ப்ரிசம் - என்ற வார்த்தைக்கு அறிவியல் ரீதியான பொருள் - வெள்ளை சூரிய ஒளியில் இருந்து, 7 வண்ணங்களை பிரித்து வழங்குவதாகும். முக்கோண வடிவிலான அந்தக் கருவியைப் போலவே, இதுவும் ஆச்சர்யமூட்டும் திட்டம்தான். ஆனால், இது உங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்கானிக்கும்.
அமெரிக்காவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட அலுவலகம் - இங்குதான் நம் ஒவ்வொருவர் நடத்திய அந்தரங்க உரையாடல்களும் தொகுக்கப்படுகின்றன.
24 மணி நேரமும், மாதம் ரூ.20 லட்சம் டாலர் சம்பளத்தில் சில நூறு இளைஞர்கள் இந்த தகவல்களையெல்லாம் திரட்டி தங்கள் அதிகாரிகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மேலும், இந்த திட்டம் தானியங்கி முறையில் செயல்படும். உதாரணமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையில் அமர்ந்துகொண்டு ஒருத்தர் கம்யூனிஸ்டுகளின் தகவல் தொடர்பை படிக்க விரும்பினால் - கம்யூனிஸ்டுகள் அடிக்கடி பயன்படுத்தும் ஏதாவது ஒரு வார்த்தையை உள்ளீடாகக் கொடுத்தால் போதும். உலகம் முழுவதும் அதுகுறித்து நடக்கும் எல்லா கடிதப் போக்குவரத்தும் திரட்டி வழங்கப்படும்.
மிக ரகசியமான அரசாங்க தகவல்களை திருட - ப்ரிசம் வேறு வழிகளைக் கையாள்கிறது. அந்த அலுவலகத்திற்கு எப்படியாவது ஒரு வகையில் ‘பக்ஸ்’ எனப்படும் ஸ்பை கருவிகளை அனுப்புகிறது. அல்லது பக்ஸ் கொண்ட மென்பொருட்களை அனுப்புகிறது.
இப்படி குறுக்கீட்டு வசதிகளைப் பயன்படுத்தி - எந்தவொரு நாட்டின் ஆவணங்களையும், எந்தத் தனி நபரின் உரையாடல்களையும், வீடியோ பதிவுகளையும், கிரெடிட் கார்ட் செலவுக் கணக்குகளையும் கண்கானிக்கலாம். - மிகப்பெரிய பலசாலி நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்காவும், பிரிட்டனும் - உலகின் ஒவ்வொரு குடிமகனின் மீதும் கண்வைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தகவல்களை வெளிகொணர்ந்த எட்வர்ட் ஸ்னோடன் குறிப்பிட்டதைப் போல “நாம் என்ன செய்தாலும், அதை இன்னொருத்தர் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் உலகில் வாழ்வது எத்தனை கொடுமையானது?” இந்த உலகை இப்படி மாற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகவாதிகள் என்பது எத்தனை கேலிக்கூத்து!.
சிந்தன் ரா
(தொடரும்)
அடுத்த பதிவு: ஆம், தகவல்களை விற்றோம் - பேஸ்புக், மைக்ரோசாப்ட் ஒப்புதல் ... - 4

உங்களின் எல்லா தகவல் தொடர்புகளையும் அது ஒரே கோப்பாக ஆக்கிவிடுகிறது |

This is virtual imperialism!!! Even
ReplyDeleteToday's Hindu carries a news item on this. It says data on 18000 to 19000 users have been requested by US authorities.
http://www.thehindu.com/news/international/facebook-microsoft-reveal-security-data-requests/article4816994.ece
இதெல்லாம் எப்ப தான் முடிவுக்கு வரும். நாம எப்ப பாதுகாப்பா உணர முடியுமோ
ReplyDeleteதொழில் நுட்பமும், பிரைவசியும் எதிரெதிராக செயல் படுபவை.
ReplyDeleteபிரைவசி வேண்டுமென்றால், உங்கள் தகவல் பரிமாற்றங்களை எலக்ட்ரானிக் அல்லாத சாதனங்களைக் கொண்டு அனுப்பலாம்.
பழைய முறை தபால், நல்ல உதாரணம்.