மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜினமா செய்தார்.

ராஜினமா செய்வதற்கு முன்னர் கட்சித் தலைவரி மம்தா பானர்ஜியிடம்
பேசினேன். அதன் பின்னரே பிரதமரிடம் ராஜினமா கடித்தத்தை அளித்தேன். என்னை தொடர்ந்து எம்.பியாக செயல்பட சொன்னார் மம்தா அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அவர் ஒரு நல்ல தலைவி. அவர் கருத்தை மதிக்கிறேன் ன்றார் தினேஷ் திரிவேதி. ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்குவதற்கு முன், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து தினேஷ் திரிவேதியை ராஜினமா செய்ய நிர்பந்திக்கவே மம்தாவின் தீடிர் டெல்லி பயணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் ராஜிநாமா செய்வது சரியல்ல என இடதுசாரிகள் கூறினர்.
பிரதமர் விளக்கம்
மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியின் ராஜினாமாக் கடிதம் தனக்கு வந்துள்ளதாகவும், அக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் புதிய ரயில்வே அமைச்சர் விரைவில் பொறுப்பு ஏற்பார். என்றும் அவர் ரயில்வே துறையை நவீன மயமாக்கும் திட்டத்தை முன்னெடுத்து செல்வார் என்று பிரதமர் தெரிவித்தார்
0 comments:
Post a Comment