மாற்றைக் கட்டமைப்போம்”.
Echelon Conspiracy http://en.wikipedia.org/wiki/Echelon_Conspiracy
ReplyDeleteEchelon http://en.wikipedia.org/wiki/ECHELON