மாற்று, ஏற்கனவே ஒரு வலைப்பூவாக செயல்பட்டது. அநீதியை ‘மாற்று’, அடிமைத்தனத்தை ‘மாற்று’, ஆதிக்கத்தை ‘மாற்று’, அறியாமையை ’மாற்று’, என்கிற அடிப்படையில் பல்வேறு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டன. இப்போது மாற்று இணையதளம் ஒரு தனி ஊடகமான பரிணமித்திருக்கிறது.நோக்கம், கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கான இதழியல் நெறியுடன், தொழில்நுட்பத்திலும் மாற்றுக் கட்டமைப்பைக் கொண்டு இதை ஒரு இணையதளமாக கட்டமைத்திருக்கிறோம்.
இந்தத் தளத்தில் எவரும், தங்களின் சொந்த படைப்பையோ, தங்கள் நண்பர்களின் பதிவுகளையோ பெற்று சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தக் கட்டுரைகள் வெளியாகும். (கட்டுரைகளில் பிழைகளை குறைக்கவும், வடிவமைப்பை சீர்ப்படுத்தவும் இந்தக் கால இடைவெளி தேவைப்படுகிறது.)
மனித சமூகத்தை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் மாற்று இணையதளம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சமத்துவம், சம நீதி மற்றும் உயர்ந்த மாண்புகளை கொண்ட உலகைப் படைக்க விரும்பும் ஒவ்வொருவரும் எங்கள் நண்பர்களே.
மாற்று, சிந்தனைகளுக்கான விவாதக் களத்தை சீர்ப்படுத்தும் ஒரு ஆசிரியர் குழுவுடன், கட்டற்ற மென்பொருளைக் கட்டமைப்பின் அடிப்படையாகக் கொண்டு தளத்தை இயக்குகிறோம்.
இணையதளப் பயனர் விபரங்களை பல நாடுகள் உளவுக்கு உட்டுபடுத்துவதை நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். இதற்கான தீர்வை முன்வைப்பதில் ’மாற்று’ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். இணையதள ஊடகத்தின் சுதந்திரத்தையும், தனிப் பயனர்களின் அந்தரங்கத்தையும் பாதுகாக்கத் தேவையான தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலும், பரப்புவதிலும், பயிற்சியளிப்பதிலும் மாற்று இணையதளம் ஈடுபடும், இதில் தங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
[ இணைந்து செயல்பட விரும்பும் ஒவ்வொருவரையும், அகன்ற கரங்களோடு வரவேற்கிறோம். - விபரங்களை பதிவு செய்க (Register) ]
புதிய கட்டுரை தொடங்க
புதிய கட்டுரை தொடங்குவதற்கு – மேலே, இடதுபக்கம் அமைந்துள்ள ‘மாற்று’-வை சொடுக்கினால், Dashboard என்று வரும், அதன் கீழ் Post-ல Add New என்பதை தேர்ந்தெடுத்து, கட்டுரையை தொடங்கலாம்.
மாற்றுவில் phonetic (உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் வரும்) இந்த வசதியை பெற ’F12’ ஐ அழுத்தவும்.
நண்பர் வட்டம்:
மாற்று எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே நண்பர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
யார்? யார்? மாற்று இணையதளத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது. நண்பராக இணைந்து விவாதிக்க முடியும்.
எழுதும் முன் கவனிக்க வேண்டியவை:
மாற்று அறிவுச் செல்வம் அனைத்தும் சமூகத்தின் சொத்து என்ற காப்பிலெப்ட் (Copyleft) நடைமுறை கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.
அதனால் மாற்றுவில் இடப்படும் புகைப்படங்கள் உங்களது சொந்த புகைப்படமாக இருக்க வேண்டும் அல்லது ’படைப்பாக்க பொதுமங்களாக’ (Pictures with Creative Commons License) உள்ளவைகளை மட்டும் இடவேண்டும், இதைப் பற்றி மேலும் விபரமாக இதழியல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகங்கள் இருப்பின் மாற்றுவிற்கு மின்னஞ்சல் (admin@maattru.com) மூலம் தெரியப்படுத்தவும். உடனடியாக உதவி கிடைக்கும்.
நன்றி……
வாழ்த்துக்கள்……