துன்புறுத்தலுக்கு எல்லைகள் கிடையாது
இந்தியாவில் தற்போது பணியிடத்தில் பெண்கள்
மீதான பாலியல் துன்புறுத்தலை கையாள சட்டமியற்றப்பட்டுள்ள நிலையில், புகார் அளிக்கும் பெண்களுக்கு உண்மையில் நீதி கிடைக்குமா?திறமையாகப் பயன்படுத்திடக் கூடிய வகையிலான அதிகாரத்தை வழக்கறிஞர்க ளாக உள்ள பெண்கள் பெற்றிருக்கின்ற கார ணத்தினால், எத்தகைய பாலியல் துன்புறுத் தலையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி யிருக்காது என நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படியானால், மீண்டும் ஒருமுறை இது குறித்து சிந்தித்துப் பாருங்கள். 1997-ல் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தற்போது பிறப்பிக்கப்பட் டுள்ள சட்டமானது நீதிமன்றங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும் என்பதை உச்ச நீதிமன்றத்தினை ஏற்றுக் கொள்ளச் செய்திட மிகப் பிரபலமான பெண் வழக்கறிஞர்களை - கூடுதல் சாலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், காமினி ஜெய்ஸ்வால், இந்து மல் கோத்ரா, மீனாட்சி அரோரா, வி. மோகனா மற் றும் இதர சிலரையும் - உள்ளடக்கிய வலு வான பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.
நெடுங்காலத்திற்கு முன்பு விசாகா வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டபோதும், பாலியல் துன்புறுத் தல்களை பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்வது என்பது உண்மையாக உள்ள நிலையில், அவர்களது பணியிடமான நீதிமன்றத்திற்கும் இச்சட்டம் பொருந்த வேண்டும் என அவர் கள் நீதிமன்றத்தினை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பது, தடைசெய் வது மற்றும் தீர்வளிப்பது) சட்டம் - 2012ஐ இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதியன்று மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்படும் வரையிலான காலத்தில் நடைமுறையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களே சட்டமாக இருந்து வந்தது.
2012 செப்டம்பர் 3ம் தேதியே எவ்வித விவாதத்தினையும் நடத்திடாமல் மக்களவை இச்சட்டத்தினை நிறைவேற்றியது. ஏனெனில், அப்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல லட்சம் பெண்களை பாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிப்பதனை விட நிலக்கரி ஊழல் குறித்து விவாதிப்பதிலேயே ஆர்வத்துடன் இருந்தனர்.
சமீபத்தில் இந்திய குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதங்களின் தொனியைப் பார்க்கும்போது, எவ்வித விவாதத்தினையும் நடத்தாது சட்டத் தினை அன்று அவர்கள் நிறைவேற்றியதற்கு நாம் ஒரு விதத்தில் அவர்களுக்கு நன்றி கூறிட வேண்டும். இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதமானது, நமது ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் எவ்வாறு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதனையும், அதே போல எத்தகைய பழமைவாத கருத்துக்களுடன் நமது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பதனையும் வெட்ட வெளிச்சமாக்கியது.
இச்சட்டத்தினால் மட்டும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை உண் மையில் தடுத்திட முடியுமா? மௌனமாக இத்தகைய துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டு வரும் பெண்களுக்கு புகார் அளிப் பதற்கான துணிவு ஏற்படுமா? பொதுவாக இதுபோன்ற புகார்களில் நிர்வாகமானது அளித்த புகார் குறித்து விசாரித்திடுவதற்குப் பதிலாக புகார் அளித்த பெண்ணை பணி நீக்கம் செய்வதே பெரும்பாலும் நடைபெறு கிறது. இத்தகைய நடைமுறையின்றி, புகார் அளிக்கும் பெண்ணுக்கு உண்மையிலேயே நீதி கிடைத்திட வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.தற்போது இது தொடர்பாக நிறைவேற் றப்பட்டுள்ள சட்டமானது பயனளிக்கக் கூடும். ஏனெனில், பாலியல் துன்புறுத்தல் என்பதனை இச்சட்டம் தெளிவாக வரை யறுத்துள்ளது. இது அணிதிரட்டப்பட்ட மற்றும் அணிதிரட்டப்படாத துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மட்டுமின்றி, இதற்கு முன்பு விடுபட்டிருந்த வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இச்சட்டம் பாதுகாப் பளிக்கிறது.
இச்சட்டத்தின்படி 10-க்கும் மேற்பட்டவர்களை பணியிலமர்த்தியுள்ள நிறுவனங்கள் எல்லாம் புகார் கமிட்டியை அமைத்திட வேண்டும். இத்தகைய கமிட்டி அமைக்கப்படவில்லை எனில் ரூ.5 அபராதம் இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும். இத் தகைய கமிட்டியை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படக் கூடும். இந்த சட்டமானது ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல. வாடிக்கையாளர், பயிற்சியாளர் மற்றும் தினக்கூலி பெறும் தொழிலாளர் ஆகியோருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும். தனியார் நிறுவனங்கள், டிரஸ்டுகள், கல்வி நிறுவனங்கள், சொசைட்டிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சேவை அளிப்போர் ஆகியோருக்கு இச்சட்டம் பொருந்தும் என்பனவற்றையெல்லாம் பார்க்கும் போது, இச்சட்டம் முழுமையான ஒன்றாகவே தோன்றுகிறது.பணியிடத்தில் சமமாக நடத்தப்படுவதற் கான உரிமை பெண்களுக்கு உள்ளது என் பதனை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. அது மட்டுமின்றி, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்ணின் மீது தொடுக்கப்படும் உடல்ரீதியான மற்றும் உளரீதியிலான தாக்குதல் என்பதுடன், சமத்துவத்திற்கான அவர்களது உரிமையை மறுக்கும் நடவடிக்கையுமாகும் என்பதனை இச்சட்டம் அங்கீகரித்திருப்பது மிக முக்கியமான அம்சமாகும்.
இருப்பினும், இதில் கவலையளிக்கக் கூடிய சில குறைபாடுகளும் உள்ளன. மாதர் அமைப்புகளால் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், அளிக்கப்பட்ட புகார் பொய் எனில் புகார் கொடுத்தவர் தண்டிக்கப்பட இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. இதன்படி, புகார் கொடுத்த பெண்ணால் அவள் பாலியல் துன் புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதனை நிரூபித் திட இயலவில்லை எனில், அவளுக்கு தண்டனை அளிக்கப்படும். பாலியல் துன்புறுத் தலை நிரூபிப்பது என்பது உடல் ரீதியான தாக்குதலைவிட மிகச் சிரமமான ஒன்றாகும். இந்நிலையில், பாதிப்பிற்கு ஆளாகும் பெண்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி புகார் அளிக்க அவர்கள் முன் வருவதனையே தடுத்துவிடும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்களான ஆஷாக்கள், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைத்திட பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் போன்ற திட்டப் பணியாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஏன் இவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது? குழந்தைத் திருமண நடைமுறையை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய திட்டப் பணியாளரான பன்வாரி தேவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கே இத்தகைய சட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தது என்பதனை இச்சட்டத்தினை இயற்றியவர்கள் மறந்துவிட்டனரா? பன்வா தேவி போன்ற பெண்களுக்கு அளிக்கப்படும் பாது காப்பு கூடுதலாக்கப்பட வேண்டுமே ஒழிய, குறைக்கப்படக் கூடாது. ராணுவத்தில் பணியிலமர்த்தப்பட்டுள்ள பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. தற்போதிருப்பதை விட கடுமையான ஒன்றாக இச்சட்டம் நிறை வேற்றப்பட்டிருந்தாலும் கூட, அது உண்மையிலேயே பெண்களுக்கு ஆதரவாகச் செயல் படும் என எவரேனும் உத்தரவாதம் அளித் திட முடியுமா? இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்த செய்தி சில நாளிதழ்களின் இணையதள பதிப்பில் வெளிவந்தபோது, அது குறித்து சில வாசகர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஆண்கள் உரிமைகள் இயக்கத்தைச் சார்ந்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அபினவ் என்பவர், ஒரு நடுத்தர அளவிலான நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில், தன்னால் இத்தகைய தொரு கூடுதல் சுமையை ஏற்க முடியாது.
எனவே, தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைத்து பெண் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்திட தான் திட்டமிட்டு வரு வதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார் (டிஎன்ஏ, 27 பிப்ரவரி, இணையதள பதிப்பு).சொல்லப் போனால், இச்சட்டமானது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக, சிறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திடக் கூடும். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்க ளுக்கு எதிரான சட்டம் மட்டுமின்றி, தொழி லாளியாக பெண்ணின் உரிமைகளை நிலை நிறுத்தும் சட்டங்களும் அவர்களை கட்டுப் படுத்தும் என்பதால் மேற்கூறப்பட்ட அபினவ் போன்ற எண்ணம் கொண்டோர் பெண் களை பணியிலமர்த்திட மறுக்கக் கூடும். இவற்றையெல்லாம் தாண்டி பணியிடத்தில் புகார் குழு அமைக்கப்பட்டாலும், புகாரை நிரூ பிப்பதற்கான நடைமுறையும், அவ்வாறு நிரூ பிக்கப்பட முடியாதபோது அளிக்கப்படும் தண்டனையும் பாதிப்பிற்கு ஆளாகும் பெண்கள் புகார் அளித்திட முன்வருவதனை தடுத்துவிடும்.
இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், சிறு நிறுவனங்களில் அல்லது ஒப்பந்த முறையில் பெண்கள் பணியமர்த்தப் படும் இடங்களில், அவர்கள் புகார் கொடுத்த உடனே அவர்களது முதலாளிகளால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதனை தடுத்திட இச்சட்டத்தில் வழிவகை எதுவும் இல்லை.இவையெல்லாம் இருந்தபோதும் கூட, நடைமுறையில் அனைத்துப் பெண்களும், அவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிடலாம். அவர்கள் பணிபுரியும் பணியிடங்களில் இத்தகைய புகார் கமிட்டிகள் கட்டாயமாக உரு வாக்கப்படுவதனை உறுதி செய்வதே அந்த நடவடிக்கையாகும். இத்தகைய கமிட்டி உருவாக்கப்படவில்லை எனில் அதற்கு தண்டனை அளித்திட இச்சட்டத்தில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணியிடங்களில் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கப் படுவதற்காக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போராடினார்கள் எனில், இத்தகைய கமிட்டிகளால் விசாரிக்கப்படும் புகார் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு அதிக எண்ணிக்கையிலான புகார்கள் விசாரிக்கப்படும்போது, ஒரு புகாரில் கிடைக் கும் வெற்றியானது இதர பெண்களுக்கு நீதி கேட்டு போராடுவதற்கான உத்வேகத்தினை அளித்திடும்.ஒரு சில சம்பவங்களில் சட்டமானது பயனளிக்காமல் போனாலும், அதற்காகப் பெண் கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாக வும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
கல்பனா சர்மா
தமிழாக்கம் : எம்.கிரிஜாநன்றி : ‘தி இந்து’
0 comments:
Post a Comment