ஒரு பத்திரிக்கையில் வெளியாகியிருந்த கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?
தாலியைக் கழற்றி எரிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு என 3 இல் ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி - நாசூக்கான முறையில் தாலியைக் கட்டாத பெண்குறித்த விமர்சனத்தை உள்ளடக்கி இருந்தது. எனவே அது வெறுப்போ, ஆணவமோ, ஆத்திரமோ அல்ல என்று பொருள்படும் வகையில் - அறிவின் அடையாள என்று பதில் சொல்லியிருந்தார் அந்த எழுத்தாளர். ஆனால், பதிலை மட்டும் வைத்துக்கொண்டு, தாலி கட்டிக் கொண்டால் அறிவில்லையா? என்றும், பதில் சொன்னவரின் மதத்தை வைத்து அதனை திரிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டனர்.
தாலியைக் கழற்றி எரிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு என 3 இல் ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி - நாசூக்கான முறையில் தாலியைக் கட்டாத பெண்குறித்த விமர்சனத்தை உள்ளடக்கி இருந்தது. எனவே அது வெறுப்போ, ஆணவமோ, ஆத்திரமோ அல்ல என்று பொருள்படும் வகையில் - அறிவின் அடையாள என்று பதில் சொல்லியிருந்தார் அந்த எழுத்தாளர். ஆனால், பதிலை மட்டும் வைத்துக்கொண்டு, தாலி கட்டிக் கொண்டால் அறிவில்லையா? என்றும், பதில் சொன்னவரின் மதத்தை வைத்து அதனை திரிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டனர்.
அந்தச் சூழலில் சில நல்ல அனுபவங்களும், விவாதங்களும் வெளிப்பட்டன ... முகநூலில் ப்ரியா தம்பி வெளியிட்டிருந்த பதிவை தருகிறோம்.
-----
கல்லூரியில் படிக்கும்போது, நாகர்கோயில் வேப்பமூடு ஜங்ஷன் அருகே கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தேன். உடன்படித்த மாணவர்களும், சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் அந்த வழியாக செல்லும் ஒரு பெண்ணை ‘’ஷிப்ட்’’ என கிண்டல் செய்து சிரிப்பார்கள்… எப்போதும் சிரித்தபடி இருக்கும் அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்… ‘’ஷிப்ட்’’க்கு அர்த்தம் கேட்டபோது, அந்தப் பெண் ஒரு பாலியல் தொழிலாளி என டியூட்டர் தான் புரிய வைத்தார்…
அதன்பிறகு அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்தால் பேச ஆரம்பித்தேன்… அவருக்கு கணவரும், மூன்று குழந்தைகளும் உண்டென்றும், கணவருக்கு மட்டும் தன்னுடைய தொழில் தெரியும் என்றும் சொன்னார்… அங்கிருந்து நான்கைந்து கிலோமீட்டர் தூரத்தில் தான் அந்தப் பெண்ணின் வீடு என்பதால் மறைக்கவும் வாய்ப்பில்லை…
அந்தக் கணவனின் ஒரே கோரிக்கை…. வேறு ஆண்களோடு இருக்கும்போது மனைவி தாலியைக் கழட்டி விட வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது… அவர் மனைவியா இன்னொருத்தர் கூட எதுவும் பண்ணக் கூடாதாமாம்…… அந்தப் பெண் கணவன் சொன்னதை தவறாமல் கடைப்பிடித்தாலும் கூட, இதை என்னிடம் சொல்லும்போது புருஷனை அர்ச்சனை செய்த வார்த்தைகளை இங்கே எழுதுவது ரொம்ப கஷ்டம்…
இப்பவும் சொல்லுங்க… தாலி ரொம்ப புனிதம் தான்…
இரண்டாயிரத்து எட்டு புத்தாண்டு அன்று நான் கணவரோடு மாமல்லபுரம் சென்றேன்.. திட்டமிடாத பயணம் என்பதால், தங்க இடம் கிடைக்கவில்லை. சாதாரண ஹோட்டல் ஒன்றில் தங்கினோம்.. இரவு பன்னிரண்டு மணிக்கு போலீஸ் வந்து கதவைத் தட்டினார்கள்.. நாங்கள் யார் கணவன் மனைவி என்று சொன்னதும், ‘’எங்கே கழுத்தில் தாலியைக் காணோம்’’ என்றுதான் அவர் கேட்டார்..
மீடியாவில் இருப்பதால் இதுபோன்ற ஆட்களை சிரமமில்லாமல் எதிர்கொள்ள முடிகிறது.. நான் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொன்னால், ‘’அது எப்படி அப்படி ஒரு கல்யாணம்?’’ என்று அவர் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்.. இதுபோன்ற தொல்லைகள் வரும் என ஊகித்து எங்கள் திருமணப் பதிவு சான்றிதழை எடுத்து வைத்திருந்ததால், சிறப்பு திருமணச் சட்டம் பற்றி அவருக்கு வகுப்பெடுக்க… அப்படித்தான் அந்த புதுவருடம் ஆரம்பித்தது…
திருமணம் பற்றி விளக்கம் கிடைத்ததும், அவர் கேட்ட அடுத்த பிரமாதமான கேள்வி, ‘’கல்யாணம் ஆயிடுச்சில்ல, அப்புறம் எதுக்கு ஸ்கர்ட் போட்டிருக்கீங்க?’’ என்பதாக இருந்தது.. இன்றைக்கு போல் அல்லாமல், அன்று எனக்கு நிறைய பொறுமை இருந்ததால் அந்த கேள்விக்கு சிரிக்க முடிந்தது… கழுத்தில் இருக்கிற இத்துனூண்டு மேட்டர் தான் ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது என்றால் காமெடியா இல்லியா?
இப்போதும் மகளோடு செல்லும் எல்லாப் பயணங்களிலும், பள்ளிக் கூடத்தில், வீடு வாடகைக்குப் பார்க்கப் போகும்போது.. என எல்லா இடங்களிலும் கழுத்தில் தாலி? என்கிற கேள்வியை எதிர்கொள்ளத் தான் வேண்டி இருக்கிறது… ஆனாலும் ஒரு இத்துனூண்டு தாலி தான் நான் பெர்ஃபெக்ட் என உங்களுக்கு சொல்லும் என்றால், நான் பெர்ஃபெக்டே இல்லப்பா, ஆளை விடுங்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது…
நாம் எதற்கு செய்கிறோம்? என்றே தெரியாமல் தான் நிறைய விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம்.. அதில் ஒன்றுதால் இந்த தாலியும்... திருமண வாழ்க்கையின் நொச்சுகளில் இருந்து தப்பித்து, தன்னைப் பற்றியும் யோசிக்க பெண்களுக்கு நேரம் இருக்கும் ஒருநாளில் அவர்கள் இதை எதுக்கு அவன் கட்டினான்? என யோசிக்கத் தொடங்குவார்கள்.. தாலியின் உண்மையான அர்த்தம் தெரியும் நாளில் அவளே அதை கழற்றி வீசுவாள்... அட்லீஸ்ட் தன் மகளுக்காவது அதை வேண்டாமென்று சொல்லுவாள்....
அதுவரை ஆண்கள் தயவு செய்து மூடிக்கொண்டு போகலாம்... இங்கு கட்டைப் போடுவதும், அவிழ்ப்பதும் நீங்களாகவே இருக்கின்றீர்கள்.. தவிரவும்... தத்துவம், சித்தாந்தம், இலக்கியம், அரசியல் எல்லாம் தெரிந்த முற்போக்குவாதி என காட்டிக் கொள்ளுபவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்து விட்டது..
தோழி - எழில் அருள் பேஸ்புக்கில் தெரிவித்திருந்த கருத்தை இங்கே பதிவு செய்கிறேன் ...
ReplyDeleteப்ரியா அவர்களின் கருத்துக்கள் எனக்கு சில பழைய நினைவுகளை கொண்டுவந்தது என் அம்மா பழைய தர்மபுரி மாவட்டத்தின் கிராமங்களில் வேலை செய்தவர்...
மிகவும் பின் தங்கிய மாவட்டமான அங்கு பாலியல் தொழில் தான் முக்கியமானதாக இருந்திருக்கிறது காரணம் வேலை வாய்ப்பின்மை,வறுமை..கணவனே சைக்கிளில் மனைவியை கொண்டு விட்டு கூட்டி வருவதை கண்கூடாகப் பார்த்து வருந்தி அறிவுரைகள் கூறியதாகக் கூறுவார்.
இதில் திருமணம் எங்கு நிற்கிறது.... தாலி எங்கு நிற்கிறது...இது போன்ற கருத்துக்களை பேசவே தைரியம் வேண்டியிருக்கிறது... நேற்றே சிலர் தாலி வேண்டாமென்று சொல்பவருக்கு நிறைய லைக்குகள் message -ல் வரும் பரவாயில்லையா என்கிறார்.
indirect மிரட்டல் .பேசலாம்னு நினைக்கும் பெண் கூட எதுக்கு வம்பு எனும் நிலை... நேற்று ஒரு தோழி வருத்தப்பட்டார்...என்னமோ FB வந்தாலே அவள் கணவனுக்கு அடங்காதவள் எனும் நினைப்பு அவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என எண்ணுகிறார்கள்..இன்னம் தாலி வேண்டாம் என்றால்....அதைச் சொல்ல என் மனம் இடம் தரவில்லை...
தாலி வேண்டும் வேண்டாமென்பது தனிப்பட்ட கணவன் மனைவி விருப்பம்.அடுத்தவர் அந்தரங்கத்தினுள் எப்படி நுழையலாம்.... மேலும் ஏதோ பெண்கள் கொஞ்சமாக இப்படியான அடைமைதளைகளிலிருந்து இப்போதுதான் வெளிக்கொண்ர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டிருக்கிறாள் அவளின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள பொறுக்காமல் இப்படியான முட்டுக்கட்டைகள் ...