மூன்று புகழ்பெற்ற ஆங்கிலம் மற்றும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் மிக மிக உயர்ந்த பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.
புத்தகங்கள் படிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். ஏழு மொழிகள் தெரிந்து வைத்திருந்தார்.
அம்பேத்கர் மனித உரிமைகளுக்கான போராளி.
அவரைப் பொறுத்த வரை மனிதனின் உண்மையான விடுதலை என்பது அரசியல் விடுதலையில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது சமூக, பொருளாதார, பண்பாட்டு விடுதலையிலும் அடங்கியிருக்கிறது.
அவரைப் பொறுத்தவரை அரசு என்பது மனித முன்னேற்றத்தை மேலும் ஒரு நிலைக்கு மேம்படுத்த உதவு வதற்கான ஒரு காரணி மட்டுமே. ஒரு நல்ல அரசு என்பது ஓரினம், மற்றோர் இனத்திற்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தால் அதனைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அளிப்பதை உத்தர வாதப்படுத்துவதேயாகும்.
அம்பேத்கர் ஒரு மிகச்சிறந்த பொருளாதாரவாதியாவார்.
அம்பேத்கர், நிலச்சீர்திருத்தம், விவசாயம் மற்றும் தொழில்மய நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பவைகள் குறித்து தம் கருத்துக் களை வெளிப்படுத்தி இருக்கிறார். தீண்டத்தகாதோரில் பெரும்பகுதி யினர் நிலமற்றவர்களாக அல்லது சிறு, குறு விவசாயிகளாக இருக்கிறார்கள். இவர்களை மேலே தூக்கிவிட வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. தீண்டாமைக்கு ஆளாகியுள்ள நிலமற்ற விவசாயிகளின் பிரச்ச னைக்கான தீர்வு என்பது இந்திய விவசாயப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் படுவதை இன்னும் விரிவாகக் கூற வேண்டுமானால் நாட்டின் பொருளா தாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவதைச் சார்ந்தே இருக் கிறது என்பதை அவர் உணர்ந்தார். அம்பேத்கரின் கூற்றுப்படி, இந்தியாவின் பிற்பட்ட பொருளாதார நிலைக்கு அடிப்படைக் காரணம், நில உறவு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தாமதம் செய்வதே என்பதாகும். இதற்கு உண்மையான தீர்வு, பொருளாதாரக் கட்டமைப்பு, உற்பத்தித் திறன் மற்றும் கிராமப்பொருளா தாரத்தை முற்றிலுமாக மாற்றியமைத் தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜன நாயகக் கூட்டாட்சி முறையை செயல் படுத்துவதேயாகும். பொருளாதாரச் சுரண்டலையும், சமூக அநீதியையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதை அது குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்து மதத்தில் உள்ள சாஸ்திரங் கள் அனைத்தும் அநேகமாக பிராம ணர்களின் உருவாக்கமே என்று அம் பேத்கர் குறிப்பிட்டார். பிராமணர்களது குறிக்கோள் தங்கள் உயர்சாதித் தன் மையையும், உரிமைகளையும் என் றென்றைக்கும் தக்க வைத்துக் கொள் வது என்பதேயாகும்.
சாஸ்திரங்கள் அனைத்தையும் சட்டரீதியாகத் தடை செய்திட வேண்டும் என்று அவர் உறுதியான கருத்தைக் கொண்டிருந் தார். புராணங்கள் மற்றும் சாஸ்திரங் களைப் பொறுத்தவரை, பிராமணர்கள், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஏழைகளையும், எழுத்தறிவற்றவர் களையும், மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கும் இந்துக்களையும் முட்டாள் களாகவே வைத்திருக்கவும், வசியப் படுத்தவும், ஏமாற்றி மோசடி செய்தி டவும் ஏற்படுத்தப்பட்டவை என்று அம்பேத்கர் கருதினார்.
சுதந்திர இந்தியாவின் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கு வதில் அம்பேத்கர் ஆற்றிய கடின மான பணி மிகவும் போற்றுதலுக் குரியது. குறிப்பாக அவரது சட்ட நுணுக்கம், சோர்வில்லாத செயல் பாடு, அளப்பரிய திறமை, உருக்கு போன்ற உறுதியுடன் அரசியலமைப் புச் சட்டத்தின் வரைவுக்குழுத் தலை வராக செயல்பட்டதை மறந்துவிட முடியாது. தீண்டத் தகாதோருக்கு சுயராஜ் யம் என்பது என்னவாக இருக்கும்? என்று அம்பேத்கர் கேள்வியும் கேட்டு, ‘‘ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளா மல் இருப்பதோடு மட்டுமல்லாமல், சட்டமன்றங்களும் அவர்கள்பால் அசிரத்தையாக இருந்திடும். ஆட்சி யாளர்களும் அவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வார்கள். எனவே, சுயராஜ்ஜியத்தில் தீண்டத் தகாதவர்கள், இந்து சமூகம் விதித் துள்ள இழிநிலையிலிருந்து தப்பித் திட வழியே இல்லை.’’ என்று பதிலும் அளித்தார். அம்பேத்கர், தன்னுடைய ‘‘அரசு களும் சிறுபான்மையினரும்’’ என்ற நூலில் பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாது, அடிப்படை உரிமைகள் மட்டும் இருப்பதால் சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை
நாடாளுமன்ற ஜனநாயகத்தாலேயே பொருளாதார லட்சியத்தை எய்திட முடியாது என்று கூறியிருக்கிறார். சாதி அழித்தொழிப்பு என்ற புத்த கத்தில் அம்பேத்கர், சாதிய உணர்வு முறை அனைத்துப் பொருளாதார வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக் கிறது என்று கூறியுள்ளார். வேளாண் மைக்கும், இதர நடவடிக்கைகளுக் கும் கூட்டாகச் செயல்படுவதற்கு இது தீங்கு விளைவிக்கும் சூழ்நிலை களை உருவாக்குகிறது, சாதிய உறவு கள் வலுவாக இருக்கும் காரணத்தால் கிராமப்புற வளர்ச்சி சோசலிசத் தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் என்றார்.
எனவே சாதியத்தின் அடிப் படையில் அமைந்துள்ள பெரிய அள விலான நிலப்பிரபுத்துவ எஸ்டேட்டு கள் தகர்க்கப்பட வேண்டும், உழுப வனுக்கே நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டுமே வேகமாக முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ற வகையில், அப்போதுதான் அவர் களால் ஒன்றிணைந்து கூட்டாகப் பயிர் செய்திட முடியும் என்று அம் பேத்கர் கூறினார். காங்கிரஸ் குறித்தும், காந்தியம் குறித்துமே அம்பேத்கர் சரியான நிலை எடுத்துள்ளார். காங்கிரசும், காந்தியும் என்கிற தன்னுடைய நூலில் அம்பேத் கர், ‘‘காந்தியம் வசதி படைத்தவர்கள் மற்றும் சொகுசு வர்க்கத்தாரின் சித்தாந்தமாகும். அது வாழ்வின் அவலநிலையைக் கூட மிகச் சிறந்த நல்லதிர்ஷ்டங்களாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களுக் குத் தவறாக வழிகாட்டுகிறது. காந்தி யம் தெருக் கூட்டும் முறையைக் கூடச் சமூகத்தின் உன்னதமான பணி என்று கூறி அதனை மிகவும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது’’ என்று குறிப்பிட்டிருக் கிறார்.
தரிசு நிலங்களை விவசாயத்திற் காகக் கையகப்படுத்தி அவற்றை நில மற்ற விவசாயத் தொழிலாளர்களுக் குக் கொடுப்பதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அம்பேத் கர் கூறினார். அனைவருக்கும் கொடுப்பதற்கு நிலம் எங்கே இருக்கிறது என்று கேட் பவர்களுக்கும் அம்பேத்கர் பதில் சொல்கிறார். ‘‘நான் சோவியத் அமைப்பு முறையை சிறந்ததெனத் தேர்ந்தெடுக் கிறேன். நம்முடைய அவலநிலையை அகற்றுவதற்கு ஒரே வழி கூட்டுப் பண்ணை விவசாயம்தான், என் கருத்துப்படி சோவியத் நாட்டில் உள்ள விவசாய முறை சிறந்தது,’’ என்கிறார்.
அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருக்கும் தலித்து கள் வாழ்வின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், இந்திய அர சியலமைப்புச் சட்டத்தை உருவாக்கு வதிலும் பங்கேற்று அந்தச் சட்டத் திலே மனிதனுக்கு மனிதன் சமம் என்ற வகையில் சாதியால், மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள், சட்ட ரீதியாக நிவாரணம் கிடைக்கப் போராடலாம் என்று பதிவு செய்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதையெல்லாம் பாராட்டுகிற அதே நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பகுதி இன் றும் ஏட்டளவிலேதான் இருக்கிறதே யொழிய, நாட்டில் பெருமளவில் நடைமுறையில் இல்லை என்பதும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.இந்து மதம், எங்கள் மதம் என்று, இந்தியர்கள் என்று வேதாந்தம் பேசும் அத்வானி வகையறாக்கள், சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக் கும் தலித்துகளை இந்துக்கள் என்று கணக்கில் கொள்வதில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு அளவிற்கு உள்ள தலித்துகளில் பெரும்பகுதியினர் இந்துக்கள்தான் என்பதைக் கணக்கில் கொள்ளும்போது, இந்து மதவெறியர்களான பாஜக/ஆர்எஸ்எஸ்-காரர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக மட்டுமல்ல, இந்து மதத்திலேயே ஐந்தில் ஒரு பகுதியினராக இருக்கக்கூடிய தலித்துகளுக்கும் எதிரானவர்கள் என்பது வெள்ளிடை மலை.
தலித்துகளுக்கு எதிரான கொடு மைகள் நாடு முழுவதும் இன்றும் தொடர்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில், தலித் சிறுவன் ஒரு வன் உயர்சாதியினர் வளர்த்த நாயைக் கல்லால் அடித்தான் என்பதற்காக, அவன் வசித்த கிராமத்தையே உயர் சாதியினர் அடித்து நொறுக்கியுள் ளார்கள். இதேபோன்று தூத்துக்குடி மாவட் டத்தில் ஒரு கிராமத்தில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருப்பதையும் முன்பு நாம் குறிப்பிட்டிருக்கிறோம். சமீபத் தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞரை, வஞ்சக மாக வரவழைத்து, கொடூரமான முறையில் சாதி வெறியர்கள் கொன் றுள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் தலித்துகள் கிராமங்களையே சாதி வெறியர்கள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இவ்வாறு தலித்துகள் மீது தாக்கு தல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில் ராமதாஸ் போன்ற வர்கள் என்ன செய்கிறார்கள்? சாதி வெறியைத் தூண்டுகிற விதத்தில் தீண்டாமையை நியாயப் படுத்தக்கூடிய வகையில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். தலித் ஆண் கள், பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற் படுத்தப்பட்ட/முன்னேறிய சாதியைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்யக் கூடாதாம். ஆனால் அதே சமயத்தில் மேல் சாதி ஆண்கள், கீழ் சாதிப் பெண்களை எது வேண்டு மானாலும் செய்யலாம். சதுர்வர்ணம் எனப்படும் நால்வர் ணம் இதைத்தான் சொல்கிறது. அதா வது, கீழ் சாதி ஆண்கள், மேல் சாதி பெண்களுடன் உறவு கொண்டால் அது கடுமையான குற்றம். இதைத் தான் இப்போது ராமதாஸ் வேறுவித மாகக் கூறிக்கொண்டிருக்கிறார். தனது சாதி என்று மட்டும் சொன்னால் எடு படாது என்பதற்காக பிற்படுத்தப்பட்ட /மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புக்களை சேர்த்துக்கொண்டு தலித்துகளுக்கு எதிராக இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவ் வாறு இவர் தலித்துகளுக்கு எதிராக சாதி வெறியைக் கிளப்புகிறார் என்பது மட்டுமல்ல, இவ்வாறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு அடிப்படையாக இருக்கும் பிராமணீயத்திற்கும், அதற்கு அடிப் படையாக இருக்கும் மனு(அ)தர்மத் திற்கும் வக்காலத்து வாங்குகிறார். அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சாதியத்திற்கு எதிராக, சதுர்வர்ணத்திற்கு எதிராக, அம்பேத்கர், ஜோதி பாபுலே, நாராயணகுரு, தந்தை பெரியார் போன்றவர்கள் மேற்கொண்ட இயக்கங்களை எல்லாம் புறந்தள்ளக் கூடிய விதத்தில் பாஜக/ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் வட இந்தியாவிலும், ராமதாஸ் போன்றவர்கள் தமிழகத் திலும் முன்வந்திருக்கிறார்கள். இவர் களின் இத்தகைய மதவெறி, சாதி வெறிப் பிரச்சாரங்களை முறியடிக் கக்கூடிய விதத்தில் அம்பேத்கரின் பிறந்த தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போம்.
(இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினம்) கே. வரதராசன்
0 comments:
Post a Comment