குஜராத் மதவெறி வன் முறையின் போது நரோட்டம் பாட்டியா இனப் படுகொலை சாட்சிகளில் ஒருவரான சமூக ஆர்வலர் மற் றும் காங்கிரஸ் தொண்டர் நதீம் அகமது சயீத் சனிக் கிழமையன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார்.
அவர் காலை 7.35 மணிக்கு ஜுகாபுராவில் வீட்டை விட்டு வெளியே வந்த போது கொல்லப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சயீத்தை அவரது குடும்பத்தினர் பெருநகரம் வி.எஸ்.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதவெறி வன்முறை நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவரான சயீத்துக்கு காவல்துறை பாதுகாப்பு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அளிக்கப்பட்டு இருந்தது. அவர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது பாதுகாப்புக் காவலர்கள் எங்கிருந்தனர் என தெரியவில்லை.
குடும்பத்தினர் கூறுகையில், நதீம் சயீத் தன்னைச் சுற்றி எப்போதும் காவலர்கள் இருப்பதை விரும்பவில்லை. அதனால் அடிக்கடி, காவலர்கள் பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்வார் என்றனர்.
காவல்துறை துணை ஆணையர் என்.சி.படேல் கூறுகையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக நதீம் கொல்லப்பட்டதாக காவல் துறை நம்புகிறது. அவர் சமூக அல்லது தகவல் உரிமை செயல்பாடு அல்லது அரசியல் தொடர்புக் காரணமாக கொல்லப்படவில்லை என்றும் அந்த காவல்துறை அதிகாரி கூறினார்.
உள்ளூர் கட்டுமான நிறுவனர் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர். நரோட்டம் பாட் டியா வழக்கில் அந்த கட்டுமான நிறுவனர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், முறைகேடான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதாகவும் நதீம் சமீபத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு காரணமாக ஆத்திரம் அடைந்த நபர், நதீம் சயீத்தை கொலை செய்து இருக்கலாம் என்றும் காவல் துறை அதிகாரி கூறினார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் நரோட்டம் பாட்டியா வழக்கு தொடர்பாக நதீம் சயீத்தின் அறிக்கையை பதிவு செய்தனர்.
0 comments:
Post a Comment